சகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன. மாவலியத்தை… Continue Reading →
மாவலியன் அரியணை அமரவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நிலம் அவன் வெல்வதற்காக காத்து நின்றது. தன் நிலம் நோக்கி மாவலியன் வருகிறான் என்று அறிந்ததுமே மன்னர் பலர் மணிமுடியை அரியணையில் வைத்து நகரொழிந்தனர். முமனகம் என்ற சிற்றரசின் தவைவன் “மாவலியனை மண்ணில் சாய்ப்பேன். என் உயிர் இவ்வுடல் நீங்காமல் அவன் என் நிலம் நுழைய … Continue Reading →
9 வெண்மை என்பது நிறமல்ல. அது முழுமை.நிறைவு. வலிமை. ஆவல். முனைப்பு. வெற்றி. புகழ். தேக்கம். அழிவு. வெண்மையென்றாவதால் வாழ்கின்றன உயிர்கள். பெரும் புல்வெளிகளால் சூழப்பட்ட அச்சிறு தேசம் அணுகிப் போரிட முடியாத இயற்கை அரண்களால் வளைக்கபட்டிருந்தது. குளிர் பரப்புகளுக்கு நடுவில் நின்றிருந்த அத்தேசத்தின் காலம் விடியலின் புணர்ச்சி போல முனைப்பற்ற இன்பம் கொண்டு தேங்கித் ததும்பி… Continue Reading →
8 அன்பு கொண்டொழுகுதலன்றி சுனதன் வேறேதும் அறிந்திருக்கவில்லை. குலம் காக்க வந்த தெய்வமென அவனை வணங்கியது மலை நோக்கி தினம் தினம் வந்த துயரவர் கூட்டம். முதலில் நிரை வகுத்து அவ்விடம் அடைந்த நூற்றியிருபது பேரும் மக்களை மலை நோக்கி கொண்டு வந்தனர். சமவெளி மட்டுமே கண்டிருந்த மக்கள் அம்மலை வாழ்வை விரும்பவில்லை. தங்கள் தலைவனென… Continue Reading →
7 ஆதியில் இருந்தது என்ன? அதுவும் அறிந்திருக்கவில்லை. அறியவில்லை என அறிந்த போது அறிதலாகி வந்த தன்னை அது உணர்ந்தது. அறிதலுக்கு முந்தைய கணத்தை மீட்டெடுக்க முயன்று முயன்று தோற்றது. அவிழ்த்துக் கொட்டி தன்னைத் தேடத் தொடங்கியது. யுகங்கள் கடந்த அந்தப் பெருந்தேடலில் புடவியென்றாகி அதில் புவியென நின்றது. அறிக! அறிதலின் வேட்கையில் எரிகிறது இப்புடவி…. Continue Reading →
6 அறிக நொடி நொடியாய் துயரை தனிமையை வலியை உணரும் உயிர்களால் உய்கிறது இவ்வுலகென. பாணன் தொடர்ந்தான். முப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு என்றழைக்கப்பட்ட பெரு மலையின் மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது எவர்தொடாமேடு. நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த ஆழிமாநாடு சுனத வனம் என்பதை கதைகளாய்… Continue Reading →
5 “அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக் கொள்ளட்டும் இத்தேசம். அறிக! அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென.” சவில்யத்தின் வணிக மன்றில் பாணன் ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி. சுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில் தனித்தலைந்து கொண்டிருந்தாள் ஆதிரை. அவளை அக்காடறியும். பிறந்தது… Continue Reading →
4 ஆதிரை மாரதிரன் தலை வீழ்த்தியவன்று சவில்ய கோட்டம் உறைந்திருந்தது. எந்த வித ஒற்றுச் செய்தியோ வதந்தியோ நகரில் பரவவில்லை. ஆதிரையின் படைவீரர்கள் அன்று முழுவதும் நகர் நுழைந்தவண்ணம் இருந்தனர். நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட மாரதிரன் காலாட்படை தளபதிகளின் ஆணை பெற முடியாமல் செயலற்று நின்றது. நள்ளிரவு நகர் புகுந்த கணபாரனின் குறும்படை ஆதிரையின் வீரர்களில்… Continue Reading →
3 “தொடங்கியது பெரும் யுத்தம். மண்ணில் நிகழ்ந்தவை அனைத்தும் இறைவனை கோபமுறச் செய்தன. மனிதன் வஞ்சம் நிறைந்தவன். ஆணை பெற்று ஆள வேண்டியவன் ஆணை பிறப்பித்தவனை வீழ்த்த நினைத்தான். மனித பலம் கூடிக் கொண்டே வந்தது. பலம் கூடுகையில் கடவுளின் கருணை சுரப்பான நீரின் பரப்பு குறையத் தொடங்கியது. இறைவனை எதிர்க்கும் மனிதனின் யுக்தி… Continue Reading →
2 அவ்விடியலை மோதமதி அவ்வாறு கற்பனை செய்திருக்கவில்லை. இறந்த போன ஆதிரையின் உடலை தான் ஏக்கத்தோடு பார்த்திருப்போம் என்றோ அல்லது கசக்கி எறியப்பட்டவளாக ஆதிரை விடியலில் அரண்மனையின் குறுவாயில் விட்டு பித்துப் பிடித்தவளென வெளியேறுவாள் என்றோ தான் நினைத்தாள். அக்கணம் தன்னை ஒன்றும் செய்ய இயலாத கருணையின் வடிவென நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑