Category குறுங்கதை

சிறை – குறுங்கதை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ… Continue Reading →

சுகஜீவனம் – குறுங்கதை

இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக்… Continue Reading →

வினோதம் – குறுங்கதை

தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று ‘வெச்சுக்கய்யா’ என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக்… Continue Reading →

ஐந்து குறுங்கதைகள்

1 மேசையைப் பூட்டி எழுந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் மறுநாள் அலுவலகம் விடுமுறை என்பதால் தோன்றும் மென்குதூகலம் மனதில் பரவியது. வாசலுக்கு வந்தபோது கான்கிரீட் கட்டடம் அளித்திருந்த தட்பவெட்பம் சற்று மாறி தோலில் குளிர்ச்சியை உணர்ந்தபோது குதூகலம் சற்று கூடுவதாக உணர்ந்தேன். கூடிய மகிழ்வினை யாரும் கண்காணிக்கிறார்களா என்ற எண்ணம் மனதில் எழுந்த கணமே அலைபேசி ஒலித்தது…. Continue Reading →

காத்திருத்தல் – குறுங்கதை

நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர் வரவில்லை. நான் காத்துக் கொண்டிருந்த அறையில் ஒரேயொரு ஜன்னல் திறப்பு இருந்தது. அத்திறப்பில் இருந்து எதிரே இருக்கும் ஆளில்லாத உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. நான் தரைத்தளத்தில் இல்லை  என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அறை இருப்பது ஒரு பெரிய அடுக்ககத்தில் என்பது… Continue Reading →

:) :( – குறுங்கதை

12 MAY 2020 (2.02AM) Dei thoonkittiya illa di 🙂 Mani rendaguthu. Innum thoongama enna da panra En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam? Enakku hubby irukkan athanala thoongala 🙁 Enna pannineenga Ellam night la panrathu than (அவள் போர்வைக்கு… Continue Reading →

குட்டியப்பா – கேப்ஸ்யூல் கதை

காவக்காரன் மேட்டுக்கு போனால்தான் சாமிவரும் என்று மாரிமுத்து குட்டியப்பா சொல்லியபோது அவர் விபூதியடித்தால்தான் வீட்டுக்கு வரமுடியும் என்று மண்டபத்தில் காத்திருக்கும் மணமக்களை எண்ணி பீதி கொண்டு மண்டபத்திற்கு எதிர்திசையில் இருக்கும் மேட்டுக்கு செல்வதற்கு முன் டாஸ்மாக்கில் நிறுத்தி குட்டியப்பாவுக்கு ரொம்பவும் எனக்கு கொஞ்சமும் வாங்கி ஊற்றிக்கொண்டு நூறில் வைத்து வண்டியைத்திருகி குட்டியப்பாவை மேட்டில் இறக்கியதும் குடியாலோ… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑