சக இலக்கிய வாசகரும் எனது தோழியுமான திருமதி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அவர்களின் முதல் சிறுகதை இது. மேரியின் நினைவெழுகிறது. வேளாங்கண்ணி கான்வெண்ட்டில் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டில் கதையெழுதிக் கொண்டிருப்பாள். மாநிறம். சிறிய வட்ட முகம். ஒல்லியான தேகம். முழு பாவாடை சட்டை போட்டிருப்பாள். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இந்நேரம்… Continue Reading →
சிறு வயதில் ஆத்தா வீட்டிற்கோ ( திருவாரூர் உட்கிராமங்களில் பாட்டியை ஆத்தா என்று அழைப்பதே வழக்கம்) பெரியம்மா வீட்டிற்கோ செல்லும் போது ஒன்றை கவனித்திருக்கிறேன். வீட்டு வாசல் வரை மட்டுமே அம்மாவின் கை என்னைப் பற்றி இருக்கும். திண்ணையிலேயே மாமாவோ… Continue Reading →
ஏழாம் வகுப்பு படிக்கும் போது அழகுமுத்து எனக்கு தமிழாசிரியர். உமா பார்வதி என அவருக்கு இரண்டு மனைவியர். அவ்வயதில் இரண்டு மனைவிகளுடைய முருகனிலிருந்து கிட்டத்தட்ட அதே பெயருடைய என் தாத்தா வரை அனைவரையும் நான் குற்றவாளிகளாகவே… Continue Reading →
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் தினமலர் நாளிதழில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் “ஜனநாயக சோதனைச் சாலையில்” என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் வாக்களிப்பது குறித்த பெருமிதத்தை வாசித்தவர்களிடம் உருவாக்கி இருக்கும் என நம்புகிறேன். அத்தகைய பெருமிதத்துடன் சக குடிமகனாக நான் உணர்ந்தவற்றை உங்களுடன் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம். இனி… நம்முடைய அரசியல் … Continue Reading →
நுண்ணுணர்வும் நுகர்வுணர்வும் அந்நியமாதலும் ஆனந்தமாதலும் என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் எனினும் இதன் பேசுபொருள் தன்னளவில் தனித்ததும் கூட. தலைமை என்பது அனைத்துத் துறைகளிலும் மதிக்கப்படும் அறிவுடையவர்களால் விரும்பப்படும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஒப்பு நோக்கும் போது ஒரு தொழில் நிறுவனத்தில் சற்று உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் ஒரு மாவட்ட ஆட்சியரை விட… Continue Reading →
அந்நியமாதலும் ஆனந்தமாதலும் வெகுநேரம் குனிந்த படியே மண்வெட்டியால் தரையை வறண்டிக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்த போது இடுப்புக்கும் மார்புக்கும் இடையே ஒரு கூச்சம் தோன்றியது. பல நாட்களாக ஒரு வேலையும் செய்யாமல் இருந்ததன் பலன். இருந்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மண்ணைக் கிண்டினேன். உடல் முழுக்க வியர்வை வழிவதை… Continue Reading →
வாய் திறப்பதற்கு முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம் வாய்க்கு முதலில் வந்துவிட்டதால் மூடிய இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில் இடக்கை மணிக்கட்டில் பட்டதும் துடித்துப் போய் எழுந்து கொண்டான். நல்லவேளை தலையணையில் எச்சில் படவில்லை என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில்… Continue Reading →
என் அறிதல் தொடங்கும் கணத்தில் உருமாறுகிறது உலகுஎனக்கென்று விடிகிறது இவ்விரவு என்னோடு நடக்கிறது இந்நிலவுஏதேதோ சொல்கிறதுஇக்கனவுஎன் அறிதல் தொடங்கையில் முடிகிறது இச்சோர்வு இருப்பது இல்லாமலாகமட்டுமே இல்லாமலிருக்கையில்இருப்பு தேடியா அலைகிறேன்எவ்வளவு அள்ளியும் எஞ்சுகிறது ஒரு துளி எத்தனை சொல்லியும் மிஞ்சுகிறது ஒருசொல்எஞ்சுவதும் மிஞ்சுவதும் எனதென்று எடுக்கையில்அள்ளியதும் சொல்லியதும்அண்மிக்கையில்எதை எடுப்பேன் எதை தடுப்பேன் சொல்லிவிட முடிவதில்லை சொல்லாமல் விடவும்… Continue Reading →
அழகி அங்குதான். அன்றுதான். அக்கணந்தான். அருகாமையின் அர்த்தம் புரிந்த கணமது. அறியாமையின் இன்பம் நுகர்ந்த நாளது. அவள் எனும் பதத்தை ஒவ்வொரு நொடியும் ஒருமைக்கு வெளியே இழுக்கிறாள். அவளை அவள்கள் எனலாமா? இலக்கணம் ஒப்ப மறுக்கலாம். ஆம். அவளொரு கூட்டுக் கனவு. அழகின் அத்தனை அளவைகளுக்கும் ஒரு அறைகூவல். முழுமைக்கு வெளியே நின்று கொண்டு முகம்… Continue Reading →
மண்ணும் மழையும்
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑