1 பொதுவாக ஒரு முன்னோடி படைப்பாளியைப்பற்றிப் பேசும்போது அவருடைய தனித்துவமான ‘பங்களிப்பு’ என்று ஒன்றைக் குறிப்பிடுவோம். பின்னாட்களில் ஒரு படைப்பாளி நினைக்கப்படுவதே அந்தப் பங்களிப்பினால்தான். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை விரிவுபடுத்தினார், மௌனி அகவயத் தருணங்களை மொழியில் வசப்படுத்த முயன்றார், சிறுகதை மொழியை நவீனப்படுத்தியதில் ந. பிச்சமூர்த்தியின் பங்களிப்பு அதிகம், அசோகமித்திரன் எளிய சித்தரிப்புகள் ஊடாக குறைந்த சொற்களில்… Continue Reading →
வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ… Continue Reading →
‘அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்’ என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா ‘விடுடி அவன’ என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம்… Continue Reading →
டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன். பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி ‘வெஸ்டிபியூல்’ என்றான். ‘என்னது?’ பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன்…. Continue Reading →
இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக்… Continue Reading →
ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின் விளிம்பில் உள்ள கூரிய நீட்சிகள் வாயோரங்களைக் கிழிக்க நாயின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்குகிறது. தன் ரத்தத்தை ஆழ்ந்து உறிஞ்சிக் குடிக்கிறது… Continue Reading →
தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று ‘வெச்சுக்கய்யா’ என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக்… Continue Reading →
அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலை முன்வைத்து என் நண்பர் ஒருவர் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அரசுப்பணியில் இருப்பவர். திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறார். அவருடன் இணைந்து சில இடங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. அப்படி ஒன்றாகச் சென்ற இடங்களில் அவருடைய நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. நட்பினைப் பேணுவதில் ஏறக்குறைய எனக்கு… Continue Reading →
1 மேசையைப் பூட்டி எழுந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் மறுநாள் அலுவலகம் விடுமுறை என்பதால் தோன்றும் மென்குதூகலம் மனதில் பரவியது. வாசலுக்கு வந்தபோது கான்கிரீட் கட்டடம் அளித்திருந்த தட்பவெட்பம் சற்று மாறி தோலில் குளிர்ச்சியை உணர்ந்தபோது குதூகலம் சற்று கூடுவதாக உணர்ந்தேன். கூடிய மகிழ்வினை யாரும் கண்காணிக்கிறார்களா என்ற எண்ணம் மனதில் எழுந்த கணமே அலைபேசி ஒலித்தது…. Continue Reading →
1 “உண்மையாகவா?” “ஆமாம்” “என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகவே நீங்கள் நம் தேசத்தைக் கடந்து உலகின் வேறு எந்தப் பகுதிக்கும் சென்றதில்லையா?” “இந்த குற்றத்துக்காக எனக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று நம்புகிறேன்” “விளையாடாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சாயமணிந்த உதடுகளைத் திறந்து பளீரென்றிருக்கும் வெண்ணிற பற்கள் தெரியும்படி விரிந்த கண்கள் சற்றே சுருங்கும்படி எங்கள் வெளியுறவுத்துறை… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑