சுரேஷ் பிரதீப்பின் சொட்டுகள் கதையின் நாயகி வளர்ந்து முதல் வேலைக்குப் போகும்வரை ஷவரில் குளித்ததில்லை. பக்கெட்டில் சேர்த்து வைத்த தண்ணீரில் மட்டுமே குளித்துவந்தவள். வேகமாக ஓடும் ஆற்றில், அருவியில் என நீரின் இயல்பான ஓட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டது கிடையாது. அவளது எந்த செயலும் அம்மாவைக் கோபப்படுத்தும். அதற்கான காரணங்கள் கதையில் இல்லாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. குடும்ப வாழ்வினால் வீழ்ச்சியைச் சந்தித்த அவளது ஆற்றாமை கரிப்பாக எல்லார் மீதும் முடிகிறது வெளிப்படுகிறது. சிறு… Continue Reading →
நதிக்கரை நிகழ்வு நான்கு நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10.06.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால எழுத்தாளர்களாகிய K N செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஷ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சகோதரிகள் குடித்து குடித்து தனக்கு வரும் பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச்… Continue Reading →
(ஒளிர்நிழல் நாவலுக்கு மதிப்புரை, எம்.கோபாலகிருஷ்ணன், காலச்சுவடு இதழ், ஜூன் 2018) எதையேனும் சார்ந்திருகவித்துவம், தத்துவம்காதல், சங்கீதம்,இங்கிதம்… இப்படிஎதன் மீதேனும் சாய்ந்திருஇல்லையேல்உலகம் காணாமல் போய்விடும். – வண்ணநிலவன் வாசகனை முதல் வரியிலிருந்தே தன்னுள் அனுமதிக்காத தீர்மானத்தையும் இறுக்கத்தையும் கொண்டுள்ளது சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ நாவல். எந்த நொடியிலும் வாசகன் நாவலில் தன்னை மறந்து ஒன்றிவிடக்கூடாது என்ற… Continue Reading →
ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த ‘ஒளிர்நிழல்’ நாவலை வாசித்தேன். நாவலின் செறிவான மொழியும், அதனுடைய மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. நாவலின் பல இடங்களில்… Continue Reading →
அபி-சிறுகதை அன்பு சுரேஷ் பிரதீப்பிற்கு, நலமா? அபி சிறுகதை வாசித்தேன். நன்றாக இருந்தது. அக சிக்கல்களை அழகியலோடு சொல்லியிருக்கிறீர்கள். உரையாடல்களும் சம்பவங்களும் யாருக்கிடையே இடம் பெறுகின்றன என்பதை விளக்காதிருந்ததே கதையை மேலும் உன்னிப்பாக வாசிக்க தூண்டியது. அபி என்னும் கதை என்ற ரீதியில் பார்க்கையில் சிறப்பாகவே இருந்தது ஆயினும் ஏற்கனவே உங்கள் கதைகளின் சாயல் இதிலும்… Continue Reading →
அபி – சிறுகதை அன்பின் சுரேஷ் இன்று எதேச்சையாக உங்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா, (அக்கா) கருவுற்றிருந்தபோது அப்பா வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில்… Continue Reading →
அபி – சிறுகதை அபி நவீன கற்பு உடைந்த சீதை!அவள் ஒரு தொடர்கதை கவிதாவின் நீட்சி!அபி ஶ்ரீராமை மணமுறிவு செய்து விட்டு,சரணுடன் பழகி சரணுடனும் அவள் பிரிவு கொண்டு அவன் திருமணத்துக்கு சென்று வாழ்த்தி விட்டு அர்ச்சானாவிடம் வேலையை விட முடியாது சேஃப்டிக்கு இருக்கட்டும் என கூறுவதில் சேஃப்டி என்பது ஒரு பெண்ணுக்கு வேலையா,இல்லை தன்னை… Continue Reading →
446 A – சிறுகதை திரு சுரேஷ் அவர்களுக்கு வணக்கங்கள் 446 A – வாசித்தேன் , பதின் பருவம் உச்சம் பெரும் வயதில் ஒரு இளைஞன் மனதில் துளிர்விடும் , பெண் சார்ந்த இச்சைகளும் , அவள் உடல் சார்ந்து அவனுக்கு ஏற்படும் பருவக் கவர்ச்சியும் , அதன் கொண்டு அவன் சிந்தையில் ஏற்படும்… Continue Reading →
446 A – சிறுகதை அன்பின் சுரேஷ் நலமாக இருக்கிறீர்களா தம்பி ? நேற்றுடன் கல்லூரி முடிந்து இன்று தேர்வுகள் துவங்கின. காலை மதியம் என எனக்கு இரட்டை ட்யூட்டி இருந்தது. காலையில் தேர்வு அறையில் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு 50 நிமிடங்கள் முன்னரே எழுதி முடித்துவிட்டார்கள். உடன் தரைத்தளத்திற்கு இறங்கி விடைத்தாள்களைக்கொடுக்க அவசரப்படாமல்,காலியாயிருந்த, அந்த தேர்வறையாக மாறியிருந்த வகுப்பறையில் ஒரு… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு வணக்கம் ஒளிர் நிழல் படித்து முடித்தவுடன் மிகவும் சீண்டப்பட்டவனாகவே உணர்ந்தேன் – சரியான காரணம் எதுவும் இன்றி ஒரு கொந்தளிப்பான மனநிலையை அடைந்தேன் – சற்று சுதாரித்து iஒரு விதமாய் என் எண்ணங்களை தொகுத்து இந்த மின்னஞ்சல் எழுதத் தொடங்குகிறேன், இம்மின்னஞ்சலை தங்கள் நாவல் குறித்த விமர்சனமாகவும் , நாவல்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑