நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும்… Continue Reading →
“ச்சூப்ரைச்சர்” என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் “ச்சூப்ரைச்சர்”. இம்முறை மேலும் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம்… Continue Reading →
ஜனநாயகம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் மிகப்பெரிய வெண்ணிறப் பரப்பும் அதில் ஓவியம் எழுதுவதற்கான பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளும் வழங்கப்பட்டிருக்கையில் அப்பரப்பின் ஒரு மூலையில் உடைந்த பென்சில் ஒன்றால் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறோம் நாம் என்ற உணர்வை அடைவேன். அது போலத்தான் நாவல் என்ற வடிவமும் தமிழ் இலக்கியத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு… Continue Reading →
கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்
ஒளிர்நிழலின் முதல் வாசகராகிய திருமதி.மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அந்நாவல் குறித்து எழுதிய பதிவு இந்நாவல் முதலில் ஒரு சிந்தித்தலை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கதைசொல்லி ஆரம்பிப்பதுபோலவோ நாவலாடலின் இடங்களையோ மாந்தர்களையோ வர்ணிப்பதுவோ இல்லாமல் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கிறது அந்த ஆரம்பநிலை சிந்தனைகள். அப்பொழுதே மனம் ஒருங்கிவிட்டது. இந்நாவலின்மூலம் அப்படி என்னதான் சொல்லவருகிறார் என எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது…. Continue Reading →
பதாகையில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை அலுங்கலின் நடுக்கம்
ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார்க்கும் போது அந்த மகிழ்ச்சி பெருகி இருப்பதாக உணர்கிறேன். “புதுசுல்ல” அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன் போல. கிழக்கு வெளியீடாக என் முதல் நாவலான ஒளிர்நிழல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலை வாங்குவதற்கான… Continue Reading →
வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது. வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண… Continue Reading →
யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார். “தேவிடியா வாக்கு…அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க”. என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது. ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. இன்றைய… Continue Reading →
சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆசுவாசமடைவாள் முல்லை. மீண்டும் அச்சத்தத்தை கேட்டுவிடும் போது மனதை ஒரு பயம் கவ்விப் பிடிக்கும். காட்சிகள் மங்கலாகவேத் தெரிந்தன. அவளால் கண்களையும்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑