Category ஆளுமைகள்

நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

1மௌனியைப் பற்றி எந்தவொரு கூற்றையும் புதுமைப்பித்தன் மௌனி பற்றி சொன்ன இந்தக் கருத்தினை ஏற்றோ மறுத்தோதான் சொல்ல வேண்டியிருக்கிறது. “தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரை சொல்லவேண்டும். அவரை தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துக்களை மடக்கிக்… Continue Reading →

புதுமைப்பித்தன் எனும் அறிவன் – விமர்சனம்

1மனித வரலாற்றின் கதையை பல்வேறு வகையான ஊகங்கள் முடிவுகள் வழியாக ஒத்திசைந்து மிகுந்ததாக கற்பனை செய்ய வரலாற்று ஆசிரியர்களும் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் முயன்று கொண்டே இருக்கின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முறைமைகள் வழியாக மிகச் சரியான முடிவினை நோக்கிச் செல்ல முயல்வதன் வழியாகவும் இலக்கியவாதி உள்ளுணர்வினை நம்பிச் செய்யும் கற்பனைகள் வழியாகவும் அரசியல்வாதி அதிகார நோக்கிலான ஒற்றைமயப்படுத்துதல்… Continue Reading →

புதுமைப்பித்தன் எனும் அறிவன் (உரை காணொளி)

புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் ‌செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால்… Continue Reading →

இலக்கிய முன்னோடிகள் என்னும் ‘தேறாத கேஸ்கள்’

  அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’, ‘புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)’ என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில்… Continue Reading →

காந்தி – உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு

கூச்ச சுபாவம் கொண்ட ஒரு இளைஞன் இங்கிலாந்துக்கு சட்டம் படிப்பதற்காக கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று பிரித்தறிவதற்கு அவனால் இயலவில்லை. ஏறத்தாழ கப்பலில் பட்டினியாகவே பயணிக்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு… Continue Reading →

நீர்ப்பறவைகளின் தியானம் – யுவன் சந்திரசேகர் (நூல் அறிமுகம் – இருபத்தொன்று)

நீர்ப்பறவைகளின் தியானம் – யுவன் சந்திரசேகர் (நூல் அறிமுகம் – இருபத்தொன்று) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #tamilwiki #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் இருபத்தொன்றாவது காணொளி‌. #30days30books நீர்ப்பறைவகளின் தியானம் நூலினைப் பெற https://www.panuval.com/yuvan-chandrasekar/neerparavaigalin-dhyanam-3630716?page=2 யுவன் சந்திரசேகர் – தமிழ் விக்கி… Continue Reading →

அப்பால் உள்ளவை – ஜெயமோகனின் சிறுகதைகளை முன்வைத்து

1 பொதுவாக ஒரு முன்னோடி படைப்பாளியைப்பற்றிப் பேசும்போது அவருடைய தனித்துவமான ‘பங்களிப்பு’ என்று ஒன்றைக் குறிப்பிடுவோம். பின்னாட்களில் ஒரு படைப்பாளி நினைக்கப்படுவதே அந்தப் பங்களிப்பினால்தான். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை விரிவுபடுத்தினார், மௌனி அகவயத் தருணங்களை மொழியில் வசப்படுத்த முயன்றார், சிறுகதை மொழியை நவீனப்படுத்தியதில் ந. பிச்சமூர்த்தியின் பங்களிப்பு அதிகம், அசோகமித்திரன் எளிய சித்தரிப்புகள் ஊடாக குறைந்த சொற்களில்… Continue Reading →

உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை

(எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) 1 தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ் நாவல்களின் வடிவத்தைத் தீர்மானித்ததில் இரண்டு நூல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஒன்று சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்ற நாவல். மற்றொன்று ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்ற தொன்னூறுகள் வரை தமிழில் எழுதப்பட்ட நாவல்களின் பெறுமானத்தை ஆய்வு செய்யும்… Continue Reading →

அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்

(ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான கடிதம்) அன்புடன் ஆசிரியருக்கு சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ‘எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?’ என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அன்று ஏனோ அப்படி சிலரில் ஒருவனாக இருந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியை எனக்குக்… Continue Reading →

ஸ்ரீராம ஜெயம்

  தி.ஜானகிராமனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம், பரதேசி வந்தான், கோயம்புத்தூர் பவபூதி, பஞ்சத்து ஆண்டி, குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது…. Continue Reading →

« Older posts

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑