Category இலக்கியம்

கபாலி – என் விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கு முன் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய  “ரூட்ஸ்” அமெரிக்காவில் ஒரு தொலைத்தொடராக (serial) எடுக்கப்பட்டது. ஒரு கருப்பின இளைஞன் பண்ணை அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட தன் மூதாதையர் அடைந்த இன்னல்களை கண்டடைவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவை உலுக்கிய ஒரு தொடராக அது இருந்ததாகவும் அந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் புறப்பட இருந்த விமானங்களின்… Continue Reading →

வெண்முரசு – மறு வாசிப்பு (முதற்கனல் முதல் பிரயாகை வரை)

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு… Continue Reading →

பெருஞ்சுழி 50

உடல் விரித்துப் படுத்திருந்தான் அரிமாதரன். வெட்டுண்ட தழும்புகள்  அணி செய்வது போல உடல் முழுக்க பரவியிருந்தன. அரிமாதரன்  விழித்த போது  இரவில்  இசைத்த  பாணர்கள்  அனைவரும்  புறப்பட்டிருந்தனர். எழுந்த  கணத்தில்  அரிமாதரனுக்கு  சுயம் நினைவிலில்லை. தேர்தட்டில்  ஆதிரையை பார்த்து நிற்பதும் சவில்யம்  சுனதபாங்கம்  ஆநிலவாயில்  திருமீடம்  என நான்கு தேசங்களும்  இணைக்கப்பட்டு சுனதம் என்ற ஒற்றை… Continue Reading →

பெருஞ்சுழி 49

கருமை என்பது முடிவின்மை. மின்னல்களை ஒளித்து வைத்திருக்கும்  மேகங்களில் இளங்கருமை. தலைமுறைகளை விதைத்து வைத்திருக்கும் கருவறையின்  அடர்கருமை. பேரழகை காட்டி நிற்கிறது இவளின் மென்கருமை. நெளியும்  நீள் நாகங்களென சுழல்கின்றன கரங்கள். அசையா நெடுநீள் விழிகளில் அவற்றின்  மேலெழுந்த புருவங்களில் கரும்பளிங்கென மின்னும்  நெற்றியில் நில்லாது வழிகிறது அவளழகு. மோதிச் சிதறும் சிரங்கள்  வழிந்தொழுகும் வெங்குருதி பிளிறிச்… Continue Reading →

பெருஞ்சுழி 48

புலரியின் முதற்கதிர் மண்ணை அடைந்தபோது புகிந்தத்தின்  அரண்மனையைச் சூழ்ந்து கூடாரம்  அமைத்திருந்த வன்தோளனின்  படைகளுக்கு  அவர்கள்  சுற்றி வளைக்கப்பட்டிருந்தது புரிந்தது. கணபாரரை வன்தோளன்  பெருமிதத்துடன்  உணர்ந்தான். சவில்யத்தின்  பிரதானப்படை முழுவதையும் புகிந்தத்தின்  கிழக்கில்  விரிந்திருந்த ஆழியை நோக்கி அனுப்பிவிட்டு அங்கிருந்து படைகளின் ஒரு பகுதியை சதுப்புக்காடுகள் வழியாக மேற்கே பொட்டல்  நோக்கி அனுப்பியிருந்தார் கணபாரர். ஆதிரை… Continue Reading →

பெருஞ்சுழி 47

முதல் நாள் அந்தியில் போர் முரசம் முழங்கியபோது முக்கூட்டு  நாடுகளின் மையப்படை  சவில்யம் நோக்கி முன்னேறி இருந்தது. இரண்டாம்  நாள்  வன்தோளனை மேலும்  முன்னேற விடாமல்  தடுத்து வைக்க மட்டுமே சவில்யத்தின்  படையினரால்  முடிந்தது. மூன்றாம்  நாள்  போர் தொடங்கியதும் வன்தோளன்  தன் அத்தனை  தளைகளையும் அறுத்தெறிந்தவனாக போரிட்டான். சுனதபாங்கத்தின் காவல் படைகளில்  இருந்தும்  கிராமங்களில் … Continue Reading →

பெருஞ்சுழி 46

முரசொலிப்பதற்காக இரு பக்க வீரர்களும் செவி கூர்ந்திருந்தனர். முதல்  நிலையில்  இருந்தவர்கள்  தங்கள்  உயிர் பிரிந்து விடக் கூடாது  என்ற எண்ணம்  மட்டும்  கொண்டவர்களாக அடுத்த நிலை போர் வீரர்கள்  தங்கள்  வீரம் வெளிப்படுவதை தங்கள்  தளபதிகள் பார்க்க  வேண்டும்  என்ற கவலை கொண்டவர்களாக அதற்கு  அடுத்த நிலை குதிரை வீரர்கள்  ஆர்வம்  மிகுந்த விழிகளுடன் … Continue Reading →

பெருஞ்சுழி 45

சுனதபாங்கத்தின்  வடக்கெல்லை கடலை சந்திக்கும்  துவாரத்தில்  விரைந்து கொண்டிருந்தார் கணபாரர். வன்தோளனின்  விரைவு  சவில்யத்தின்  வீரர்களை  வியந்து நிற்க வைத்தது. நேர் போரில்  அவனே பங்கு பெறுவான் என ஆதிரை எதிர்பார்த்திருக்கவில்லை. புகிந்தத்தில்  இருந்து எட்டு காத தூரத்தில்  வன்தோளனின்  படைகள்  நிலைகொண்டன. பொட்டல் வெளியாக கிடந்த வறண்ட  நிலங்களில் வீரர்கள்  கூடாரம்  அமைக்கத் தொடங்கினர்…. Continue Reading →

பெருஞ்சுழி 44

ஆயுத சாலையில்  மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். “தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை  நியாயங்களை  அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம்  மட்டுமே  போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும்  விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!” அவன் செவிகளில்  விறலியின்  குரல் கேட்டது…. Continue Reading →

பெருஞ்சுழி 43

எண்பது  வயதிருக்கும்  என எண்ணத் தக்க அந்த முதியவனுக்கு உண்மையில்  நூறு வயது கடந்திருந்தது. இளமையில்  பெரு வீரனாக இருந்தமைக்கான தடங்கள்  அவன் உடலில்  அழிந்து கொண்டிருந்தன. மதிழ்யம்  எனப் பெயர் கொண்ட ஆழிமாநாட்டின்  தென்னெல்லை தேசத்தை அவன்  அடைந்து மூன்று இரவுகள் கடந்திருந்தன. அன்னையின்  தாலாட்டை நோக்கி நகரும்  மகவென ஆழியை நோக்கி நடந்து… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑