Category விமர்சனம்

பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்

யாதும் ஊரே என்ற சொல் கணியன் பூங்குன்றனின் சிந்தையில் எழுந்த கணத்தை சற்று எண்ணிப் பார்க்கலாம். தொல் வேதங்களிலும் இத்தகைய கவித்துவ உச்சங்களைத் தொடும் பல வரிகள் இருப்பதாக நண்பர்கள் சொல்லி இருக்கின்றனர். ரிக் வேதத்தில் வரும் “சிருஷ்டி கீதத்தை” ஜெயமோகன் மொழிபெயரத்திருக்கிறார். அதை வாசிக்கும் போது அவ்வரிகளை உதிர்த்த கவிஞனை அல்லது ரிஷியை அல்லது… Continue Reading →

புனைவுகளிலிருந்து வெளியேறுதல் – தி.ஜானகிராமனின் மோக முள்

தத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா. கலியுக முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பதையோ பிரபஞ்சமே அவனின் பெருநடனம் என்பதையோ இறுதித் தீர்ப்பு நாளில் நீரும் நெருப்பும் நிலமும் தம்மிடமுள்ள உயிர்களை தீர்ப்புக்கு ஒப்படைக்கும்… Continue Reading →

மனவடுக்குகளின் முடிவற்ற வண்ணங்கள் – பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை முன்வைத்து

பெருநாவல்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். கலை என்று நாம் வரையறுக்கும் ஒன்றின் நோக்கம்தான் என்னவாக இருக்கும் என்று நம்முடைய முதல் கேள்வியை சற்று பொதுமைப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வு என்ற சொல்லின் வழியாக நாம் வகுத்து வைத்திருக்கும் மாற்றங்களை புகுத்திவிட முடியாத சலிப்பூட்டும் எதார்த்தத்தில் இருந்து சற்றே நம் மனம் எம்பிக் குதிக்கையில்… Continue Reading →

ராஜ் கௌதமனின் காலச்சுமை நாவலை முன்வைத்து…

நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும்… Continue Reading →

ஆழி சூழ் உலகு – ஒரு வாசிப்பு

ஜனநாயகம் பற்றிய பேச்சு  வரும் போதெல்லாம்  மிகப்பெரிய வெண்ணிறப் பரப்பும் அதில் ஓவியம் எழுதுவதற்கான பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளும் வழங்கப்பட்டிருக்கையில் அப்பரப்பின் ஒரு மூலையில் உடைந்த பென்சில் ஒன்றால் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறோம் நாம் என்ற உணர்வை அடைவேன். அது போலத்தான் நாவல் என்ற வடிவமும் தமிழ் இலக்கியத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு… Continue Reading →

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் – 2

வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது. வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண… Continue Reading →

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் – 1

யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார்.  “தேவிடியா வாக்கு…அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க”. என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது. ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. இன்றைய… Continue Reading →

சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்

(சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றிய விமர்சனம்) வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது, வண்டியைத் தொடர்ந்து வருவது போல். “எங்கிருந்து வருகிறது அந்த ஆற்றல்?’. அது உயிரின் ஆற்றல். மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் நிறைந்திருக்கும் வாழ்வின் விசை. ‘அது தான் சாத்தானா?’ -வெள்ளையானை – அத்தியாயம் 6 [ 1 ] “ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்?” இக்கேள்வியை அடிப்படையாகக் கொள்கிறேன். தீமை என இங்கு வரையறை செய்யப்படுவது எது? என இன்னொரு கேள்வியையும் இணைத்துக் கொள்கிறேன். இரு… Continue Reading →

மென்மையில் விழும் கீறல்கள் – வண்ணதாசன் குறித்து

(ஜெயமோகன் இணைய தளத்தில் முதலில் வெளியானது) அன்புடன் ஆசிரியருக்கு அதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு பன்னிரண்டு வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியின் மனதில்… Continue Reading →

அன்னா கரீனினா – வாசிப்பு

அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை “பெருக்கிக்” கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும்…. Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑