Category இலக்கியம்

கரமசோவ் சகோதரர்கள் – எதிரீடுகளின் சதுரங்கம்

பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன் வழியாக பருவடிவு கொள்ளாத துயரொன்று மனதை அலைகழித்தது. ஜெயமோகனை வாசிக்கையில் மனதில்  கட்டுமானமொன்று சரிந்து விழுந்த அதிர்வை ஆழம் உணர்ந்தது. அவ்விடத்தில்… Continue Reading →

பச்சை நரம்பு – முனைகொள்ளும் சிக்கல்கள்

சிறுகதை என்ற வடிவம் குறித்த புரிதலை தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசிப்பதன் வழியே அடைய முடியும் என நினைக்கிறேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தை ஒளியேற்றி நிறுத்த சிறுகதை வடிவம் ஏற்புடையது. நாவல் இதற்கு எதிரான வடிவம். ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது நம்முள் தங்குவதும் நாம் சிந்திப்பதும் பெரும்பாலும் ஆசிரியனால் முடிவு செய்யப்படுவது கிடையாது…. Continue Reading →

பரிசுப்பொருள் (சிறுகதை)

பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கி நின்று மோனிகா சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு எடையின்மையை விடுதலையை உணர முடிந்தது. வெறுப்புடன் புன்னகைத்துக் கொண்டாள். சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவு உடைய யாரோ தெரிந்தனர். சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான்…. Continue Reading →

பரிசுப்பொருள் – ஒரு கடிதம்

அன்புள்ள சுரேஷ், நீங்கள் எழுதிய பரிசுப்பொருள் சிறுகதையை காலச்சுவடு இதழில் வாசித்தேன். முதல்   வாசிப்பில் மனமொன்றி மகிழ்ந்து மேலும்  இருமுறை வாசித்தேன். மீள் வாசிப்பில் கதை மேலும் துலங்கி வந்தது. தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் தன்னைப்  பொருட்படுத்துகிறான்  என்பதாலேயே அவனிடம் தன்னை இழக்கும்  பெண் என்ற கதைக்கரு பழையதுதான் என்றாலும் மொந்தை சிறப்பாக இருந்தது…. Continue Reading →

போரெனும் தலைகீழாக்கம் – சயந்தனின் ஆதிரை

சமூகம் ஒட்டுமொத்தமாக போருக்கு ஆதரவானது, தனிமனிதர்கள் போரின் இழப்புகளை மட்டுமே அறிபவர்கள். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்விருநிலைகளில் நின்றும் போரைப் பார்க்கிறான். -ஜெயமோகன் பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம்… Continue Reading →

எஞ்சும் சொற்கள் – கடிதங்கள்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் ..நீங்கள் எழுதிய எஞ்சும் சொற்கள் சிறுகதையைப் படித்தேன்.எழுத வேண்டுமா என நினைத்தேன் ஆனால் கதையின் கரு எழுதுவது முக்கியம் என உணர்த்தியது .ஒரு நுண்மை இலையோடல் கதை முழுக்கவே விரவி இருப்பதைப் போன்றதொரு உணர்வு.அது சரியாகவும் இருக்கலாம் வெளிப்படை தான் இலக்கிய தரத்தின் அளவுகோல் எந்த அளவிற்கு அதில் உண்மை கையாளப்படுகிறதோ… Continue Reading →

எஞ்சும் சொற்கள்,பரிசுப்பொருள்-கடிதம்

அன்பின் சுரேஷ் வணக்கம்  உங்களின் எஞ்சும் சொற்கள்வாசித்தபின்னர் உடன் உங்களுக்கு எழுதணும்னு நினைத்தேன், பணிச்சுமை கூடுதல் என்பதால் முடியவில்லை. இன்று கல்லூரியிலிருந்து  அரைநாளில், பட்டமளிப்பு விழாவென்பதால் வீடு வந்ததும், காலச்சுவடு  வந்திருந்தது, முதலில் வழக்கம் போல கவிதைகள் வாசித்தேன் பின் கதைகளில் பார்த்ததும் உங்களின் பரிசுப்பொருள்  இருந்தது. காலச்சுவடில் இத்தனை இளம் வயதில் எழுதுகிறீர்கள் என்பதே .பெரும் மகிழ்வளிக்கும் விஷயம். பல வருடங்களாக  காலச்சுவடின் வாசகி… Continue Reading →

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது… Continue Reading →

பாகீரதியின் மதியமும் புனைவின் சாத்தியங்களும்

நாவல் என்ற வடிவத்தின் மீதான தொடர் வாசிப்பு தேவைப்படும் ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணம் நண்பர்களுடன் நாவல் குறித்து பேச நேரும்போது தோன்றும். நாவல் வடிவம் தொடர்கதையில் இருந்து ஏன் வேறுபடுகிறது என்பதை தொடர்ச்சியாக சொல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து புதுமையான வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தபோதே சிறுகதை நாவல் குறுநாவல்… Continue Reading →

மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) – எஸ்.செந்தில்குமார்

எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரது முதல் நூல் இது. திருவாரூரில் பேசும் புதிய சக்தி என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார். நானும் திருவாரூர்காரனே எனினும் அவரது ஆக்கங்களை வாசிக்காததால் சென்று சந்திக்கவில்லை. திருவாரூரில் நடைபெறும் சிறிய அளவிலான புத்தக கண்காட்சியில் இந்த நூலினை… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑