நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை…. Continue Reading →
மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக… Continue Reading →
1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய… Continue Reading →
இயல்புவாதப் படைப்புகளைச் சுருக்கமாகக் கடவுள்கள் இல்லாத படைப்புகள் என்று வகைப்படுத்தலாம். கதைகளில் அற்புதத் தன்மையையும் யதார்த்தம் கடந்த தன்மையையும் கழித்துவிட்டு எழுதப்படும் கதைகளை இயல்பு மற்றும் யதார்த்தவாதப் படைப்புகளாக அடையாளப்படுத்தலாம். செடல் அப்படியானதொரு இயல்புவாதப்படைப்பு. ஆனால் செடல் இப்படித் தொடங்குவது ஒரு நகைமுரண். ‘சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ’ சரியாகச் சொல்வதானால் இந்த நாவல் முழுக்கவே கடவுள்… Continue Reading →
அலும்னி மீட் அழைப்பிதழைப் பார்த்தபோது தோன்றிய எரிச்சலும் கோபமும் அதே அளவில் எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறையின் சாவிக்காக காத்திருந்தபோது மீண்டும் தோன்றியது. அப்படியொன்றும் ரொம்ப நேரம் நான் காக்க வைக்கப்படவில்லை. அதோடு என் சிறிய பெட்டியை தூக்கிக் கொண்டு நடந்து வருவதற்குக்கூட டிரிபிள் ஈ டிபார்ட்மெண்ட் மாணவன் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான். அவனை என்னிடம்… Continue Reading →
பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து… Continue Reading →
தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது… Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑