Category பொது

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது?… Continue Reading →

உண்ணப்படுதல்

எனக்கும் வரலாற்றுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? வரலாறு ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு பக்கமாகவும் நடந்து போய்கொண்டிருக்கிறோம். அது நடப்பது அரசப்பாதை. அரசனின் யானை போல கம்பீரமாக நடந்து செல்கிறது. நானோ ஒரு குறுகிய பழுதடைந்த சாலையில் அந்த யானை என்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற ஏக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். வரலாற்றுக்கு அதை… Continue Reading →

ஒருதுளிக் கண்ணீர்

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை மட்டுமே கேட்க வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தொடர்ந்து இப்பதிவை வாசிக்க வேண்டாம். இது ஒரு புலம்பல் மட்டுமே. எனக்குள்ளாகவே நான் புலம்பிக் கொள்ளப் போகிறேன். அதைப் பதிந்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இந்த புலம்பலை நினைத்து எதிர்காலத்தில் (அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று… Continue Reading →

ஏன் இலக்கியம்?

ஏன் இலக்கியம் வாசிக்கிறீங்க?இலக்கியம் இல்லாமல் மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாரகள்.அரசு நடந்து கொண்டுதானே்இருக்கறது. அறிவியல் அறிஞர்கள் கண்டுபடிப்புகளை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறார்கள்.போர் நடந்து கொண்டுதானே இருக்கிறது.வண்புணர்வு நடந்து கொண்டு தானே இருக்கறது.அணு ஆயுத பதட்டம் இருந்து கொண்டதானே இருக்கறது.மக்கள் பசியில் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் இலக்கியம் எந்த வகையில் தேவை.உலகம் இருக்க இருக்க பண்பாட்டு ரீதியாக,உறவு ரீதியாக,சுற்றுசூழல்… Continue Reading →

போர்முரசு

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினாயகா டியூஷன் சென்டரில் சேர்ந்தேன். டியூஷன் ஆசிரியர் செந்தில்குமார் வேதியியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார். சிக்கல் என்னவெனில் காலையில் ஆறு மணிக்கு டியூஷன் தொடங்கும். என் வீட்டிலிருந்து டியூஷன் சென்டர் பதினாறு கிலோமீட்டர். முதல் சில… Continue Reading →

தர்மபுரியில் இரு தினங்கள் – வாசிப்பும் பண்பாடும்

அவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்கங்கள் தரப்படும் இந்த “செலுத்துதலை” கூடுவிட்டு கூடுபாய்தல் என்று வைத்துக் கொள்ளலாம). அவதாரின் உடலுக்குள் நம் நாயகன் சென்றதும் முதலில் தன் கால்களைத் தான் கவனிப்பான். கால்களை அசைக்க முடிவதும் நடக்க முடிவதும் அவனுக்கு பெரும்… Continue Reading →

முடிவின்மையின் ருசி

கண்கொடுத்தவனிதம் அரசினர் தொடக்கப்பள்ளியில் இருந்து தக்களூரின் எல்லையில் இருக்கும் என் வீடு அரை கிலோமீட்டருக்கு சற்று அதிகமான தூரம். நரம்பு பை அல்லது ஒயர் கூடையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்தபடியே பள்ளி முடிந்து திரும்புபோது நண்பர்களிடம் கதைகளைச் சொன்ன நினைவிருக்கிறது. டைம்மிஷினில் சக்திமானோடு பயணித்ததும் பறக்கும் பாயில் படுத்துறங்கி மொழி தெரியாத தேசத்தில் கண் விழித்ததும்… Continue Reading →

சூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு என் நண்பரும் இலக்கிய வாசகருமான ஜெயவேல் தான் வாசித்த சூழியல் சார்ந்த நூல்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் அப்பட்டியலை என் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பின்னூட்டமாக அவர்கள் வாசித்த நூல்களை தெரிவித்தனர். அவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன். சில நூல்கள் அச்சில் இல்லை அல்லது நான் தேடிய… Continue Reading →

அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கரங்கள்

படையப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஊர் நிலப்பிரபுவான கதாநாயகனின் அப்பாவுக்கும் அவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு வரும். தம்பி அண்ணனைப் பார்த்து “ஊர் மரியாதைகள் எல்லாம் உனக்கே கிடைக்கின்றன. நான் ஒரு வேலைக்காரனைப் போல இந்த வீட்டில் இருக்கிறேன். அம்மா உன்னை மட்டும் தான் பெற்றாளா? நான் கூத்தியாளுக்கு (படத்தில் வரும் வார்த்தை. தவறான… Continue Reading →

சாத்தான்

ஆழத்தில் கிடப்பவன் கூரிய விழிகளால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் உங்கள் இயல்பின் மீது நான் கருணை கொள்ளும் போது உங்கள் சிரிப்பினைக் கண்டு  எனக்குள் தாய்மை சுரக்கும் போது உங்கள் அழகின்மையை அறிவின்மையை நான் பெருந்தன்மையோடு கடக்கும் போது அவன் கூர்மை சிரிப்பாகிறது எல்லாம் சரியாகும் என்று உங்கள் தலையை நான் தடவும் போது தூய… Continue Reading →

« Older posts Newer posts »

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑