Category விமர்சனம்

ஸ்ரீராம ஜெயம்

  தி.ஜானகிராமனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம், பரதேசி வந்தான், கோயம்புத்தூர் பவபூதி, பஞ்சத்து ஆண்டி, குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது…. Continue Reading →

அன்பு போன்ற ஒன்று

கோபிகிருஷ்ணன் சிறுகதைகள் முழுத்தொகுப்பினை வாசித்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ அலையின் உச்ச எழுத்தாளர்களுக்கும் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ,கோணங்கி போன்ற பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட தலைமுறைக்கும் இடைப்பட்டவர். ஆகவே இவ்விரு போக்குகளின் தன்மைகளையுமே கோபிகிருஷ்ணனின் கதைகளில் காணமுடிகிறது. நவீனத்துவத்தின் விரக்தியும் சலிப்பும் அவநம்பிக்கையும் கதைகளுக்குள் ஒலித்தாலும் அவற்றை மீறிச்செல்லும் எத்தனமும் கதைகளில் தெரிகிறது…. Continue Reading →

ரா.கிரிதரனின் இசை

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை தொகுப்புக்கான விமர்சனம் சிறுகதைகள் குறித்த ஒரு விவாதத்தை தொடங்குவதென்றாலும் ஒரு கட்டுரை எழுதுவதென்றாலும் தமிழ்ச் சிறுகதை மரபு வளமானது என்ற வரியை சொல்லித் தொடங்குவது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. இப்படிச் சொல்ல காரணங்கள் இல்லாமல் இல்லை. தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் வலுவான சிறுகதை ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். பல்வேற வகைமைகளில்… Continue Reading →

நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல்

அறிவியல் புனைவு என்பது புனைவின் ஒரு வகைமையாகத் தொடக்க காலங்களில் எழுதப்பட்டது. ஏதேனும் ஓர் அறிவுத்துறையின் ஓர் அடிப்படைத் தேற்றத்தைப் புனைவின் தருக்கத்தைக் கொண்டு விரித்துச் செல்லும்படி அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டன. அறிவியல் புனைவெழுத்தில் பெரும்பாலான ஆக்கங்கள் ஊகப்புனைவுகளே (Speculative fiction). ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்தால் அந்த மாற்றம் அச்சூழலை… Continue Reading →

நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

தமிழில் அறிவியல் புனைதைகள் என்று எழுதப்படும் பல கதைகளில் திகிலூட்டும் அம்சங்களே மேலோங்கி இருக்கின்றன. மற்றொரு வகைக் கதைகளை டான் பிரவுன் (Dan Brown) தன்மை கொண்டவை என்று சொல்லிவிடலாம். டான் பிரவுனின் நாவல்கள் ஓர் அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மரபுப் புதிர் இரண்டையும் இணைத்துப் பின்னப்படுகிறவை. தமிழிலும் இதையொட்டிச் சில நாவல்கள் வெளிவந்திருக்கின்றன…. Continue Reading →

துயரத்தைத் தேர்தல் – கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலை முன்வைத்து

உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் “தெய்வத்தன்மையை” விட்டு இறக்கப்பட முடியாதது. நாத்திகனாக இருப்பவன் கூட கிறிஸ்துவின் “அன்பு செய்தல்” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவே செய்வான். ஒரு இடதுசாரி சிந்தனையாளன் கிறிஸ்துவினுள் உறையும் சமத்துவ சமுதாயத்துக்கான ஏக்கத்தை அடையாளம்… Continue Reading →

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் ஆறு சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப் [ 1 ] தமிழ் உரைநடையின் தொடக்கமாக ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளைக் கொள்வோம் எனில் தமிழ் உரைநடை இரண்டரை நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட ஒரு நிகழ்வு. தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் பள்ளு குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய வகைமைகளோடு செய்யுள்களின் காலகட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. செய்யுள்களின் காலகட்டத்தின் முடிவினை குறிக்கும்… Continue Reading →

பழியுணர்வின் உளவியல் – தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை முன்வைத்து

இலக்கிய ஆக்கங்களை ஒரு வசதிக்காக நேரடியானவை பூடகமானவை என இரண்டு வகைமைகளாக பிரித்துக் கொள்ளலாம். நேரடியாகச் சொல்லப்படுவதும் பூடகமாக எழுதப்படுவதும் எழுதும் ஆசிரியனின் தேர்வு மற்றும் படைப்பின் தேவை சார்ந்தது. நேரடியான ஆக்கங்களை தட்டையானவை என்றும் பூடமான ஆக்கங்களை நுட்பமானவை என்றும் கொண்டாடும் ஒரு தட்டையான பார்வையை வாசகர்களிடம் சூழலில் அவதானிக்க முடிகிறது. என் அவதானிப்பில்… Continue Reading →

லக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து

உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு ரீதியான பலங்களும் இல்லாத மனிதர்களின் மீது புத்தாயிரத்தின் இலக்கியம் அக்கறை கொள்ளத் தொடங்கி இருப்பதாகப்படுகிறது. விளிம்பு நிலையினர் என்ற வகைப்படுத்தலின் மீதான… Continue Reading →

பொண்டாட்டி – பாலுறவைப் பேசும் நீதிக்கதை

எழுத்தாளன் தன்னை என்னவாக பாவித்துக் கொள்கிறான் என்பது புனைவின் அழகியல் ஒருமைக்கு ஒரு இன்றியமையாத அம்சம். அதோடு எழுத்தாளனின் புனைவு பாவனையை அறிந்து கொள்வது குறிப்பிட்ட எழுத்தாளனின் மனவெழுச்சிகளையும் அக்கறைகளையும் கண்டுகொள்ள வாசகனுக்கு பெருமளவு உதவக்கூடும். மானுடம் என்கிற பெருங்கொந்தளிப்பினை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறவனாக டால்ஸ்டாய் தன்னை போரும் வாழ்வும் நாவலில் பாவனை செய்து… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑