15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்தக் காணொளிகளால் உந்தப்பட்டு எனக்குத் தெரிந்தே பன்னிரண்டு நண்பர்கள் நான் அறிமுகம் செய்திருக்கும் நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கருணாகரத் தொண்டைமான், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் மாதிரியான ஆய்வு நூல்கள் குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர். உள்ளபடியே இந்த நூல் அறிமுகங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஒருசில நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் முன்பு எப்போதோ வாசித்து நினைவிலிருந்து மீள்கிற நூல்களாக இருக்கின்றன. இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்கள் என முன்னரே அறிவித்துவிட்டேன். ஒரேயொரு பிரச்சினை இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன் என்பதுதான்! கவிதைத் தொகுப்புகளை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் அறிமுகம் செய்வது அவற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்காது என்ற எண்ணத்தினாலேயே கவிதைத் தொகுப்புகளை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன். இனிவரும் காணொளிகளில் முயன்று பார்க்க வேண்டும். குறைந்தது கவிதைகள் குறித்த நூல்களையாவது அறிமுகம் செய்ய வேண்டும். எது எப்படி இருப்பினும் இந்தச் செயல் மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது. அதேநேரம் சேனல் தொடங்கிய நோக்கம் இதுவல்லவே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் இந்த காணொளி வரிசை நிறைவுற்றதும் மீண்டும் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த காணொளிகளை புதுமைப்பித்தனிலிருந்து தொடருவேன். இதுவரை அறிமுகம் செய்த காணொளிகளின் சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.
1.நாரத ராமாயணம் – புதுமைப்பித்தன்
2.கருணாகரத் தொண்டைமான் – குடவாயில் பாலசுப்ரமணியன்
3.கடுகு வாங்கி வந்தவள் – பி.வி.பாரதி(தமிழில் – கே.நல்லதம்பி)
4.காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக்(தமிழில் – கே.நல்லதம்பி)
5.பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)
6.எம்ஜிஆர் கொலைவழக்கு – ஷோபாசக்தி
7.மணல் – அசோகமித்திரன்
8.மிக்காபெரிசம் – சிவானந்தம் நீலகண்டன்
9.சடங்கில் கரைந்த கலைகள் – அ.கா.பெருமாள்
10.விருந்து – கே.என்.செந்தில்
11.விசும்பு – ஜெயமோகன்
12.வீடியோ மாரியம்மன் – இமையம்
13.ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் – ராஜ் கௌதமன்
14.நானும் ஒருவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
15.நிழலின் தனிமை – தேவிபாரதி
Leave a Reply