ஹரன் பிரசன்னாவிடமிருந்து ஒளிர்நிழல் வெளியிடப்பட இருப்பதாக என் மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. நம்ப முடியாத ஒரு மகிழ்ச்சி மனதில் பரவியது. இன்று ஒளிர்நிழலை நூலாக பார்க்கும் போது அந்த மகிழ்ச்சி பெருகி இருப்பதாக உணர்கிறேன். “புதுசுல்ல” அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன் போல. கிழக்கு வெளியீடாக என் முதல் நாவலான ஒளிர்நிழல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலை வாங்குவதற்கான… Continue Reading →
ஆர்குட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் ஒரு சமூக வலைதளம். மின்னஞ்சலில் இன்றும் கோலோச்சும் ஜிமெயிலின் பகுதி. ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படையில் ஆர்குட்டைப் பற்றித் தெரிந்தவர்களின் வியப்பு நேரடியாக முகநூலையும் இன்னபிற சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறவர்கள் அடைகிற பரவசத்தை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு “தொடக்கம்” பற்றிய ஒரு கணிப்பு… Continue Reading →
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் தான் வரலாற்றின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்திய முதல் நூல். மன்னர்கள் அவர்களின் ஆட்சிப் பரப்பு ஆண்ட வருடங்கள் எதிர்கொண்ட போர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் செய்த குளறுபடிகள் என்று வரலாறு ஒரு பெரும் புனைவாக (grand fiction) என் நினைவில் நின்றிருந்தது. ஆனால் வருடங்களை நினைவில் நிறுத்துவது எளிமையானதாக… Continue Reading →
பேராசிரியர் டி.தருமராஜின் “நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேதநிலை” என்ற நூலை (கட்டுரை தொகுப்பு) மறு வாசிப்பு செய்தேன். முதல் முறை படித்த போது ஆசிரியர் பயன்படுத்தி இருந்த கலைச் சொற்களும் கட்டுரைகளின் நவீன வடிவமும் (புனைவில் எத்தகைய வடிவத்தையும் செறிக்கும் என் மனதிற்கு அபுனைவின் மரபான வடிவம் மட்டுமே ஏற்புடையதாக… Continue Reading →
வழியனுப்பல் எத்தனையோ பேர் ஏற்கனவே எழுதி சலித்துவிட்டனர் முழு நிலவு குறித்து சுழற்சிக்கு ஏற்ற வகையில் விரிந்து சுருங்கும் அதன் வடிவம் காதல் ரசமோ சாம்பாரோ ஒழுகும் வரிகள் காமத்தின் தவிப்பும் காத்திருத்தலின் துடிப்பும் தனிமையின் துயரும் தன்னொளி கொள்ளா முழுமையும் என எண்ண எண்ண எழுந்து வருகின்றன முழுநிலவின் முகங்கள் அத்தனைக்கும் மேல் அதுவொரு… Continue Reading →
வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது. வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண… Continue Reading →
யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார். “தேவிடியா வாக்கு…அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க”. என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது. ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. இன்றைய… Continue Reading →
மஹா சிவ ராத்திரிக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது சென்ற வாரம் தான் எனக்குத் தெரிய வந்தது. மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அது. அதுவும் வார இறுதியில் விடுமுறை கூடுதல் திருப்தியைத் தரும் தானே. ஏனெனில் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் பலர் சனிக்கிழமை விடுப்பெடுப்பார்கள். குறைந்த மனிதர்கள் மட்டுமே இருக்கும் அலுவலகம்… Continue Reading →
சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆசுவாசமடைவாள் முல்லை. மீண்டும் அச்சத்தத்தை கேட்டுவிடும் போது மனதை ஒரு பயம் கவ்விப் பிடிக்கும். காட்சிகள் மங்கலாகவேத் தெரிந்தன. அவளால் கண்களையும்… Continue Reading →
மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑