Category விமர்சனம்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது. முதலில் நூல் வடிவமைப்பு. எதிர்காலத்தில் இந்நாவலை மின் நூலாக… Continue Reading →

கபாலி – என் விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கு முன் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய  “ரூட்ஸ்” அமெரிக்காவில் ஒரு தொலைத்தொடராக (serial) எடுக்கப்பட்டது. ஒரு கருப்பின இளைஞன் பண்ணை அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட தன் மூதாதையர் அடைந்த இன்னல்களை கண்டடைவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவை உலுக்கிய ஒரு தொடராக அது இருந்ததாகவும் அந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் புறப்பட இருந்த விமானங்களின்… Continue Reading →

வெண்முரசு – மறு வாசிப்பு (முதற்கனல் முதல் பிரயாகை வரை)

வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு… Continue Reading →

இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர்

மகாபாரதத்தில்  இடம் பெற்றிருக்கும்  ஒரு தொன்மத்தையாவது ஒரு பெயரையாவது அறியாத ஒருவர் நம்மிடம்  இருப்பதற்கான வாய்ப்பு  மிகக் குறைவு. நாமே அறியாமல்  மகாபாரதம்  நம்முடன்  பயணித்துக்  கொண்டே இருக்கிறது  நான்காயிரம்  ஆண்டுகளாக. தொலைக்காட்சிகளின் பரவலாக்கத்திற்கு பிறகு மகாபாரத்தை எண்பதுகளின் இளம் தலைமுறை நீள் தொலைத்தொடர்கள் (Mega serial) வழியாகவே அறியத் தொடங்கியது. தொலைத்தொடர்கள்  மிகத் தீவிரமான … Continue Reading →

வெள்ளையானை – நாவல் விமர்சனம்

(ஜெயமோகன் தளத்தில் முதலில் வெளியானது) அன்புடன் ஆசிரியருக்கு         வெகு நாட்களாக  பதிவு செய்து காத்திருந்து நண்பனின்  சகோதரன்  வெள்ளையானை  வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் “கையிருப்பு  இல்லை” என்றே பதில்  கிடைத்தது. ஒரு நூலினை கையால்  தொடும்  போதே அதனுடன்  நம் உறவு தொடங்கி விடுகிறது  என்று  எண்ண வைத்தது… Continue Reading →

பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் – ஒரு வாசிப்பனுபவம்

வாசகர்கள்  மீது கருணையே இல்லாத  எழுத்தாளராக  இருக்கிறார்  யுவன்  சந்திரசேகர். கொஞ்சம்  கவனம்  விலகினாலும்  புரியாமல்  போய் விடுகிற படைப்பு  பகடையாட்டம். இந்திய  சீன திபெத்  எல்லைகளில் அமைந்த புனைவு நிலமான ஸோமிட்ஸியா என்ற சிறு “சாம்ராஜ்யம்” தான்  கதைக்களம். உலகம்  தொடங்கியது முதல்  உலகப் போர்கள் வரை தொட்டுச் செல்லும்  படைப்பு. சுந்தர ராமசாமியின் … Continue Reading →

மிளிர் கல் – ஒரு வாசிப்பு

ஒரு சமூகம்  பொருளாதார  ரீதியாக  தன்னை உயர்த்திக்  கொள்ளும் போது  அது தன் வரலாற்றை தெரிந்து கொள்வதிலும் தன்னை  அறிந்து கொள்வதிலும்  ஆர்வம்  கொள்கிறது. மரபினை ஒரு பொதுப் புரிதலுக்கு உள்ளாக்க ஆர்வம்  உடைய ஒருவருக்கு  பாட்டிக் கதைகளும் திரைப்படங்களும் வீரக் கதைகளும் ஒருவித திருப்தி அளிக்கவே செய்கின்றன. ஆனால்  தீவிரத்துடனும் கல்வியின் பலனாய் அடைந்த… Continue Reading →

கரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின்  கரைந்த நிழல்கள்  நாவலின்  கதை  அல்லது  “கரு” என்ன  என்று அந்த நாவலைப்  பற்றி  சொல்லப் போய் யாரும்  என்னிடம் கேட்டுவிடக்  கூடாது  என்பதற்காக  அந்நாவல் குறித்து  எழுதி  விடலாம்  என்று  முடிவு  செய்து  கொண்ட பின்  எழுதுகிறேன். விரைவாக  வாசிப்பவர்கள்  அரை நாளில்  வாசித்துவிடக்  கூடிய  அளவிற்கான  சிறிய  படைப்பு கரைந்த  நிழல்கள்…. Continue Reading →

போரும் வாழ்வும் குறித்து

சில ஆயிரம் தமிழர்கள் மட்டுமே வாசித்திருக்கக்கூடிய ஆனால் தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பு படைப்பு லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் (War and Peace மொழிபெயர்ப்பு: டி.எஸ்.சொக்கலிங்கம்). பெரு நாவல் முயற்சிகளுக்கான உத்வேகம் அளிப்பதோடு வாழ்வில் எழக்கூடிய பல அறம் சார்ந்த கேள்விகளுக்கு உபதேசம் செய்யாமல் வாழ்வினைக் கொண்டே பதிலளிக்ககூடிய படைப்பு போரும் வாழ்வும். எழுத்தாளர் திரு… Continue Reading →

24 – என் விமர்சனம்

ஒரு சமூகம் தன் கலை வடிவங்கள்  (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து  நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை  சார்ந்த  பார்வையையும் உருவாக்கிக்  கொள்ளும்  போது  தான்  தனித்த  அடையாளங்கள்  கொண்ட  பன்மைத் தன்மை  அச்சமூகத்தின் முகமாக  அமைந்து வலுப்பெறும்.  பெரும்  பொருட்செலவிலும் அதிகமான  மனிதர்களின்  உழைப்பினாலும் உருவாக்கப்படும்  திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும்…. Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑