Category இலக்கியம்

பெருஞ்சுழி 24

கூட்டம் கூட்டமாக  இடம் பெயர்ந்தனர். தெரிதர்  ஏதும்  ஆற்ற இயலாமல்  பார்த்து நின்றார். அவரின்  அவசரம்  கண்டு பலர்  சந்தேகித்தனர். “மதீமத்தின் கரைகளில்  உள்ள அடர் கானங்களை அழித்து அங்கு பயிர் சாகுபடி  செய்ய மக்கள்  அழைத்துச்  செல்லப்படுகிறார்கள்” என்று  பேசிக் கொண்டனர். “குருதி  விடாய் அடங்காத  தெய்வங்களுக்கு பலி கொடுப்பதற்காக அழைத்துச்  செல்லப்படுகின்றனர்” என்றனர்…. Continue Reading →

பெருஞ்சுழி 23

சுனதர் சொன்னார். விகண்யம்  என்ற பெருமலையின் அடிவாரம்  வரையே மாவலியத்தின்  குடிகள்  பரவியிருக்கின்றன. பெருமழை தொடங்கும்  மாதங்களுக்கு  முன் வடக்கிலிருந்து தெற்கு  நோக்கி பெருங்காற்று வீசும். விகண்யம்  ஒரு உறங்கும்  எரிமலை. மூன்று மாதங்களுக்கு  முன்  விகண்யத்தில் முதல்  வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. காற்று வீசத் தொடங்காததால் சாம்பலும் எரித்துகள்களும் தெற்கு  நோக்கி பரவவில்லை. இருந்தும்  மலையடிவாரங்களுக்கு… Continue Reading →

வெள்ளையானை – நாவல் விமர்சனம்

(ஜெயமோகன் தளத்தில் முதலில் வெளியானது) அன்புடன் ஆசிரியருக்கு         வெகு நாட்களாக  பதிவு செய்து காத்திருந்து நண்பனின்  சகோதரன்  வெள்ளையானை  வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் “கையிருப்பு  இல்லை” என்றே பதில்  கிடைத்தது. ஒரு நூலினை கையால்  தொடும்  போதே அதனுடன்  நம் உறவு தொடங்கி விடுகிறது  என்று  எண்ண வைத்தது… Continue Reading →

பெருஞ்சுழி 22

நிகரெடை மட்டுமே  தராசு  முள்ளை நிறுத்தி  வைக்க முடியும். தெரிதர் உணர்ந்தார். ஒரு நாள்  சுனதன்  மீண்டு வருவான் என்று  அவர் நம்பவில்லை  உணர்ந்திருந்தார். மாவலியம் மெல்ல மெல்ல  தன் போக்கினை  மாற்றிக் கொண்டிருந்தது. மதீமத்திற்கு கரையமைக்கும் வேலைகள்  நிறைவடைந்திருந்தன. பதினோறாண்டுகள் கடந்திருந்தன சுனதன்   மாவலியம்  நீங்கி. அவன் விண்ணடைந்தார் என்றனர் சிலர். இயற்கையில் கலந்தார்… Continue Reading →

பெருஞ்சுழி 21

அடர் மௌனம் கலையா பெருவிசைகளே ஒரு  சொல்லே உரைக்கும் பேராழிகளே நீள் மூச்சென அசையும்  தென்னைகளே நடுங்கிச் சிரிக்கும்  சிறு கொடிகளே நித்தியத்தில் நிற்கும்  நிழல்களே இருளான பெருங்கருணையே விடிந்தெழும்  பெருவல்லமையே முட்டி முளைக்கும்  விதைகளே முட்கள்  நிறைந்த கானகமே முடிவேயற்ற பெருவெளியே பணிகிறேன்  நெளியும்  சிறுபுழுவே ஒழுகும்  பனித்துளியே புரளும் மணற்துகளே அலையும்  வெண்முகிலே… Continue Reading →

பெருஞ்சுழி 20

திரைச்சீலைகள் அலையடித்த சாளரங்களை சில கணம்  நோக்கி நின்றார் மாவலியர். நெருப்பு  மையத்தை நெருங்கியிருந்தது. “இத்தருணம் காணவே மண் நுழைந்தேன்  என்றெண்ணி நிறைவுறுகிறேன் மைந்தா” என்றார்  மாவலியர். சுனதன்  தலை தூக்கினான். “ஆம்! நீ என் மைந்தன்  தான். என் கனவுகளில்  அனுதினமும்  கண்டுகொண்டிருந்தது உன்னைத்தான். நான்  இருக்க விழைந்ததும் நீயாகவே. மணந்தவனை மகனாக  பெண்… Continue Reading →

பெருஞ்சுழி 19

அனல் நெருங்குவதை  சமர்வர் உணர்ந்தார். அனிந்தரின்  பிரதானப் படைகளும்  அரண்மனை  நீங்கியிருந்தன. இருள்போர் என்ற முறையை குடிகள்  கையாண்டன. மாவலியத்தின்  விளிம்பு நிலைக் குடிகள்  அனைத்தும்  ஒன்றிணைந்து கொண்டே வந்தன. விளிம்பு மையம் நோக்கி முன்னேறத் தொடங்கியது. அனிந்தர்  அவர்களை நிறுத்த வேண்டிய  இடங்களை தெளிவாக வகுத்துக்  கொண்டார். ஆனால்  அவர்களின்  போர் முறைகள்  கணிக்க… Continue Reading →

பெருஞ்சுழி 18

சுனதன்  மாவலியம்  நுழைந்து எட்டாண்டுகள் கழிந்திருந்தன. அவனை கண்டடைய முடியாமல்  திணறினர் ஒற்றர்களும் அமைச்சர்களும். தடங்களை  அழித்துச் செல்லும்  காற்று போல அவன் நிகழ்ந்தான். வந்ததன் அடையாளமன்றி வரும்  திசையோ மீளும்  திசையோ இல்லாமல்  ஒழிந்தது அவன் பயணம். இருக்கும்  போதே இல்லாமல்  ஆகிக்  கொண்டிருக்கும்  அவனை நோக்கியவாறே மலையேறிக் கொண்டிருந்தார்  தெரிதர். “தெய்வங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறோம்… Continue Reading →

பெருஞ்சுழி 17

முது குலப் பூசகன் மஞ்சாளினியின் கதையைத் தொடங்கினான். அறிக! பெருந்தியாகமும் பெருந்துரோகமும் வேறல்ல என்று! குடை விரித்து தியாகம்  என்பதெழுகையில் ஆழத்து விதையென உறைகிறது துரோகம். இன்று  போலன்றி கிளைத்து விரிந்த விருச்சமாய் நின்றிருந்தது நம் குடி. மதியர்கள் என்றழைக்கப்பட்ட  நம் இனத்தின்  பேரழகியாய் தோன்றினாள் மஞ்சாளினி. சூழ்ந்த குடிகள்  யாவற்றிலும்  அவள் வயிறுதிக்கும் மகவு… Continue Reading →

பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் – ஒரு வாசிப்பனுபவம்

வாசகர்கள்  மீது கருணையே இல்லாத  எழுத்தாளராக  இருக்கிறார்  யுவன்  சந்திரசேகர். கொஞ்சம்  கவனம்  விலகினாலும்  புரியாமல்  போய் விடுகிற படைப்பு  பகடையாட்டம். இந்திய  சீன திபெத்  எல்லைகளில் அமைந்த புனைவு நிலமான ஸோமிட்ஸியா என்ற சிறு “சாம்ராஜ்யம்” தான்  கதைக்களம். உலகம்  தொடங்கியது முதல்  உலகப் போர்கள் வரை தொட்டுச் செல்லும்  படைப்பு. சுந்தர ராமசாமியின் … Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑