Category சிறுகதை

ஆழத்தில் மிதப்பது (சிறுகதை)

1 ஈரத்துண்டின் நுனிநூற்கற்றைகளில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ அந்த நுனி தான் நீரினை உற்பத்தி செய்வதுபோல. யாருக்கும் தெரியாமல் எட்டிப் பார்த்து பிறர் கண்படும் முன்னே சட்டென கடந்து மற்றோர் இடம் மறையும் சிறுவன் போல நீர்த்துளிகள் துண்டின் நுனியில் இருந்து எட்டிப்பார்த்த மறுகணமே மண்ணுக்கு வந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நீர் சொட்டியதால்… Continue Reading →

பரிசுப்பொருள் (சிறுகதை)

பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கி நின்று மோனிகா சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு எடையின்மையை விடுதலையை உணர முடிந்தது. வெறுப்புடன் புன்னகைத்துக் கொண்டாள். சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவு உடைய யாரோ தெரிந்தனர். சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான்…. Continue Reading →

மையல் (சிறுகதை)

“ச்சூப்ரைச்சர்” என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் “ச்சூப்ரைச்சர்”. இம்முறை மேலு‌ம் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம்… Continue Reading →

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் (சிறுகதை)

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்

அலுங்கலின் நடுக்கம் – சிறுகதை

பதாகையில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை அலுங்கலின் நடுக்கம்

தேனுலகு – 2

சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆசுவாசமடைவாள் முல்லை. மீண்டும் அச்சத்தத்தை கேட்டுவிடும் போது மனதை ஒரு பயம் கவ்விப் பிடிக்கும். காட்சிகள் மங்கலாகவேத் தெரிந்தன. அவளால் கண்களையும்… Continue Reading →

தேனுலகு

மழையே இல்லாமல் போயிருந்தது. கடல்கள்  வற்றியதால் சேறு கொழகொழவென எங்கும் நிறைந்து கிடந்தது. இறந்த மீன்களை உண்டு பசி தீர்த்துக் கொள்ள விரும்பிய பெரிய நாரைகள் வற்றிய கடலில் நீளமான கால்களை வைத்து தரையிரங்கின. களி மண் கால்களை அப்பிப் பிடித்தது. எழுந்து பறந்த போது அப்பிய சேறு உதிரத் தொடங்கியது. ஒரே இடம் நோக்கியே… Continue Reading →

நீச பூசை – சிறுகதை

பாண்டவையின் கரைகள் நெருங்கி வளர்ந்த மரங்களால் இருளடைந்து உயர்ந்திருக்கும். வெயிலுக்குதந்தவாறு உடல் நெளித்து பாண்டவையின் மையம் கடந்து நீண்டிருந்தது உடலில் பெரு வளையங்கள் பரவிய தென்னை. மேகங்களின்றி தனித்திருக்கும் உச்சியின் சூரியனை நோக்குவதற்கென சேவுராயன் வழக்கம் போல் அத்தென்னையின் உடல் மையத்திற்கு வந்து நின்றான்.இடுப்பில் கை வைத்து அண்ணாந்து நோக்கி கண்கள் உச்சியில் நிலைத்த போது… Continue Reading →

மின்னற்கணம் – சிறுகதை

செவியை அடைக்கும் கனத்த மௌனத்தில் கீறல் விழுந்தது போல ஒருவர் அடிவயிற்றிலிருந்து குமட்டுவதும் எரிச்சல் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு குழந்தை அழுவதும் கேட்டன. மாதாவிற்கும் குழந்தை ஏசுவுக்கும் கத்தரிப்பூ நிறப் பொன் சரிகை பட்டுடுத்தி பிரபலமான “நமச்சிவாய நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா” பாடல் மெட்டில் “தேவன் துதி” பாடியபடியே காவி உடுத்திய ஆண்களும் பெண்களும்… Continue Reading →

மீட்பன் – சிறுகதை

காட்டின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு மனிதர்களை வேட்டையாடி உண்ணும் புலியினை விட பரிதாபகரமான மிருகம் எது? இல்லை. தவறான தொடக்கம். விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு புலியுடன் என்னை ஒப்பிட முடியாது. ஏனெனில் கேவலம் மனிதர்களை வேட்டையாடும் அந்தப் புலி நிச்சயம் ஒரு சமயம் அக்காட்டில் விரைவுடனும் சீற்றத்துடனும் வேட்டையாடி இருக்கும். நான் அவ்வாறல்ல. விளிம்பிலிருந்து மையத்தை எட்டி… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑