Category மதிப்பீடு

சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப் புரட்சியின் கதை

சூழியல் தீவிரவாதிகள் என்ற பதத்தை முதன்முறையாக கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சி மிக ஆழமானது. சூழியல் குறித்த எந்தவொரு பேச்சினை தொடங்கும்போது நவீனத்துவ மனநிலை கொண்டவர்கள் ஊடேபுகுந்து ‘இதெல்லாம் பகற்கனவு’, ‘மக்கள் நலன்தான் முக்கியம்’, ‘நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்’ என்ற வாதத்தை முன்வைப்பார்கள். இவர்களுடைய பேச்சில் ஒரு ‘நியாயம்’ இருப்பதான தோற்றம்கூட ஏற்படும். பசுமைப்புரட்சியின் ஆதரவாளர்களும்… Continue Reading →

பார்த்தலும் பறைதலும்

தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இந்தியா குறித்தும் தமிழ்ச்சமூகம் குறித்தும் இரண்டு வகையான சித்திரங்கள் கிடைத்தன. ஒன்று காந்தியை மையமாகக் கொண்டு உருவகிக்கப்பட்ட வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரமடைந்த ஒன்றுபட்ட இந்தியா. மொழி இனம் மதம் என பலவகைப்பட்ட வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியர் என்ற உணர்வடிப்படையில் மக்களனைவரும் ஒன்றுபட்ட இந்தியா. இந்தக் கதையாடலில் இந்தியா என்ற… Continue Reading →

அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்

(ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான கடிதம்) அன்புடன் ஆசிரியருக்கு சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ‘எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?’ என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அன்று ஏனோ அப்படி சிலரில் ஒருவனாக இருந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியை எனக்குக்… Continue Reading →

பிம்பச்சிறை – சில குறிப்புகள்

எம் எஸ் எஸ் பாண்டியனின் பிம்பச்சிறை என்கிற நூலை வாசித்தேன். எம் ஜி ஆர் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்ட இந்த நூல் எம் ஜி ஆர் என்ற ‘பிம்பம்’ எப்படி மக்கள் மனதை வெற்றிக் கொண்டு எம் ஜி ராமச்சந்திரனை பதினோரு ஆண்டுகள் வெல்ல முடியாதவராக ஆட்சியில் அமர்த்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறது…. Continue Reading →

சேப்பியன்ஸ் – உலகத்தின் கதை

பெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன…. Continue Reading →

ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி – நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி – 1)

வரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள் முக்கிய ஒப்பந்தங்கள் அந்நியப் படையெடுப்புகள் குறிப்பிட்ட இனக்குழுக்களின் எழுச்சிகள் வீழ்ச்சிகளாக நாம் வரலாற்றை நினைவு கூறுகிறோம். இந்த நினைவு கூறல் வழியாகத்தான் சமகால அரசியல் பிரக்ஞை கட்டமைக்கப்பட்டு அதிகாரத்திற்கான போட்டிகளில் பொருளாதார காரணிகளுக்கு சமமான ஒரு… Continue Reading →

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு – மிஷல் தனினோ(தமிழில் – வை.கிருஷ்ணமூர்த்தி)

ஆர்குட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் ஒரு சமூக வலைதளம். மின்னஞ்சலில் இன்றும் கோலோச்சும் ஜிமெயிலின் பகுதி. ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படையில் ஆர்குட்டைப் பற்றித் தெரிந்தவர்களின் வியப்பு நேரடியாக முகநூலையும் இன்னபிற சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறவர்கள் அடைகிற பரவசத்தை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு “தொடக்கம்” பற்றிய ஒரு கணிப்பு… Continue Reading →

நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா (தமிழில் – வி.கிருஷ்ணமூர்த்தி)

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் தான் வரலாற்றின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்திய முதல் நூல். மன்னர்கள் அவர்களின் ஆட்சிப் பரப்பு ஆண்ட வருடங்கள் எதிர்கொண்ட போர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் செய்த குளறுபடிகள் என்று வரலாறு ஒரு பெரும் புனைவாக (grand fiction) என் நினைவில் நின்றிருந்தது. ஆனால் வருடங்களை நினைவில் நிறுத்துவது எளிமையானதாக… Continue Reading →

நான் ஏன் தலித்தும் அல்ல? – டி.தருமராஜ்

பேராசிரியர் டி.தருமராஜின் “நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேதநிலை” என்ற நூலை (கட்டுரை தொகுப்பு) மறு வாசிப்பு செய்தேன். முதல் முறை படித்த போது ஆசிரியர் பயன்படுத்தி இருந்த கலைச் சொற்களும் கட்டுரைகளின் நவீன வடிவமும் (புனைவில் எத்தகைய வடிவத்தையும் செறிக்கும் என் மனதிற்கு அபுனைவின் மரபான வடிவம் மட்டுமே ஏற்புடையதாக… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑