Author சுரேஷ் பிரதீப்

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது?… Continue Reading →

உண்ணப்படுதல்

எனக்கும் வரலாற்றுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? வரலாறு ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு பக்கமாகவும் நடந்து போய்கொண்டிருக்கிறோம். அது நடப்பது அரசப்பாதை. அரசனின் யானை போல கம்பீரமாக நடந்து செல்கிறது. நானோ ஒரு குறுகிய பழுதடைந்த சாலையில் அந்த யானை என்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற ஏக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். வரலாற்றுக்கு அதை… Continue Reading →

பார்த்தலும் பறைதலும்

தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இந்தியா குறித்தும் தமிழ்ச்சமூகம் குறித்தும் இரண்டு வகையான சித்திரங்கள் கிடைத்தன. ஒன்று காந்தியை மையமாகக் கொண்டு உருவகிக்கப்பட்ட வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரமடைந்த ஒன்றுபட்ட இந்தியா. மொழி இனம் மதம் என பலவகைப்பட்ட வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியர் என்ற உணர்வடிப்படையில் மக்களனைவரும் ஒன்றுபட்ட இந்தியா. இந்தக் கதையாடலில் இந்தியா என்ற… Continue Reading →

புறாமுட்டைக்காக செத்துப்போகிறவர்கள் – ஆ. மாதவனின் கதைகளை முன்வைத்து

“நியதிகளும் – ஏற்பாடுகளும், வாழ்க்கையின் கட்டுத்திட்டங்களும் மனிதப்பிறவியின் அடிப்படைக் கோடுகளாக இருந்தாலும், அனேக சமயங்களில் இந்தக் கோட்டை மீறித் துள்ளுவதிலேயே சுகம் காணுகிறான், மனிதன். ஒரு வகையில் – வரம்புக்கோடுகளை மீறிச் சுகங்காணுவதிலும், அந்த எல்லை மீறலை ஆதியற்ற சுகமாகக் கருதி ரகசியமாக, கனவு காணுவதிலும்தான் வாழ்க்கையின் ரசாவஸ்தை நிர்ணயிக்கப்படுகிறது” – ஆ. மாதவனின் பறக்க… Continue Reading →

2020ல் எழுதிய கட்டுரைகள்

2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் ரா.கிரிதரனின் இசை உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை  (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)… Continue Reading →

குடிபெயர்தலும் குடியமர்தலும் – வந்தாரங்குடி நாவலை முன்வைத்து

நிலத்துக்கும் தனிமனிதனுக்குமான உறவு குறித்து இலக்கியம் நிறையவே பேசியிருக்கிறது. இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் மண்ணும் மனிதரும், நீலகண்ட பறவையைத் தேடி, பங்கர்வாடி போன்ற ஆக்கங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. வெளிவந்து ஒரு நூற்றாண்டுகூட ஆகியிருக்காத இந்த ஆக்கங்களை வாசிக்கும்போது வேறு ஏதோவொரு காலகட்டத்துக்குள் புகுந்துவிட்ட திகைப்பு ஏற்படுகிறது. நினைவுப்படுகையின் ஒரு அடுக்கை இப்படைப்புகள் தீண்டிவிடுகின்றன…. Continue Reading →

மற்றொரு வெளியேற்றத்தின் கதை – எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து

எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற குறுநாவல்களை உதாரணமாகச் சொல்லலாம். அசோகமித்திரனுடையது முழுக்கவும் நகர்ப்புற மத்தியத்தர வர்க்க… Continue Reading →

முடிவின்மையின் வடிவம் (சிறுகதை)

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை…. Continue Reading →

கதையாக மாறும் காலம் – செல்வம் அருளானந்தத்தின் நூல்களை முன்வைத்து

தமிழ் இலக்கியச் சூழலில் புலம்பெயர் இலக்கியத்துக்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது ஈழ இலக்கியமே. ஈழத்துக்கு வெளியே இயங்கும் படைப்பாளிகளின் ஆக்கங்களை புலம்பெயர்ந்தவர்களின் எழுத்து, புலம்பெயர் எழுத்து என்று இரண்டாகப் பிரித்து விட முடியும். வேறொரு தேசத்தில் காலூன்றி நிலை கொண்ட பிறகு நினைவு மீட்டல்களாக ஈழத்தை எழுதிப் பார்ப்பதை புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்படும் என்று வரையறுக்கலாம். இன்றுவரையிலான… Continue Reading →

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑