மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது… Continue Reading →
பொழுதுபோக்கு எழுத்துக்களின் முக்கியமான பங்களிப்பென்பது அவற்றால் ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையை கட்டமைக்க முடியும் என்பதே. பொன்னியின் செல்வனில் ராஜராஜன் எங்கேனும் மது அருந்தினான் என்றோ யாரையேனும் கொல்ல ஆணையிட்டான் என்றோ எக்குறிப்பும் வராது. ஐந்து பகுதிகளாக வெளிவந்த அந்த நூலில் மிகப்பெரிய யுத்தம் கூட சித்தரிக்கப்பட்டிருக்காது. யுத்தத்தின் ரணங்களோ வன்முறைகளோ அந்த படைப்பில் தென்படாது…. Continue Reading →
வராதிருத்தல் கருணையின் ஈரம் வற்றிய சதுப்பில் தனித்தலையும் உயிர் அவன் அவன் உரிமைகளும் மீறல்களும் உலர வைத்தன அவன் மீதான அக்கறைகளை அவன் கபடின்மையில் களிம்பேறிய போது அவன் கரங்கள் தாவைபிடித்து பிறர் முகம் திருப்பிய போது தன்மீதே குவிந்திருக்க வேண்டும் பிறர் கவனம் எனப் பதறிய போது அவன் சிரிப்பு இளிப்பானது பொருள் பொதிந்த… Continue Reading →
கடவுளர் புணரும் வெளி எல்லோர் உடலிலும் ஏறியிருந்தது அது குளிரில்லை என்பதால் வெப்பம் என்றோம் அதை இன்மை இல்லை என்பதால் இருப்பு என்றோம் அதை என் கனவுகள் போலன்றி என் உடலையும் சேர்த்து யாருடலிலும் சட்டையில்லை யார் கனவும் போலன்றி எல்லோரும் அறிந்திருந்தோம் எங்கு தொடங்கியது அது என அச்சிறுவன் சொன்னபோது நம்பவில்லை நேரில் காட்ட… Continue Reading →
முதலில் தவறெனத் தோன்றியது. ஆனால் தவறுகள் மட்டுமே அளிக்கும் ஒரு கிளர்ச்சி உண்டு. மிகப்பெரிய எதிரான மீறல்களை நிகழ்த்தும் போது மட்டும் மனம் சென்று விழும் விசை மிக்க நதியொன்று உண்டு. கடிவாளம் மீறித் திமிரும் அம்மனம் அச்சமென ஒழுக்கம் என அறம் என போடும் வேடங்களை ஒரு தேர்ந்த கவர்ச்சியான திறன் மிகுந்த தொழில்… Continue Reading →
இனிப்பு உப்புச் சுவையும் எச்சில் மணமுமே உதட்டு முத்தம் தோழி பிறகு இனிப்பென்பதென்ன? முத்தம் இனிப்பல்ல ஒவ்வொரு இனிப்பும் முத்தமே —— பூசனை இலைப் பீப்பிகள் போல சுற்றி அழுகின்றன குழந்தைகள் நெரிசலான பேருந்து —— அது மட்டுமெனில் அது மட்டும் பால் மணம் மறந்த நாட்களில் அம்மாவின் அடிவயிறோடு ஒட்டி உறங்கிய பொழுதுகளில் உணர்ந்த… Continue Reading →
கவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் “உச்சி மீது வானிடிந்து” என்று தொடங்கியவர்கள் தானே. ஆகவே சிறந்த கவிதைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரும் மரியாதை நான் சிறந்தவை என எண்ணுபவற்றை பகிர்ந்து கொள்வது. மிகப்பெரிய அவமதிப்பு என்பது நான் எழுதியவற்றை பகிர்ந்து கொள்வது. இப்பதிவு அவமதிப்பே! மறைதுயர்… Continue Reading →
எனக்கு முன் எத்தனையோ பேர் சொன்னது தான் ஏளனம் செய்வதற்கு ஏற்றது தான் இயலாமையின் இயல்பான உச்சம் தான் இருந்தால் என்ன எத்தகைய கயமை நிறைந்த எண்ணம் எனினும் கண்ணீர் தூயதுதான் என் விழிகள் வழிவதே இல்லை இது தான் என் புலம்பல் என் குரல் உடைவதேயில்லை இது தான் என் புகார் எழுந்த செல்ல… Continue Reading →
பாண்டவையின் கரைகள் நெருங்கி வளர்ந்த மரங்களால் இருளடைந்து உயர்ந்திருக்கும். வெயிலுக்குதந்தவாறு உடல் நெளித்து பாண்டவையின் மையம் கடந்து நீண்டிருந்தது உடலில் பெரு வளையங்கள் பரவிய தென்னை. மேகங்களின்றி தனித்திருக்கும் உச்சியின் சூரியனை நோக்குவதற்கென சேவுராயன் வழக்கம் போல் அத்தென்னையின் உடல் மையத்திற்கு வந்து நின்றான்.இடுப்பில் கை வைத்து அண்ணாந்து நோக்கி கண்கள் உச்சியில் நிலைத்த போது… Continue Reading →
இரண்டு பாட்டிலில் அண்ணன் தண்ணீரை எடுத்து கைப்பையில் வைத்தபோது கடுப்பாக இருந்தது. “அப்ப ரெண்டு நா வெளில தங்குறதுன்னா வாட்டர் டேங்க எடுத்து பைக்குள்ள வெப்பியா” என்றேன். வழக்கம் போல் அவன் பொருட்படுத்தவில்லை. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நாடி ஜோசியம் பார்ப்பதற்காக அல்லாமல் ஒரு அர்ச்சனை செய்வதற்காக அனைவரும் புறப்பட்டோம். மிகவும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் சென்றேன்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑