Tag காலச்சுவடு இதழ்

காந்தி – உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு

கூச்ச சுபாவம் கொண்ட ஒரு இளைஞன் இங்கிலாந்துக்கு சட்டம் படிப்பதற்காக கப்பலில் செல்கிறான். அவன் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன். கப்பலில் எது சைவ உணவு என்று பிரித்தறிவதற்கு அவனால் இயலவில்லை. ஏறத்தாழ கப்பலில் பட்டினியாகவே பயணிக்கிறான். இங்கிலாந்து சென்ற பிறகும் அவன் கூச்சம் நீங்கவில்லை. பெரும்பாலும் பட்டினி கிடக்கிறான். அதே இளைஞனை அடுத்த ஐந்தாறு… Continue Reading →

நம் நாவல்களின் உள்ளீடின்மையை எவ்வாறு வெல்லப் போகிறோம்?

நாவல் மற்றும் நாவல் விமர்சனம் என்ற சொற்களுக்கான அர்த்தம் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. தொடக்க காலங்களில் நாவல் என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் படிப்பதற்காக எழுதப்படுவதாகவும் நாவல் என்பது ‘காதல் கதை’ என்பதாகவும் எண்ணங்கள் இருந்தன. நாவல் விமர்சனம் என்பது நாவலின் ‘கதையை’ சுருக்கிச் சொல்வது என்ற எண்ணம் இருந்ததை க.நா.சுவின் விமர்சனக்… Continue Reading →

வரையறுத்தல் (சிறுகதை)

களிமண்ணை  குழைத்து கொட்டாங்குச்சியில் போட்டு கருவை இலைகளைத் தூவி கூட்டாஞ்சோறு தயாராகிவிட்டது. எண்ணெய் சீந்தாத தலையின் செம்பட்டை முடிகள் முன் வந்து விழ புறங்கையால் முடியை ஒதுக்கி மேலேற்றுகிறாள் மாலதி. சமையல் தயாரான திருப்தியில் மாதேஸ்வரனை ஏறிடுகிறாள். முதல் பிடியை கொட்டாங்குச்சியில் இருந்து கிள்ளி எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்கிறாள். ஏந்தலுக்காக இடது கையால்… Continue Reading →

எஞ்சி நிற்கும் பாவனைகள்

(ஒளிர்நிழல் நாவலுக்கு மதிப்புரை, எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு இதழ், ஜூன் 2018) எதையேனும் சார்ந்திருகவித்துவம், தத்துவம்காதல், சங்கீதம்,இங்கிதம்… இப்படிஎதன் மீதேனும் சாய்ந்திருஇல்லையேல்உலகம் காணாமல் போய்விடும். – வண்ணநிலவன் வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற… Continue Reading →

பரிசுப்பொருள் (சிறுகதை)

பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கி நின்று மோனிகா சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு எடையின்மையை விடுதலையை உணர முடிந்தது. வெறுப்புடன் புன்னகைத்துக் கொண்டாள். சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவு உடைய யாரோ தெரிந்தனர். சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான்…. Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑