Tag பெருஞ்சுழி (நாவல்)

பெருஞ்சுழி 21

அடர் மௌனம் கலையா பெருவிசைகளே ஒரு  சொல்லே உரைக்கும் பேராழிகளே நீள் மூச்சென அசையும்  தென்னைகளே நடுங்கிச் சிரிக்கும்  சிறு கொடிகளே நித்தியத்தில் நிற்கும்  நிழல்களே இருளான பெருங்கருணையே விடிந்தெழும்  பெருவல்லமையே முட்டி முளைக்கும்  விதைகளே முட்கள்  நிறைந்த கானகமே முடிவேயற்ற பெருவெளியே பணிகிறேன்  நெளியும்  சிறுபுழுவே ஒழுகும்  பனித்துளியே புரளும் மணற்துகளே அலையும்  வெண்முகிலே… Continue Reading →

பெருஞ்சுழி 20

திரைச்சீலைகள் அலையடித்த சாளரங்களை சில கணம்  நோக்கி நின்றார் மாவலியர். நெருப்பு  மையத்தை நெருங்கியிருந்தது. “இத்தருணம் காணவே மண் நுழைந்தேன்  என்றெண்ணி நிறைவுறுகிறேன் மைந்தா” என்றார்  மாவலியர். சுனதன்  தலை தூக்கினான். “ஆம்! நீ என் மைந்தன்  தான். என் கனவுகளில்  அனுதினமும்  கண்டுகொண்டிருந்தது உன்னைத்தான். நான்  இருக்க விழைந்ததும் நீயாகவே. மணந்தவனை மகனாக  பெண்… Continue Reading →

பெருஞ்சுழி 19

அனல் நெருங்குவதை  சமர்வர் உணர்ந்தார். அனிந்தரின்  பிரதானப் படைகளும்  அரண்மனை  நீங்கியிருந்தன. இருள்போர் என்ற முறையை குடிகள்  கையாண்டன. மாவலியத்தின்  விளிம்பு நிலைக் குடிகள்  அனைத்தும்  ஒன்றிணைந்து கொண்டே வந்தன. விளிம்பு மையம் நோக்கி முன்னேறத் தொடங்கியது. அனிந்தர்  அவர்களை நிறுத்த வேண்டிய  இடங்களை தெளிவாக வகுத்துக்  கொண்டார். ஆனால்  அவர்களின்  போர் முறைகள்  கணிக்க… Continue Reading →

பெருஞ்சுழி 18

சுனதன்  மாவலியம்  நுழைந்து எட்டாண்டுகள் கழிந்திருந்தன. அவனை கண்டடைய முடியாமல்  திணறினர் ஒற்றர்களும் அமைச்சர்களும். தடங்களை  அழித்துச் செல்லும்  காற்று போல அவன் நிகழ்ந்தான். வந்ததன் அடையாளமன்றி வரும்  திசையோ மீளும்  திசையோ இல்லாமல்  ஒழிந்தது அவன் பயணம். இருக்கும்  போதே இல்லாமல்  ஆகிக்  கொண்டிருக்கும்  அவனை நோக்கியவாறே மலையேறிக் கொண்டிருந்தார்  தெரிதர். “தெய்வங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறோம்… Continue Reading →

பெருஞ்சுழி 17

முது குலப் பூசகன் மஞ்சாளினியின் கதையைத் தொடங்கினான். அறிக! பெருந்தியாகமும் பெருந்துரோகமும் வேறல்ல என்று! குடை விரித்து தியாகம்  என்பதெழுகையில் ஆழத்து விதையென உறைகிறது துரோகம். இன்று  போலன்றி கிளைத்து விரிந்த விருச்சமாய் நின்றிருந்தது நம் குடி. மதியர்கள் என்றழைக்கப்பட்ட  நம் இனத்தின்  பேரழகியாய் தோன்றினாள் மஞ்சாளினி. சூழ்ந்த குடிகள்  யாவற்றிலும்  அவள் வயிறுதிக்கும் மகவு… Continue Reading →

பெருஞ்சுழி 16

சுனதனைத் தேடும்  பணி ரகசியமாக்கப்பட்டது. வலுப்போர் களத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்து குறிப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டன. அச்சம்பவத்தை கண்ட கண்டிருக்க வாய்ப்பிருந்த அனைவரும் அமைதியாக்கப்பட்டனர். தடமின்றி நடப்பவனை பின் தொடருதல் நடவாது. சுனதன்  தன்னை  எதுவாகவும் யாராகவும் கற்பனிக்கவில்லை. அதிகாரம்  அவசியமில்லாத லாபமற்ற நிலங்களை நோக்கி அவன் நடந்தான். அங்கு  அவனைத் தேடி  வர சமர்வரின் ஒற்றர்களுக்கு… Continue Reading →

பெருஞ்சுழி 15

மாவலியரின்  அவை வழக்கத்திற்கு  மாறானது. அவைக்கு மாவலியர்  வரும் வழக்கம்  கிடையாது. நீள் வட்ட வடிவிலிருந்த  அவை மையத்தில்  மாவலியர்  பீடம் எந்நேரமும்  ஒழிந்தே இருக்கும். தலைமை  சேனாதிபதி  அனிந்தரும் முதலமைச்சர்  சமர்வரும் அவை நிகழ்வுகளுக்கு தலைமை கொள்வர். மன்னனின்  அரியணைக்கு பின் புறம்  கருநிற திரைச்சீலைகள் படபடத்துக் கொண்டே இருக்கும். அதில்  தெரியும்  புள்ளிகள் … Continue Reading →

பெருஞ்சுழி 14

நிரத்துவனை  பின்  தொடர முடியாத  குதிரைகள் சோர்ந்து மண்  விழுந்தன. காற்றின்  திசையறிந்து விரைந்தது  நிரத்துவன்.  தன் மீதிருப்பவர்களை அது  சுமையெனக் கொண்டதாகத் தெரியவில்லை. சவுக்கு  மரங்களும்  பாக்கு  மரங்களும்  அடர்ந்து  வளர்ந்திருந்த  ஒரு கடற்கரை  சதுப்புக்  காட்டினுள்  நுழைந்தது  நிரத்துவன். கரும்பாறை குன்றுகளாக நிறைந்திருந்த  அவ்விடத்தில்  சுனதன்  கண்ணயர்ந்தான். தெரிதன்  கண் விழித்தான். என்ன … Continue Reading →

பெருஞ்சுழி 13

கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன்  நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி  மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர்  கொட்டடி பகலிலும்  இருண்டிருந்தது. தீப்பந்தங்களின்  சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு  ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது…. Continue Reading →

பெருஞ்சுழி 12

பாலை கடந்ததன் தடங்கள் தென்படத் தொடங்கின. மேற்கிலிருந்து  பறவைகள் கலைந்தெழும் ஒலி கேட்கத் தொடங்கியது. சுனதன்  தன் மனதில்  ஒரு இதம் பரவுவதை உணர்ந்தான். அதற்கென  தன்னை நொந்து கொண்டான். பாலையும்  சோலையும் வேறுபடுவதை ஆழ்மனம்  இன்னும்  உணர்கிறது என்ற எண்ணம்  அவனை துணுக்குறச் செய்தது. பசும் பரப்புகளைக் கண்டதும் நிரத்துவன்  துள்ளத் தொடங்கியது. மதீமம்… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑