“இப்பெருநிலம் இனி ஆழிமாநாடு என்றழைக்கப்படட்டும்” என சுனதன் உரைக்க தெரிதர் தொகுத்த ஆழிமாநாடு சாசனத்தின் கூறுகளை ஆதிரை உயர்ந்த குரலில் வாசித்தாள். சுனதர் இறந்த இடம் சவில்யத்தின் அண்டை தேசமான சுனதபாங்கத்தின் மேற்கெல்லையில் உள்ளது. அவ்விடம் நீங்கி மாவலியத்தின் தலைநகர் பகுதியாக இருந்த மைய நிலம் நோக்கி மூன்று மாதங்கள் நடந்தனர் துயரவர்கள். அதற்குள்ளாக… Continue Reading →
தெரிதரின் கண்களே அனைத்தும் சொல்லிவிட்டதனால் ஆதிரை ஏதும் கேட்கவில்லை. சுனதரை ஒரு முறை அவர் எலும்பு முறி படும் அளவிற்கு இறுக்கி அணைத்தாள் . தெரிதர் கை கூப்பி கண்ணீர் வழிய நின்றிருந்தார் சொல்லென எதுவும் அற்றவராய். சுனதரின் விரைத்துப் போயிருந்த உடலை தோளில் தூக்கிக் கொண்டாள் ஆதிரை. அருகிருந்த ஒரு மலையடிவாரத்தில் அவள் குழு ஓய்வெடுத்துக் … Continue Reading →
முதிய துயரவர்களை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஆதிரையின் தலைமையில் எழுநூறு பேர் கொண்ட குழுவொன்று சுனதவனம் கடந்து தெற்கு நோக்கி நடந்தது. இரண்டாண்டுகள் அவர்கள் நடந்தனர். நோயிலும் மூப்பிலும் பசியிலும் பலர் இறந்தனர். காமமும் அக்கூட்டத்தில் நிகழாமலில்லை. பிறப்பும் இறப்பிற்கிணையாக நிகழ்ந்தது. சுகத்யை நம்பிக்கை இழந்து விட்டிருந்தாள். வெறித்த விழிகளோடு தந்தையை தேடும் வெறி மட்டும் … Continue Reading →
சுகத்யை மகவுடன் குடியிருப்பு திரும்புவது கண்டு சுனத வனம் மகிழ்ந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. சுனதனும் மீளாத சமயத்தில் தனித்யரும் மாசறியானும் அடுத்தடுத்து இறந்தனர். அமைதியான வனமும் நிலையான உணவும் மக்கள் பெருக வழிவகுத்தன. மலை விட்டு கீழிறங்க பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. வலுத்தவர்களே மலையில் நீடிக்க முடியும் என்ற நிலை உருவானது. கற்றவர்கள் துரத்தப்பட்டனர். சிலர்… Continue Reading →
களிறு சுகத்யையை உள் காட்டினுள் கொண்டு சென்றது. அக்களிற்றின் பிளிறல் கேட்டு ஒரு பிடி அங்கு ஓடி வந்தது. வலியும் கோபமும் தெறிக்க சுகத்யை உறுமினாள். “என்னை வலி உணரச் செய்து விட்டான் அந்த சுனதன். இவ்வுலகின் மிகப் பெரிய அறிவிலி என்னைப் புணர்வதற்கா நான் உடல் மலர்ந்தேன்? எங்கிருக்கிறாயடா? உன்னை ஒரு முறை … Continue Reading →
சுனதனின் மார்பில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் சுகத்யை. சுனதன் சுகத்யையை மணம் கொள்ளவிருப்பதை அறிந்து சுனத வனத்தில் ஒரு மென் அதிர்ச்சி முதலில் ஏற்பட்டது. “ஊழிக்கு பின்னர் விழுந்த முதல் விதை. அது எழுக” என்றாள் முகத்தில் கண்ணீர் வழிய ஒரு முதியவள். விழவுகளின் அவசியத்தை கண் முன் கண்டான் சுனதன். பெருந்துன்பங்களை விழவுகள்… Continue Reading →
மாசறியானின் மாணவரான தனித்யர் பெருஞ்சுழி ஏற்பட்டதற்கான காரணங்களை சுனதரின் குறிப்புச் சொற்கள் வழியாக உணர்ந்து நூலாக எழுதினார். சுனதர் அவர் தவிர்த்து யாரிடமும் பேசவில்லை. மாவலியம் என்ற முழுநிலப்பரப்பும் மூழ்கி மீண்டு கொண்டிருந்தது. தனித்யரின் மகள் சுகத்யை சுனதரின் குடிலுக்கு ஒருநாள் சென்றாள். அவள் பிறந்த போதே சுனதர் காடு நீங்கி மாவலியம் சென்றிருந்தார். அவர்… Continue Reading →
சுனதர் நடந்தார். திரண்யத்தின் அருகே ஆழி உள் வாங்கியிருந்தது. மேகக் கூட்டங்கள் மண்ணில் நேரே இறங்குவது போல அறுபடாமல் மழை பெய்தது. பனித்துருவல்கள் மழையினூடாக மண்ணிறங்கின. ஏழு நாட்கள் மழையில் நடந்தார் சுனதர். பின் கால் எடுத்து நகரும் வேட்டை மிருகமென ஆழி பின்னகர்ந்தது. மழை குழைத்த சதுப்பினூடாக சுனதர் நீந்தினார். நிலத்தில் நீந்துதல். நினைவு… Continue Reading →
கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர். தெரிதர் ஏதும் ஆற்ற இயலாமல் பார்த்து நின்றார். அவரின் அவசரம் கண்டு பலர் சந்தேகித்தனர். “மதீமத்தின் கரைகளில் உள்ள அடர் கானங்களை அழித்து அங்கு பயிர் சாகுபடி செய்ய மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்” என்று பேசிக் கொண்டனர். “குருதி விடாய் அடங்காத தெய்வங்களுக்கு பலி கொடுப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்” என்றனர்…. Continue Reading →
சுனதர் சொன்னார். விகண்யம் என்ற பெருமலையின் அடிவாரம் வரையே மாவலியத்தின் குடிகள் பரவியிருக்கின்றன. பெருமழை தொடங்கும் மாதங்களுக்கு முன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பெருங்காற்று வீசும். விகண்யம் ஒரு உறங்கும் எரிமலை. மூன்று மாதங்களுக்கு முன் விகண்யத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. காற்று வீசத் தொடங்காததால் சாம்பலும் எரித்துகள்களும் தெற்கு நோக்கி பரவவில்லை. இருந்தும் மலையடிவாரங்களுக்கு… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑