பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாயாட்டு’ என்ற புகழ்பெற்ற மலையாளப்படம் பற்றி எழுதிய கட்டுரையில் அப்படத்தில் தலித் என்ற அடையாளம் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்கும் அரசியல் உத்தியாக மட்டுமே மாறிப்போயிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இருப்பார். இத்தனைக்கும் அதிகாரம் செயல்படும் விதம் குறித்து மிகக்கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கும் படம் அது. படத்தின் முடிவில் ‘பலிகடா’ ஆவதும் ஒரு தலித்தான். ஆனால்… Continue Reading →
1 அப்பா இதையெல்லாம் விரும்பி இருக்கமாட்டார். அப்பா இறக்கும்வரை தன் இந்து மத நம்பிக்கைகளைக் கைவிடவில்லை. ஆனால் அம்மா அவ்வளவு ‘கிறிஸ்துவராக’ இருந்தது இல்லை. வீட்டில் எனக்கு எதைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை இருந்தது. ஆனால் நான் எதையுமே தேர்வு செய்யவில்லை. என் விருப்பம் மொழியில்தான் இருந்தது. மொழியென்றால் பேச்சுமொழி, நிரல் மொழி இரண்டிலும்! அப்பாவுக்கு முன்னதில்தான்… Continue Reading →
நேற்று அஞ்சனாவின் பிறந்தநாள். அவளுக்குப் பரிசாக அளிக்க என்னிடம் சொற்கள்தான் உள்ளன. அஞ்சனம் என்றால் கண்களை துலக்கமாகக் காட்டும் மை. இக்கவிதைகள் அவளுக்கு அஞ்சனம். 1 கொழுப்பு பாப்பாக்குட்டி பட்டுக்குட்டி பன்னிக்குட்டி குல்கந்து குட்டி என்றெல்லாம் குழந்தையைக் கொஞ்சியவன் எல்லாவற்றிலும் ‘குட்டி’ சேர்த்துக் கொள்கிறான் டிஃபன் குட்டி சோபாக்குட்டி ஆஃபீஸ் குட்டி இறுதியாக எதையோ தீவிரமாக… Continue Reading →
தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு – பின்னம் விழாமல் இழுக்கப்பட்டுவரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கின்றது. இல்லை – இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டுகொண்டே வருகிறது. இன்று –… Continue Reading →
1 இத்தளத்தின் நோக்கம் என்ன? நான் ஏற்கனவே sureshezhuthu.blogspot.in என்ற பெயரில் ஒரு வலைப்பூவில் அவ்வப்போது எழுதுகிறேன். அவ்வப்போது வாசிக்கும் நூல்கள் குறித்த குறிப்புகளையும் பொதுவான விஷயங்கள் பற்றியும் என் பேஸ்புக் பக்கத்திலும் வாட்ஸ்அப் சேனலிலும் எழுதுகிறேன். அப்படி இருக்க இப்படியொரு தளத்தின் தேவை என்ன? வலைப்பூவைவிட சற்றுக் கூடுதல் வசதிகள் வலைதளத்தில் உண்டு. அதோடு… Continue Reading →
(இங்கு நான் எழுதப் போவது புதிது இல்லை. எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயத்தை ஒருமுறை நினைவூட்டுவதற்காக இந்தக் குறிப்பு) சில நாட்களுக்கு முன்பு ஒரு காலைப் பொழுதில் வீட்டு மாடியில் இருந்து விரைவாக இறங்கினேன். போர்ட்டிக்கோவில் கிடந்த ஒரு நீளிருக்கையில் முட்டையிட அமர்ந்திருந்த பெட்டைக்கோழி என் காலடிச் சத்தம் கேட்டு பதறி எழுந்தது. எனக்கு குற்றவுணர்வாக… Continue Reading →
15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் ‘முப்பது நாட்கள் முப்பது நூல்கள்’ வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள்… Continue Reading →
தனிமனிதர்களுக்கு அறவுணர்வு என்று ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் நாம் ‘தனிமனிதன்’ என்று அழைப்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி? உண்மையில் தனிமனிதர் என்பவர் உலகின் சிறுபான்மை இனம்தான். மற்ற அனைவரும் சராசரிகளே. இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட சராசரியில் ஒருவராக இருக்கலாம். சராசரி என்று மனிதர்களை அடையாளப்படுத்துவதைவிட… Continue Reading →
அறையில் இரண்டு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் முள்துடிப்பு விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண் விழித்தது மாடி அறை என்பதால் வாகனங்களின் எஞ்ஜின் சத்தம் மெல்லக் கேட்டது. மனம் இத்தனை சத்தங்களில் இருந்தும் ஏதோவொன்றை உருவி எடுத்துவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் எதற்குமே எதிர்வினை புரியவில்லை அது. சில கணங்கள்தான். மீண்டும் அத்தனை கவலைகளும்… Continue Reading →
மாறுதிசை மின்னோட்டம் (alternating current). பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் சொல்லக்கேட்ட இப்பதம் என் வாழ்வின் முதல் தத்துவக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பும்போது மனதிலொரு இன்பக்கொதிப்பு இருக்குமில்லையா? காதலிக்கும் பெண் என்ன செய்தி அனுப்பி இருப்பாள் என்று எழுந்ததும் அலைபேசியைப் பார்ப்பதற்கும் இடையிலான சிலநொடிகளில் விரல்நுனிகளில்… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑