அலும்னி மீட் அழைப்பிதழைப் பார்த்தபோது தோன்றிய எரிச்சலும் கோபமும் அதே அளவில் எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறையின் சாவிக்காக காத்திருந்தபோது மீண்டும் தோன்றியது. அப்படியொன்றும் ரொம்ப நேரம் நான் காக்க வைக்கப்படவில்லை. அதோடு என் சிறிய பெட்டியை தூக்கிக் கொண்டு நடந்து வருவதற்குக்கூட டிரிபிள் ஈ டிபார்ட்மெண்ட் மாணவன் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான். அவனை என்னிடம்… Continue Reading →
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழார் எனின்? 1 எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில்… Continue Reading →
சில்லறைக் காசுகளை சேமிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டதென நினைவில்லை. ஆனால் நாங்கள் குடியிருந்த பழைய வீட்டில் டி.வி வைப்பதற்காக வீட்டின் வடகிழக்கு மூலையில் நான்கடி அளவிற்கு ஒரு கான்கிரீட் பிளேட்டை நீட்சி போல் செருகி இருப்பார்கள். அந்த பிளேட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி ஊடுருவ முடியாத கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தான் சில்லறைகளை சேர்க்கத் தொடங்கினேன்… Continue Reading →
பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டால் அது சத்தம் எழுப்பும் என்பதற்குப் பயந்தே ஷவரில் குளித்துக் கொள்வேன். நான் ஆற்றில் குளித்தது கிடையாது. அருவிகளை நேரில்கூடப் பார்த்தது கிடையாது. கொல்லைப்புறத்தில் தன் மகளுக்காக அம்மா அளந்து வைக்கும் தண்ணீர்தான்… Continue Reading →
சலவை செய்யப்பட்ட தூய்மையான வெள்ளைப் படுக்கை விரிப்பின் நறுமணம் அந்த நாளின் தொடக்கமாக இருந்தது. சலவையால் ஏற்பட்ட மொடமொடப்பு நிறைந்த சந்தனநிறப் போர்வையை விளக்கி என்னைப் பார்த்தேன். நேற்று அணிந்திருந்த அதே வெண்ணிறச்சுடிதாருடன் உறங்கிப் போயிருக்கிறேன். என்னுடலின் காய்ந்த வியர்வை மணம் கூட அந்த தூய காலைக்கு ஏதோவொரு கிறக்கத்தை கொடுப்பதாகவே இருந்தது. முகம் மட்டும்… Continue Reading →
பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து… Continue Reading →
1 ஈரத்துண்டின் நுனிநூற்கற்றைகளில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ அந்த நுனி தான் நீரினை உற்பத்தி செய்வதுபோல. யாருக்கும் தெரியாமல் எட்டிப் பார்த்து பிறர் கண்படும் முன்னே சட்டென கடந்து மற்றோர் இடம் மறையும் சிறுவன் போல நீர்த்துளிகள் துண்டின் நுனியில் இருந்து எட்டிப்பார்த்த மறுகணமே மண்ணுக்கு வந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நீர் சொட்டியதால்… Continue Reading →
பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கி நின்று மோனிகா சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு எடையின்மையை விடுதலையை உணர முடிந்தது. வெறுப்புடன் புன்னகைத்துக் கொண்டாள். சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவு உடைய யாரோ தெரிந்தனர். சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான்…. Continue Reading →
“ச்சூப்ரைச்சர்” என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் “ச்சூப்ரைச்சர்”. இம்முறை மேலும் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம்… Continue Reading →
கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑