திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது. சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்… Continue Reading →
ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின் விளிம்பில் உள்ள கூரிய நீட்சிகள் வாயோரங்களைக் கிழிக்க நாயின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்குகிறது. தன் ரத்தத்தை ஆழ்ந்து உறிஞ்சிக் குடிக்கிறது… Continue Reading →
தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத கதை சொல்லலுக்கான உதாரணங்களாக உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கருணாநிதியின் குப்பைத் தொட்டி என்றொரு கதையில் குப்பைத்தொட்டி கதைசொல்லியாக வருகிறது. மனிதரல்லாத ஒரு… Continue Reading →
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம் வேலைக்குக் கூப்பிடச் செய்வதற்கென சில நளினங்களை அமுதா சொல்லிக் கொடுத்ததற்குப் பிரதிபலனாக அபிராமி தனக்கு வாங்கியிருந்த பாட்டிலிலிருந்து அமுதாவுக்கு ஊற்றிக் கொடுத்தாள்…. Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑