Category விமர்சனம்

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி – சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின்… Continue Reading →

புதுமைப்பித்தன் எனும் அறிவன் (உரை காணொளி)

புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் ‌செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால்… Continue Reading →

நீதியின் பரிணாமம் – மற்றவர்களின் சிலுவை தொகுப்பை முன்வைத்து

இந்திய மொழிகளில் சிறுகதை வடிவத்தில் முதன்மையான படைப்புகள் அதிகம் வெளியானது தமிழில்தான். சிறுகதை என்ற வடிவம் பற்றிய போதம் தமிழ்ச் சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்படத் தொடங்கிவிட்டதை அன்றைய இலக்கியப் படைப்புகளையும் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளையும் வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்தகைய ஆரோக்கியமான சூழலிலிருந்தே புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் எழ முடியும்…. Continue Reading →

கவிதை பொருள்கொள்ளும் கலை – பெருந்தேவி (நூல் அறிமுகம் – இருபத்தேழு)

கவிதை பொருள்கொள்ளும் கலை – பெருந்தேவி (நூல் அறிமுகம் – இருபத்தேழு) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #tamilwiki #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் இருபத்தேழாவது காணொளி‌. #30days30books கவிதை பொருள் கொள்ளும் கலை நூலினைப்பெற https://www.commonfolks.in/books/d/kavithai-porul-kollum-kalai பெருந்தேவி – தமிழ் விக்கி… Continue Reading →

கே.என் செந்திலின் ‘விருந்து’ தொகுப்பு விமர்சனம்

தமிழில் குறுங்கதை என்ற வடிவத்தின் முன்னோடி என யுவன் சந்திரசேகரை சொல்லலாம்‌. தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள், இருபத்து மூன்று காதல் கதைகள் போன்ற கதைகளின் வழியாகவும் மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற குறுங்கதை தொகுப்புகளின் வழியாகவும் விரிவான தளத்தில் குறுங்கதைகளை யுவன் சந்திரசேகர் எழுதி இருக்கிறார். அராத்து தற்கொலை குறுங்கதைகள்,சயனைட் குறுங்கதைகள் என சில தொகுதிகளை… Continue Reading →

அப்பால் உள்ளவை – ஜெயமோகனின் சிறுகதைகளை முன்வைத்து

1 பொதுவாக ஒரு முன்னோடி படைப்பாளியைப்பற்றிப் பேசும்போது அவருடைய தனித்துவமான ‘பங்களிப்பு’ என்று ஒன்றைக் குறிப்பிடுவோம். பின்னாட்களில் ஒரு படைப்பாளி நினைக்கப்படுவதே அந்தப் பங்களிப்பினால்தான். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை விரிவுபடுத்தினார், மௌனி அகவயத் தருணங்களை மொழியில் வசப்படுத்த முயன்றார், சிறுகதை மொழியை நவீனப்படுத்தியதில் ந. பிச்சமூர்த்தியின் பங்களிப்பு அதிகம், அசோகமித்திரன் எளிய சித்தரிப்புகள் ஊடாக குறைந்த சொற்களில்… Continue Reading →

காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து

ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின் விளிம்பில் உள்ள கூரிய நீட்சிகள் வாயோரங்களைக் கிழிக்க நாயின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்குகிறது. தன் ரத்தத்தை ஆழ்ந்து உறிஞ்சிக் குடிக்கிறது… Continue Reading →

குற்றமற்ற மனதின் துயர்

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலை முன்வைத்து என் நண்பர் ஒருவர் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அரசுப்பணியில் இருப்பவர். திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறார். அவருடன் இணைந்து சில இடங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. அப்படி ஒன்றாகச் சென்ற இடங்களில் அவருடைய நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. நட்பினைப் பேணுவதில் ஏறக்குறைய எனக்கு… Continue Reading →

உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை

(எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) 1 தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ் நாவல்களின் வடிவத்தைத் தீர்மானித்ததில் இரண்டு நூல்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஒன்று சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்ற நாவல். மற்றொன்று ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்ற தொன்னூறுகள் வரை தமிழில் எழுதப்பட்ட நாவல்களின் பெறுமானத்தை ஆய்வு செய்யும்… Continue Reading →

வரலாறெனும் அன்றாடம் – அமர்மித்ராவின் துருவன் மகன் நாவலை முன்வைத்து

நூற்றுக்கணக்கான நாடுகள் அமைதியாக வாழ்ந்துவருகின்றன. வரலாறு இந்த உண்மையைக் கணக்கில் கொள்வதில்லை; கவனத்தில் கொள்ள வரலாறால் முடியவும் முடியாது. வரலாறு என்பது உண்மையில் அன்பு அல்லது ஆன்மா சமநிலையில் செயலாற்றிக்கொண்டிருப்பதன் மீதான ஒவ்வொரு குறுக்கீட்டையும் பதிவு செய்வதாகவே இருக்கிறது – காந்தி வரலாறு என்ற சொல்லே ஒரு வகையில் சற்று மயக்கம் தருவதாகத்தான் இருக்கிறது. வரலாற்றை… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑