சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப்பு என்றால் ஒருசில வகைகளில் மனமுவந்து ஆம் எனலாம். வளரும் எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளின் தாக்கத்தின் துல்லியத்தை தெளிவுப்படுத்தக்கூடிய முயற்சியின் ஒரு சிறு துகள் தான் இக்கட்டுரையே தவிர மொத்தமாகவே அக்கதைகளை… Continue Reading →
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று (30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான Biographical fiction. தன் வாழ்வின் முப்பது வயதுவரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து… Continue Reading →
அன்பின் சுரேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் ”வீதிகள்” வாசித்தேன். ஒருமுறை வாசித்தபின்னர், கதைக்குள் எதையோ தவறவிட்டது போலிருந்தது, இன்று அடுத்த வகுப்பிற்கான இடைவெளியில் மீண்டும் வாசித்தேன். கொங்குபிரதேசத்தில் கேள்விப்பட்டிராத ஊர்களின் பெயர்களினாலேயே புதியதாய் ஒரிடத்திற்கு செல்லும் கிளர்ச்சியை பதட்டத்தை எப்போதுமுங்கள் எழுத்து உருவாக்கும். இதிலும் அப்படியே! அறிமுகமான இடங்களின் பரிச்சயத்தன்மையினாலும் சில எழுத்துக்களுடன் அணுக்கமுண்டாகும் எனினும் நீங்கள்… Continue Reading →
சுரேஷ் பிரதீப் அவர்களின் ” வீதிகள் ” சிறுகதை குறித்து ஒரு பார்வை : பிரவீணா, அனிதா என்ற இரு பெண்களுக்குள்ளாக நிகழும் தன்முனைப்பு (Ego) , மனவிகல்பம், பொறாமை, இருவரில் யார் வாழ்க்கை நிறையானது, யார் பெரியவர் என மனம் எழுப்பும் பெண்களின் ஆழ்மன உளவியலைப் பேசுகிறது இச்சிறுகதை. பிரவீணா ஜி.ஆர்.எம் பள்ளியில் பத்தாம்… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் வணக்கம் தங்கள் வரையறுத்தல் கதை வாசித்தேன். அதை பற்றிய என் மனப்பதிவை உங்களுடன் பகிரவே இக்கடிதம். கதையின் மைய கணம் என்னை தீண்டியதை என்னால் நிச்சயம் மறுக்க முடியாது. குறிப்பாக அந்த கலவரத்தின் துவக்கம் அந்த குடும்பத்தை சூறையாடும் அந்த பகுதி. அந்த காதல் செய்தி அவ்வூரில் பயமாகவே பரவுகிறது. குறிப்பாக நாயகியின்… Continue Reading →
அன்பின் சுரேஷ் இன்று தேர்வறைப் பணியென்பதால் மதியமே வீடு வந்துவிட்டேன். எதிர்பார்த்திருந்தபடியே காலச்சுவடு காத்திருப்பதை தபால்பெட்டியின் இடைவெளிக்குள் காண முடிந்தது. உடன் உறையைப்பிரித்து ’’வரையறுத்தல்’’ வாசித்தேன். எதிர்பாரா வேலையொன்றினால் இடையில்வாசிப்பு அறுந்துவிட்டதால், மீள முதலிலிருந்து வாசித்தேன். முடிந்ததும் ஒரு இடத்தில் எனக்கு சரியாகப்புரியாதது போல குழப்பமாக இருந்ததால் மீண்டும் அப்பகுதியை வாசித்தேன். // மீட்டிங் முடிஞ்சு… Continue Reading →
இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. அழிசி கட்டுரைப்போட்டி, நடுவர்களின் பெயரை தெரிந்து கொண்ட போது, இப்பெயரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைவின் அடுக்குகளில் தேடி, திரும்ப ஜெயமோகனிடம் சரணடைந்தேன்.. அப்பொழுது தான் ஈர்ப்பு பற்றிய… Continue Reading →
அன்பு சுரேஷ், வணக்கம்.. ஜெயமோகன் அவர்களது தளத்தில் தான் “ஈர்ப்பு” வாசித்தேன்.. அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்தேன்.. எனது கருத்துகளைப் பகிரவே இந்த அஞ்சல்.. ஈர்ப்பு சற்றே நெடுங்கதை தான்.. “எனக்குஎல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது” என்று துவங்குவதில் இருந்தே, என் எதிரில் ஒருவர் அமர்ந்து அவரைப் பற்றி பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது…. Continue Reading →
ஈர்ப்பு கதை இணைப்பு ஈர்ப்பு நெடுங்கதை, தற்கால நவீன வாழ்க்கையின் ஆண், பெண் உறவு நிலைகளின் உளவியல் ரீதியான சிக்கல்களை கூரிய அனுபவச் சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் நடுந்தர வயதை தொடும் வயதில் இருப்பவன். அவனின் வாழ்வில் பெண்கள் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனின் பித்தை அறிவை அவர்கள் சுமையாக நினைத்து விலகிவிடுகிறார்கள், ஒவ்வொரு… Continue Reading →
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑