Category எதிர்வினை

சுரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம்: கீரனூர் ஜாகிர்ராஜா

ரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம் கதைகளை வாசித்து முடித்தபோது அவர் புதுப்புது உலகங்களுக்குள் பிரவேசிக்க முயல்கிறார் என்பதை உணர இயன்றது. ‘எனக்கு விதவிதமான கதைகளை எழுதுவதில் ஆர்வம் இருந்ததில்லை. அப்படி ஒரு கட்டாயத்துக்கு உட்படுவதுகூட எழுத்தைச் செயற்கையாக மாற்றிவிடும் என நினைக்கிறேன். ஆனால் இயல்பாக என் கதைகள் இத்தொகுப்பில் வேறுவேறு களங்களுக்குள் பயணித்திருப்பதையும், கதைமொழி அதற்கு ஏற்றதுபோல… Continue Reading →

பூரணி சிறுகதை குறித்து மணிகண்டன்

பூரணி சிறுகதை   அன்புள்ள சுரேஷ்  பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன். ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள்… Continue Reading →

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு, நாவல் வாசித்த பின்னர் ‘ஒளிர்நிழல்’ பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன். அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது. அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன். புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு. அதில் அந்த… Continue Reading →

கற்றாழைக் கிணறு – எதிர்வினைகள்

கற்றாழைக் கிணறு – சிறுகதை கற்றாழைக் கிணறு சிறுகதை குறித்து அரவிந்தன் அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு: இரவு நேரங்களில் பேய் கதை கேட்பதே ஒரு பரவச உணர்வு. அதை விட ஒரு படி மேல் நாட்டார் தெய்வங்களின் கதை கேட்பது.அவற்றை வழிபடும் முறை ஒரு அமானுஷ்ய நிகழ்வே.சுநில் அவர்கள் ‘குருதி சோறு ‘ கதையில்… Continue Reading →

என் சிறுகதைகள் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு:   நான் ஐந்து வயது குழந்தை இலக்கியத்தில். சில தினங்களுக்கு முன்பு முகநூலில் உலாவுகையில் உங்கள் ‘ரக்த மணம்’ கதையை படிக்க நேர்ந்தது. சற்று முன்னதாகவே நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. கதையின் முடிவிலிருந்த விலாசத்தை பார்த்துவிட்டு துணுக்குற்றேன். பின்னர் யூட்டூபில் உங்கள் உரைகள் அனைத்தையும் பார்த்தேன்…. Continue Reading →

ஒரு நாள் கழிந்தது சிறுகதை – எதிர்வினைகள் 2

கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை  இவைகளை சுற்றி வருகிறது கதை. அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது. இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி ,… Continue Reading →

ஒரு நாள் கழிந்தது சிறுகதை – எதிர்வினைகள் 1

கனலி இதழில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை அன்பின் சுரேஷ் ஒருநாள் கழிந்தது டிபிகல் சுரேஷ் கதை. ஆனால் வழக்கமாக இருக்கும் ஒரு எதிர்பாரா அதிர்ச்சி இதில் இல்லை. அமுதாவின் பாத்திரம் மெல்ல மெல்லத்தான் துலங்கிவருகிறது.. முதலில்  புதிதாக குடிக்க கற்றுக்கொண்ட கொளுத்து வேலைக்கு போகின்றவள் என்று ஒரு குடிசை வீட்டில் குடிகாரக்கணவனுடன் இருக்கும்… Continue Reading →

நாயகிகள் நாயகர்கள் குறித்து சுபா

அன்புள்ள சுரேஷ், நாயகிகள் நாயகர்கள் நேற்றும் இன்றுமாய் வாசித்து முடித்தேன். உங்கள் சிறுகதைகள் இணையத்தில் அவ்வப்போது வாசித்து வருகிறேன் என்றாலும் ஒரு தொகுப்பாக வாசிப்பது இதுவே முதல் முறை.  உடனிருப்பவன், ஈர்ப்பு, நீலப்புடவை, சொட்டுகள், இடைவெளி போன்ற (இன்னும் சில விடுபட்டிருக்கலாம்) கதைகளை வாசித்தவுடன் அக்கதைகளின் ஏதோவொன்று சலனமேற்படுத்துவதையும் சில நாட்களுக்கேனும் உள்ளே வாதமும் எதிர்வாதமுமாய்… Continue Reading →

என் படைப்புகள் குறித்த கருத்தரங்கு

கவிஞர் சமயவேல் என்னுடைய நூல்கள் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் எழுத வந்து மூன்று ஆண்டுகள் கூட ஆகாத ஒரு இளம் எழுத்தாளனின் நூல்களுக்கு கூட்டம் நடத்த முன்வருவது (இந்த நிகழ்வுக்கு முன்புவரை நாங்கள் சந்தித்ததும் இல்லை) தமிழ்ச்சூழலில் அரிதாகவே நடக்கும் நிகழ்வாகவே… Continue Reading →

நாயகிகள் நாயகர்கள் குறித்து அகில்குமார்

சுரேஷ் பிரதீப்பின் நாயகிகள் நாயகர்கள்: மனித மனதின் பாவனைகளும், போலித்தனங்களும் வெளிப்படும் கணங்களை கண்டுணரும் சுரேஷ் பிரதீப்பின் கதைகள், வென்றெடுப்பது அல்லது வெல்லக் கொடுப்பது என்பதாக உறவுகளை வரையறை செய்கிறது. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி ஆதிக்கமற்ற உறவுகளுக்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளது என கேள்வி எழுப்புகிறது. ஆதிக்கம் என்பதுமேகூட எல்லா வேளைகளிலும்… Continue Reading →

« Older posts

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑