விஜய்குமார் சம்மங்கரையின் ‘மிருக மோட்சம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு அத்தொகுப்பின் உணர்வுத் தளத்தை பிரதிபலிப்பது அரிதாகவே நிகழும். நாமாக ஒரு உணர்வுத் தளத்தை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் தன்னளவில் ஒரு தொகுப்பு அப்படி இருக்க முடியாது. ஏனெனில் எழுதத் தொடங்கும்போது வெவ்வேறு வகையான ஆர்வங்களும் அதற்கேற்ற… Continue Reading →
1மௌனியைப் பற்றி எந்தவொரு கூற்றையும் புதுமைப்பித்தன் மௌனி பற்றி சொன்ன இந்தக் கருத்தினை ஏற்றோ மறுத்தோதான் சொல்ல வேண்டியிருக்கிறது. “தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்தவர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரை சொல்லவேண்டும். அவரை தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துக்களை மடக்கிக்… Continue Reading →
1மனித வரலாற்றின் கதையை பல்வேறு வகையான ஊகங்கள் முடிவுகள் வழியாக ஒத்திசைந்து மிகுந்ததாக கற்பனை செய்ய வரலாற்று ஆசிரியர்களும் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் முயன்று கொண்டே இருக்கின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முறைமைகள் வழியாக மிகச் சரியான முடிவினை நோக்கிச் செல்ல முயல்வதன் வழியாகவும் இலக்கியவாதி உள்ளுணர்வினை நம்பிச் செய்யும் கற்பனைகள் வழியாகவும் அரசியல்வாதி அதிகார நோக்கிலான ஒற்றைமயப்படுத்துதல்… Continue Reading →
நாவலின் வடிவத்திற்கும், உள்ளடக்கத்திற்குமான தொடர்பு சார்ந்த விவாதம் நிரந்தரமானது. கதை என்றும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் கூறல்முறை என்பது காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலகட்டத்தின் அறிவுச்சூழலின் தத்துவ நிலைப்பாடும் நாவல் என்கிற வடிவத்தின்மீது ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தத்துவ நிலைப்பாடு என்பது ஒருவகையில் அன்றைய பொதுமனம் எவ்வாறு… Continue Reading →
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழார் எனின்? 1 எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில்… Continue Reading →
1 ஈரத்துண்டின் நுனிநூற்கற்றைகளில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ அந்த நுனி தான் நீரினை உற்பத்தி செய்வதுபோல. யாருக்கும் தெரியாமல் எட்டிப் பார்த்து பிறர் கண்படும் முன்னே சட்டென கடந்து மற்றோர் இடம் மறையும் சிறுவன் போல நீர்த்துளிகள் துண்டின் நுனியில் இருந்து எட்டிப்பார்த்த மறுகணமே மண்ணுக்கு வந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நீர் சொட்டியதால்… Continue Reading →
எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து சிவந்த உயரமான பெண் ஒருத்தி வலக்கையின் விரல்கள் மதிய உணவிற்கான பையையும் இடக்கையின் தோள் மற்றொரு பையையும் பிடித்திருக்க எங்களை நோக்கிப்… Continue Reading →
யாதும் ஊரே என்ற சொல் கணியன் பூங்குன்றனின் சிந்தையில் எழுந்த கணத்தை சற்று எண்ணிப் பார்க்கலாம். தொல் வேதங்களிலும் இத்தகைய கவித்துவ உச்சங்களைத் தொடும் பல வரிகள் இருப்பதாக நண்பர்கள் சொல்லி இருக்கின்றனர். ரிக் வேதத்தில் வரும் “சிருஷ்டி கீதத்தை” ஜெயமோகன் மொழிபெயரத்திருக்கிறார். அதை வாசிக்கும் போது அவ்வரிகளை உதிர்த்த கவிஞனை அல்லது ரிஷியை அல்லது… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑