பூரணி சிறுகதை அன்புள்ள சுரேஷ் பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன். ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள்… Continue Reading →
தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத கதை சொல்லலுக்கான உதாரணங்களாக உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கருணாநிதியின் குப்பைத் தொட்டி என்றொரு கதையில் குப்பைத்தொட்டி கதைசொல்லியாக வருகிறது. மனிதரல்லாத ஒரு… Continue Reading →
தி.ஜானகிராமனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல் கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம், பரதேசி வந்தான், கோயம்புத்தூர் பவபூதி, பஞ்சத்து ஆண்டி, குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது…. Continue Reading →
12 MAY 2020 (2.02AM) Dei thoonkittiya illa di 🙂 Mani rendaguthu. Innum thoongama enna da panra En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam? Enakku hubby irukkan athanala thoongala 🙁 Enna pannineenga Ellam night la panrathu than (அவள் போர்வைக்கு… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு, நாவல் வாசித்த பின்னர் ‘ஒளிர்நிழல்’ பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன். அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது. அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன். புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு. அதில் அந்த… Continue Reading →
கற்றாழைக் கிணறு – சிறுகதை கற்றாழைக் கிணறு சிறுகதை குறித்து அரவிந்தன் அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு: இரவு நேரங்களில் பேய் கதை கேட்பதே ஒரு பரவச உணர்வு. அதை விட ஒரு படி மேல் நாட்டார் தெய்வங்களின் கதை கேட்பது.அவற்றை வழிபடும் முறை ஒரு அமானுஷ்ய நிகழ்வே.சுநில் அவர்கள் ‘குருதி சோறு ‘ கதையில்… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு: நான் ஐந்து வயது குழந்தை இலக்கியத்தில். சில தினங்களுக்கு முன்பு முகநூலில் உலாவுகையில் உங்கள் ‘ரக்த மணம்’ கதையை படிக்க நேர்ந்தது. சற்று முன்னதாகவே நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. கதையின் முடிவிலிருந்த விலாசத்தை பார்த்துவிட்டு துணுக்குற்றேன். பின்னர் யூட்டூபில் உங்கள் உரைகள் அனைத்தையும் பார்த்தேன்…. Continue Reading →
கோபிகிருஷ்ணன் சிறுகதைகள் முழுத்தொகுப்பினை வாசித்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ அலையின் உச்ச எழுத்தாளர்களுக்கும் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ,கோணங்கி போன்ற பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட தலைமுறைக்கும் இடைப்பட்டவர். ஆகவே இவ்விரு போக்குகளின் தன்மைகளையுமே கோபிகிருஷ்ணனின் கதைகளில் காணமுடிகிறது. நவீனத்துவத்தின் விரக்தியும் சலிப்பும் அவநம்பிக்கையும் கதைகளுக்குள் ஒலித்தாலும் அவற்றை மீறிச்செல்லும் எத்தனமும் கதைகளில் தெரிகிறது…. Continue Reading →
1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய… Continue Reading →
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை தொகுப்புக்கான விமர்சனம் சிறுகதைகள் குறித்த ஒரு விவாதத்தை தொடங்குவதென்றாலும் ஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் தமிழ்ச் சிறுகதை மரபு வளமானது என்ற வரியை சொல்லித் தொடங்குவது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. இப்படிச் சொல்ல காரணங்கள் இல்லாமல் இல்லை. தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் வலுவான சிறுகதை ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். பல்வேற வகைமைகளில்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑