7 ஆதியில் இருந்தது என்ன? அதுவும் அறிந்திருக்கவில்லை. அறியவில்லை என அறிந்த போது அறிதலாகி வந்த தன்னை அது உணர்ந்தது. அறிதலுக்கு முந்தைய கணத்தை மீட்டெடுக்க முயன்று முயன்று தோற்றது. அவிழ்த்துக் கொட்டி தன்னைத் தேடத் தொடங்கியது. யுகங்கள் கடந்த அந்தப் பெருந்தேடலில் புடவியென்றாகி அதில் புவியென நின்றது. அறிக! அறிதலின் வேட்கையில் எரிகிறது இப்புடவி…. Continue Reading →
6 அறிக நொடி நொடியாய் துயரை தனிமையை வலியை உணரும் உயிர்களால் உய்கிறது இவ்வுலகென. பாணன் தொடர்ந்தான். முப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு என்றழைக்கப்பட்ட பெரு மலையின் மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது எவர்தொடாமேடு. நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த ஆழிமாநாடு சுனத வனம் என்பதை கதைகளாய்… Continue Reading →
5 “அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக் கொள்ளட்டும் இத்தேசம். அறிக! அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென.” சவில்யத்தின் வணிக மன்றில் பாணன் ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி. சுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில் தனித்தலைந்து கொண்டிருந்தாள் ஆதிரை. அவளை அக்காடறியும். பிறந்தது… Continue Reading →
4 ஆதிரை மாரதிரன் தலை வீழ்த்தியவன்று சவில்ய கோட்டம் உறைந்திருந்தது. எந்த வித ஒற்றுச் செய்தியோ வதந்தியோ நகரில் பரவவில்லை. ஆதிரையின் படைவீரர்கள் அன்று முழுவதும் நகர் நுழைந்தவண்ணம் இருந்தனர். நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட மாரதிரன் காலாட்படை தளபதிகளின் ஆணை பெற முடியாமல் செயலற்று நின்றது. நள்ளிரவு நகர் புகுந்த கணபாரனின் குறும்படை ஆதிரையின் வீரர்களில்… Continue Reading →
3 “தொடங்கியது பெரும் யுத்தம். மண்ணில் நிகழ்ந்தவை அனைத்தும் இறைவனை கோபமுறச் செய்தன. மனிதன் வஞ்சம் நிறைந்தவன். ஆணை பெற்று ஆள வேண்டியவன் ஆணை பிறப்பித்தவனை வீழ்த்த நினைத்தான். மனித பலம் கூடிக் கொண்டே வந்தது. பலம் கூடுகையில் கடவுளின் கருணை சுரப்பான நீரின் பரப்பு குறையத் தொடங்கியது. இறைவனை எதிர்க்கும் மனிதனின் யுக்தி… Continue Reading →
2 அவ்விடியலை மோதமதி அவ்வாறு கற்பனை செய்திருக்கவில்லை. இறந்த போன ஆதிரையின் உடலை தான் ஏக்கத்தோடு பார்த்திருப்போம் என்றோ அல்லது கசக்கி எறியப்பட்டவளாக ஆதிரை விடியலில் அரண்மனையின் குறுவாயில் விட்டு பித்துப் பிடித்தவளென வெளியேறுவாள் என்றோ தான் நினைத்தாள். அக்கணம் தன்னை ஒன்றும் செய்ய இயலாத கருணையின் வடிவென நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று… Continue Reading →
பெருஞ்சுழி 1 “வெற்றி முழங்கட்டும் எண்குடி வென்று மண்பகை கொன்று விண் புகழ் நோக்கும் கோவே வெற்றி முழங்கட்டும் உன் வெற்றி முழங்கட்டும் விண் அதிரட்டும் முழக்கம் விண்ணை வெல்லட்டும்” மாரதிரன் சபையில் எட்டு நாழிகை நேரம் இடைவிடாமல் பாடிய ஆதிரை இவ்வரிகளுடன் தன் கிணையை தாழ்த்தியபோது எழுந்தமைந்தது நிறைமாதத்தில் மேடிட்டிருந்த அவள் வயிறு. கூர்ந்த… Continue Reading →
நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள் பெருஞ்சுழி என்ற தலைப்பிட்ட இக்கதை தொகுதியின் வடிவம் நாவலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். கற்பனையில் உருவாக்கப்பட்ட… Continue Reading →
உயர எறியப்பட்டவளாக உணர்ந்த மறுகணம் மண்ணில் இருந்தேன். என்னுடன் நான் மட்டும். எங்கே நின்று கொண்டிருக்கிறேன். எதிரே ஏதேதோ தெரிகிறது. ஏதேதோ என்றா சொன்னேன். இல்லை யாவும் நான் அறிந்தது தான். யாவும் என எப்படி சொல்ல முடியும். எல்லாவற்றின் வழியாகவும் என்னையே அறிந்த கொண்டிருந்த நான் பார்த்தது எல்லாம் நானே. நாணற்புதரில் நெளிந்த… Continue Reading →
அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவலின் கதை அல்லது “கரு” என்ன என்று அந்த நாவலைப் பற்றி சொல்லப் போய் யாரும் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்நாவல் குறித்து எழுதி விடலாம் என்று முடிவு செய்து கொண்ட பின் எழுதுகிறேன். விரைவாக வாசிப்பவர்கள் அரை நாளில் வாசித்துவிடக் கூடிய அளவிற்கான சிறிய படைப்பு கரைந்த நிழல்கள்…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑