இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. அழிசி கட்டுரைப்போட்டி, நடுவர்களின் பெயரை தெரிந்து கொண்ட போது, இப்பெயரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைவின் அடுக்குகளில் தேடி, திரும்ப ஜெயமோகனிடம் சரணடைந்தேன்.. அப்பொழுது தான் ஈர்ப்பு பற்றிய… Continue Reading →
அன்பு சுரேஷ், வணக்கம்.. ஜெயமோகன் அவர்களது தளத்தில் தான் “ஈர்ப்பு” வாசித்தேன்.. அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்தேன்.. எனது கருத்துகளைப் பகிரவே இந்த அஞ்சல்.. ஈர்ப்பு சற்றே நெடுங்கதை தான்.. “எனக்குஎல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது” என்று துவங்குவதில் இருந்தே, என் எதிரில் ஒருவர் அமர்ந்து அவரைப் பற்றி பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது…. Continue Reading →
அலும்னி மீட் அழைப்பிதழைப் பார்த்தபோது தோன்றிய எரிச்சலும் கோபமும் அதே அளவில் எனக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அறையின் சாவிக்காக காத்திருந்தபோது மீண்டும் தோன்றியது. அப்படியொன்றும் ரொம்ப நேரம் நான் காக்க வைக்கப்படவில்லை. அதோடு என் சிறிய பெட்டியை தூக்கிக் கொண்டு நடந்து வருவதற்குக்கூட டிரிபிள் ஈ டிபார்ட்மெண்ட் மாணவன் ஒருவன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தான். அவனை என்னிடம்… Continue Reading →
காவக்காரன் மேட்டுக்கு போனால்தான் சாமிவரும் என்று மாரிமுத்து குட்டியப்பா சொல்லியபோது அவர் விபூதியடித்தால்தான் வீட்டுக்கு வரமுடியும் என்று மண்டபத்தில் காத்திருக்கும் மணமக்களை எண்ணி பீதி கொண்டு மண்டபத்திற்கு எதிர்திசையில் இருக்கும் மேட்டுக்கு செல்வதற்கு முன் டாஸ்மாக்கில் நிறுத்தி குட்டியப்பாவுக்கு ரொம்பவும் எனக்கு கொஞ்சமும் வாங்கி ஊற்றிக்கொண்டு நூறில் வைத்து வண்டியைத்திருகி குட்டியப்பாவை மேட்டில் இறக்கியதும் குடியாலோ… Continue Reading →
ஈர்ப்பு கதை இணைப்பு ஈர்ப்பு நெடுங்கதை, தற்கால நவீன வாழ்க்கையின் ஆண், பெண் உறவு நிலைகளின் உளவியல் ரீதியான சிக்கல்களை கூரிய அனுபவச் சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் நடுந்தர வயதை தொடும் வயதில் இருப்பவன். அவனின் வாழ்வில் பெண்கள் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனின் பித்தை அறிவை அவர்கள் சுமையாக நினைத்து விலகிவிடுகிறார்கள், ஒவ்வொரு… Continue Reading →
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழார் எனின்? 1 எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில்… Continue Reading →
நவீனத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்தல் குறித்த வலுவான பிரக்ஞை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழ்ந்து விடுகிறது. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கென இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பா ஆகியோரின் சில கதைகளில் வடக்கில் இருந்து தொழில் செய்ய வரும் நாடோடிகள் பற்றிய குறிப்புகள் வந்துபோகும். அதன்பிறகு இரண்டாம்… Continue Reading →
(சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள் நாவல் விமர்சனம்) சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன…. Continue Reading →
சில்லறைக் காசுகளை சேமிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டதென நினைவில்லை. ஆனால் நாங்கள் குடியிருந்த பழைய வீட்டில் டி.வி வைப்பதற்காக வீட்டின் வடகிழக்கு மூலையில் நான்கடி அளவிற்கு ஒரு கான்கிரீட் பிளேட்டை நீட்சி போல் செருகி இருப்பார்கள். அந்த பிளேட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி ஊடுருவ முடியாத கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தான் சில்லறைகளை சேர்க்கத் தொடங்கினேன்… Continue Reading →
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑