ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார்க்கும் போது அந்த மகிழ்ச்சி பெருகி இருப்பதாக உணர்கிறேன். “புதுசுல்ல” அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன் போல. கிழக்கு வெளியீடாக என் முதல் நாவலான ஒளிர்நிழல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலை வாங்குவதற்கான… Continue Reading →
உடல் விரித்துப் படுத்திருந்தான் அரிமாதரன். வெட்டுண்ட தழும்புகள் அணி செய்வது போல உடல் முழுக்க பரவியிருந்தன. அரிமாதரன் விழித்த போது இரவில் இசைத்த பாணர்கள் அனைவரும் புறப்பட்டிருந்தனர். எழுந்த கணத்தில் அரிமாதரனுக்கு சுயம் நினைவிலில்லை. தேர்தட்டில் ஆதிரையை பார்த்து நிற்பதும் சவில்யம் சுனதபாங்கம் ஆநிலவாயில் திருமீடம் என நான்கு தேசங்களும் இணைக்கப்பட்டு சுனதம் என்ற ஒற்றை… Continue Reading →
கருமை என்பது முடிவின்மை. மின்னல்களை ஒளித்து வைத்திருக்கும் மேகங்களில் இளங்கருமை. தலைமுறைகளை விதைத்து வைத்திருக்கும் கருவறையின் அடர்கருமை. பேரழகை காட்டி நிற்கிறது இவளின் மென்கருமை. நெளியும் நீள் நாகங்களென சுழல்கின்றன கரங்கள். அசையா நெடுநீள் விழிகளில் அவற்றின் மேலெழுந்த புருவங்களில் கரும்பளிங்கென மின்னும் நெற்றியில் நில்லாது வழிகிறது அவளழகு. மோதிச் சிதறும் சிரங்கள் வழிந்தொழுகும் வெங்குருதி பிளிறிச்… Continue Reading →
புலரியின் முதற்கதிர் மண்ணை அடைந்தபோது புகிந்தத்தின் அரண்மனையைச் சூழ்ந்து கூடாரம் அமைத்திருந்த வன்தோளனின் படைகளுக்கு அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது புரிந்தது. கணபாரரை வன்தோளன் பெருமிதத்துடன் உணர்ந்தான். சவில்யத்தின் பிரதானப்படை முழுவதையும் புகிந்தத்தின் கிழக்கில் விரிந்திருந்த ஆழியை நோக்கி அனுப்பிவிட்டு அங்கிருந்து படைகளின் ஒரு பகுதியை சதுப்புக்காடுகள் வழியாக மேற்கே பொட்டல் நோக்கி அனுப்பியிருந்தார் கணபாரர். ஆதிரை… Continue Reading →
முதல் நாள் அந்தியில் போர் முரசம் முழங்கியபோது முக்கூட்டு நாடுகளின் மையப்படை சவில்யம் நோக்கி முன்னேறி இருந்தது. இரண்டாம் நாள் வன்தோளனை மேலும் முன்னேற விடாமல் தடுத்து வைக்க மட்டுமே சவில்யத்தின் படையினரால் முடிந்தது. மூன்றாம் நாள் போர் தொடங்கியதும் வன்தோளன் தன் அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்தவனாக போரிட்டான். சுனதபாங்கத்தின் காவல் படைகளில் இருந்தும் கிராமங்களில் … Continue Reading →
முரசொலிப்பதற்காக இரு பக்க வீரர்களும் செவி கூர்ந்திருந்தனர். முதல் நிலையில் இருந்தவர்கள் தங்கள் உயிர் பிரிந்து விடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் கொண்டவர்களாக அடுத்த நிலை போர் வீரர்கள் தங்கள் வீரம் வெளிப்படுவதை தங்கள் தளபதிகள் பார்க்க வேண்டும் என்ற கவலை கொண்டவர்களாக அதற்கு அடுத்த நிலை குதிரை வீரர்கள் ஆர்வம் மிகுந்த விழிகளுடன் … Continue Reading →
சுனதபாங்கத்தின் வடக்கெல்லை கடலை சந்திக்கும் துவாரத்தில் விரைந்து கொண்டிருந்தார் கணபாரர். வன்தோளனின் விரைவு சவில்யத்தின் வீரர்களை வியந்து நிற்க வைத்தது. நேர் போரில் அவனே பங்கு பெறுவான் என ஆதிரை எதிர்பார்த்திருக்கவில்லை. புகிந்தத்தில் இருந்து எட்டு காத தூரத்தில் வன்தோளனின் படைகள் நிலைகொண்டன. பொட்டல் வெளியாக கிடந்த வறண்ட நிலங்களில் வீரர்கள் கூடாரம் அமைக்கத் தொடங்கினர்…. Continue Reading →
ஆயுத சாலையில் மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். “தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை நியாயங்களை அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம் மட்டுமே போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும் விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!” அவன் செவிகளில் விறலியின் குரல் கேட்டது…. Continue Reading →
எண்பது வயதிருக்கும் என எண்ணத் தக்க அந்த முதியவனுக்கு உண்மையில் நூறு வயது கடந்திருந்தது. இளமையில் பெரு வீரனாக இருந்தமைக்கான தடங்கள் அவன் உடலில் அழிந்து கொண்டிருந்தன. மதிழ்யம் எனப் பெயர் கொண்ட ஆழிமாநாட்டின் தென்னெல்லை தேசத்தை அவன் அடைந்து மூன்று இரவுகள் கடந்திருந்தன. அன்னையின் தாலாட்டை நோக்கி நகரும் மகவென ஆழியை நோக்கி நடந்து… Continue Reading →
வெங்காற்று வறண்ட மதீமத்தை அழித்து எழுதத் தொடங்கியது. ஆதிரையைக் கூடியவனும் அவன் மேல் விழுந்த பன்றியும் மணலால் உண்ணப்படுவது போல் மறைந்து கொண்டிருந்தனர். ஆதிரை நடந்தாள். விரிந்த கூந்தலும் வெறி மின்னும் விழிகளுமான ஆதிபுரம் நோக்கி நடந்தாள். எதிர் நின்று வரவேற்றார் ஆதிபுரத்தின் தலைவர். “என்னைக் கூடியவன் இறந்தான்” என்றாள் சிவந்த விழிகளில் கனல் தெறிக்க…. Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑