சகந்தர் விவாதங்கள் முடிந்து இறுதியாக எழுந்தார்.அவை அவர் கூற்றினைக் கேட்க முற்றமைதி கொண்டு நிலைகொண்டது. “சுனத சாசனம் மண் நிகழ்ந்த ஒரு பேரற்புதம் என அவையோர் பலர் உரைத்தனர். அத்தகைய வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லையெனினும் அவர்கள் கூற்றினை நான் மறுக்கவுமில்லை. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த மிகத் தொன்மையான நூல் சுனத சாசனம். தன் உடல் வழியே… Continue Reading →
சவில்யத்தில் பெருங்கோட்டைகள் எழுப்பப்பட்டன. மூன்று தேசங்கள் வந்து தொடும் எல்லையிலும் படை நிரைகள் வலுப்படுத்தப்பட்டன. எந்நேரமும் சவில்யத்தின் படை எழலாம் என அஞ்சிக் காத்திருந்தன திருமீடமும் ஆநிலவாயிலும். சவில்யத்தினும் பெரிய நாடு என்பதாலும் வன்தோளனின் மீதான பயத்தினாலும் திருமீடமும் ஆநிலவாயிலும் சுனதபாங்கத்திடம் நல்லுறவு கொண்டன. வன்தோளன் விரும்பினால் சவில்யத்தின் மீது படை கொண்டு செல்லவும் சித்தமாக … Continue Reading →
உவகையன்றி வேறேதும் அறிந்திருந்தானா அவன்? உவகையன்றி வேறேதும் உண்டா இவ்வுலகில்? எதை நினைத்து உவப்பது என்றெண்ணும்போதே எதை நினைத்து உவக்காமல் இருப்பது என்கிறான் அவன். ஒவ்வொரு துளியும் மழையே என்றெண்ணும் போதே ஒவ்வொரு மழையும் துளி என்கிறான். ஒளியையும் இருளையும் பிரித்தவனே திசையை அறிகிறான். அவன் ஒளியின் ஒவ்வொரு கணுவிலும் இருளை சுவைப்பவன் இருளின் ஒவ்வொரு … Continue Reading →
சபையினர் முற்றமைதி கொண்டிருக்க பாணன் தொடர்ந்தான். ஆதிரையின் விழிகள் விரிந்தவண்ணம் இருந்தன. அவள் முகம் கண்ட ஒவ்வொரு சிரமும் தாழ்ந்தது. மல் புரிந்த வீரர்கள் அடுமனை அமர்ந்த பெண்கள் கூவிச் சிரித்து விளையாடிய குழந்தைகள் என அனைவரும் அவளருகே வந்தனர். சந்தேகம் கொண்டவர்களாய் அவளைப் பின் தொடர்ந்தவர்களில் சிலர் அவள் கூந்தலை பிடித்திழுத்தனர். மகோதவன் எவரையும் கவனிக்காமல் … Continue Reading →
மூவாயிரம் இரவுகளும் பகல்களும் அவள் நடந்தாள். பாதி உண்ணப்பட்ட எச்சங்களை மட்டுமே மனிதன் எனக் கண்டாள் ஆதிரை. ஆழிமாநாட்டின் அத்தனை தேசங்களிலிருந்தும் கூடணையும் பறவைகள் என எவர்தொடாமேட்டிற்கு வந்த வண்ணமே இருந்தனர் என்பதை ஆதிரை கண்டாள். கருத்த தேகத்தினர்களான தென்னவர்களும் மஞ்சள் நிறம் கொண்ட கிழக்கு தேசத்தவர்களும் கருஞ்செந்நிற உடல் கொண்ட மலைக்குடியினரும் என ஆழிமாநாட்டின் … Continue Reading →
மரப்பிசிர்களை கவ்விக் கவ்வி மேலேற்றுகின்றன சிட்டுக்குருவிகள். பொத்தென தரையில் விழுவது போலிறங்கி விர்ரென மேலேறி ஒரு பசுங்கொடியில் கூடமைக்கின்றன. இளஞ்சிட்டொன்று தன்னினும் பல மடங்கு நீளம் கொண்ட ஒரு ஓலையை கொடியில் ஏற்ற முயன்று தூக்கி கொடியை அடைவது வரை வென்று விட்டது. அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த இன்னொரு சிட்டுடன் இணைந்து ஓலையை வளைக்க முயல்கிறது…. Continue Reading →
நண்பர்களுக்கு வணக்கம் பெருஞ்சுழி அத்தியாயம் 27-ல் 26-வது அத்தியாயமே திரும்பவும் பதிவிடப்பட்டுள்ளதை இப்போது தான் கண்டறிந்தேன் . இடையில் நிகழ்ந்த குழப்பமாகவும் இருக்கலாம் . இப்போது சரி செய்துவிட்டேன் .தொடர்ந்து வாசிப்பவர்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன் . சுரேஷ் ப்ரதீப்
படகின் அமர முகப்பில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வந்தான் இரண்டரை வயது சிறுவனான வன்தோளன். எவர்தொடாமேட்டின் கிழக்கில் உற்பத்தியாகும் மதீமம் சுனதபாங்கத்தின் வழியாக தனல்வனம் மிதஞ்சிகம் தென்நுழைபுனல் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கும். மிதஞ்சிகத்திற்கு நட்புமுறைப் பயணமாக சென்றிருந்தது சுனதபாங்கத்தின் அரசு நிரை. ஒரு வயதிலிருந்தே ஆசிரியர்களையும் அமைச்சர்களையும் பார்த்தே வளர்ந்திருந்தான் வன்தோளன். சிறுவர்களின் பொருளில்லாப்… Continue Reading →
சவில்யத்தின் மேற்கெல்லை தேசமான சுனதபாங்கத்தின் அரசவை முற்றமைதி கொண்டிருந்தது. பேரரசர் விகந்தர் வெண் தாடியை நீவியபடி அவை வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார். இந்தக் காத்திருப்பு எந்தப் புள்ளியில் நிகழத் தொடங்கியதென அவரால் ஊகிக்க முடிவதில்லை. ஆனால் அதைப்பற்றி எண்ணத் தொடங்கும் போதே உடைந்து நொறுங்கப் போகும் அவர் சித்தத்தை காப்பதற்காக மூளை அத்தனை பாவனைகளை பூண்டு… Continue Reading →
“நீ செய்வதை உணர்கிறாயா?” என்று ஆதிரையை நோக்கிக் கேட்டார் தெரிதர். அவரே எண்ணி வியக்கும் அளவுக்கு அவர் குரலில் பணிவும் எச்சரிக்கையும் மிகுந்திருந்தது. “அறிவேன் தந்தையே. என் செயல்கள் குறித்து முதிர்ந்த இவ்வயதில் நீங்கள் ஊகித்தறிவதை விட நானே விளக்கி விடுகிறேன் அமருங்கள்” என ஒரு மரப்பீடத்தினை எடுத்து போட்டு தெரிதரின் வலக்கையை மென்மையாகப் பற்றி … Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑