கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். ‘மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?’ ‘தினமும் தலைக்கு ஊத்திக்கணும்… Continue Reading →
திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது. சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்… Continue Reading →
‘அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்’ என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா ‘விடுடி அவன’ என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம்… Continue Reading →
டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன். பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி ‘வெஸ்டிபியூல்’ என்றான். ‘என்னது?’ பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன்…. Continue Reading →
1 “உண்மையாகவா?” “ஆமாம்” “என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் நம் தேசத்தைக் கடந்து உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் சென்றதில்லையா?” “இந்த குற்றத்துக்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று நம்புகிறேன்” “விளையாடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சாயமணிந்த உதடுகளைத் திறந்து பளீரென்றிருக்கும் வெண்ணிற பற்கள் தெரியும்படி விரிந்த கண்கள் சற்றே சுருங்கும்படி எங்கள் வெளியுறவுத்துறை… Continue Reading →
நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை…. Continue Reading →
1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய… Continue Reading →
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம் வேலைக்குக் கூப்பிடச் செய்வதற்கென சில நளினங்களை அமுதா சொல்லிக் கொடுத்ததற்குப் பிரதிபலனாக அபிராமி தனக்கு வாங்கியிருந்த பாட்டிலிலிருந்து அமுதாவுக்கு ஊற்றிக் கொடுத்தாள்…. Continue Reading →
சுசித்ராவிடம் இரண்டு ஜோடி காலணிகள் உள்ளன. ஒன்று நேரடியாக செருப்பின் அடிமுனையில் இருந்து கால்களை நுழைத்து போட்டுக்கொள்வது. அந்தக் காலணிகள் வெண்மையும் மஞ்சளும் கலந்தது போன்ற நிறத்திலானவை. அடிப்பகுதிக்கு சற்று மேலிருந்து கட்டைவிரலையும் மற்ற விரல்களையும் பிரிக்கும் இடத்துக்கு இரண்டுபக்க வார்களும் வந்துசேரும். அவ்விடத்தில் சிறிய கருநிற பளிங்கால் செய்யப்பட்ட ஒரு மூன்றிதழ் பூ பளபளக்கும்…. Continue Reading →
களிமண்ணை குழைத்து கொட்டாங்குச்சியில் போட்டு கருவை இலைகளைத் தூவி கூட்டாஞ்சோறு தயாராகிவிட்டது. எண்ணெய் சீந்தாத தலையின் செம்பட்டை முடிகள் முன் வந்து விழ புறங்கையால் முடியை ஒதுக்கி மேலேற்றுகிறாள் மாலதி. சமையல் தயாரான திருப்தியில் மாதேஸ்வரனை ஏறிடுகிறாள். முதல் பிடியை கொட்டாங்குச்சியில் இருந்து கிள்ளி எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறாள். ஏந்தலுக்காக இடது கையால்… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑