Tag நதிக்கரை இலக்கிய வட்டம்

சீர்மை குறித்து கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக்  கூட்டம் இன்று (30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான Biographical fiction. தன் வாழ்வின் முப்பது வயதுவரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து… Continue Reading →

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு – கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி… Continue Reading →

நதிக்கரை நிகழ்வு நான்கு

பேசும் பூனை இணைப்பு சகோதரிகள் முதல் பகுதி சகோதரிகள் இரண்டாம் பகுதி இலக்கிய வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவருக்கு தான் வாசித்த படைப்புகள் குறித்து பேசுவதில் ஒரு தயக்கமும் கூச்சமும் இருப்பது இயல்பு. ஒரு வகையில் அத்தகைய கூச்சம் உடையவர்களில் பெரும்பாலானவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட அவதானிக்கக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதோடு அதிகமாக “பேச்சில்… Continue Reading →

நதிக்கரை நிகழ்வு ஒன்று – கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம்   கடந்த ஞாயிறன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஷ் பிரதீப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும் முதலில் தீவிர இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது  .   நான் ஒன்றாம்… Continue Reading →

நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று

2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை… Continue Reading →

நதிக்கரை இலக்கிய வட்டம்

நதிக்கரை இலக்கிய வட்டம் திருவாரூர் நகரில் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை அல்லது என் கவனத்துக்கு வரவில்லை. திருவாரூர் மைய நூலகத்துடன் இணைந்து இலக்கிய விவாதங்களை நிகழ்த்தும் வகையில் நதிக்கரை என்ற பெயரில் இலக்கிய வட்டம் ஒன்றைத் தொடங்கலாம் என உத்தேசித்திருக்கிறேன். இப்போதைக்கு வட்டத்தின் ஒரேயொரு உறுப்பினன் நான் மட்டுமே🙂… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑