காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை எழுத்தாளர் இராசேந்திர சோழன் கடந்த மார்ச் 1 (2024) அன்று காலமானார். பொதுவாக ஒரு படைப்பாளியின் மறைவை ஒட்டி அவர் சார்ந்து பகிரப்படும் நினைவுகள், அவர் படைப்புகளை மதிப்பிட்டு வெளியிடப்படும் கட்டுரைகள் முக்கியமானவை. முதல் வகை எழுத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்த புரிதலை உருவாக்குவதன் வழியாக வாசகர்கள் அவரை… Continue Reading →
இதுவொரு சுயபரிசோதனைக் குறிப்பு. இணைய ஊடகங்களின் பெருக்கம் இலக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது என்ற வகையிலான உரையாடல்களை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பார்க்க நேரிடுகிறது. அவ்வுரையாடல்கள் தொழில்நுட்பரீதியான மாற்றங்கள் குறித்துத்தான் அதிகமும் அக்கறை கொள்கின்றனவே தவிர இலக்கிய வாசிப்பு, ரசனை, வாசகனில் படைப்பு உண்டாக்கும் தாக்கம் போன்ற சங்கதிகள் குறித்து அதிகமும் அக்கறை கொள்வதாகத்… Continue Reading →
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். ‘மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?’ ‘தினமும் தலைக்கு ஊத்திக்கணும்… Continue Reading →
இரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன். பேஸ்புக்கில் நடந்த ‘என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை’ சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு… Continue Reading →
(முந்தைய பதிவு) எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக… Continue Reading →
உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும். நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும்… Continue Reading →
விஜய்குமார் சம்மங்கரையின் ‘மிருக மோட்சம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு அத்தொகுப்பின் உணர்வுத் தளத்தை பிரதிபலிப்பது அரிதாகவே நிகழும். நாமாக ஒரு உணர்வுத் தளத்தை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் தன்னளவில் ஒரு தொகுப்பு அப்படி இருக்க முடியாது. ஏனெனில் எழுதத் தொடங்கும்போது வெவ்வேறு வகையான ஆர்வங்களும் அதற்கேற்ற… Continue Reading →
1 எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகளை நான் வாசிக்கத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆகவே முதன்முறை ஒரு படைப்பாளியை கண்டுணர்ந்த எளிய பரவசக் குறிப்பாக அல்லாமல் அவருடைய படைப்புலகம் பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டினை உருவாக்கும் செயலை இக்கட்டுரையின் வழியாக செய்து பார்க்க முயல்கிறேன். ஒரு சிறிய முரணிலிருந்து கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள்… Continue Reading →
(மாகே கஃபே நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை) இந்தியாவில் இந்தியை முதன்மை மொழியாகக் கொள்ளாத மாநிலங்களின் மைய அரசியல் போக்கில் மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதும்கூட இந்திய மக்களின் மொழிசார் போதத்தையே காட்டுகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இந்தியா சுதந்திரம் பெற்ற இந்த முக்கால் நூற்றாண்டுகளில் இந்த மொழிசார் போதம் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும்… Continue Reading →
திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது. சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑