Category பொது

லக்ஷ்மி ஒரு பதிவு

லக்ஷ்மி என்ற குறும்படம் பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். இரு வகையான எதிர்வினைகளை அத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது. பெண் தன் உடலின்  மலர்வினை கண்டு கொள்ளும் தருணத்தை சுட்டுவதாக அத்திரைப்படத்தை ஏற்பவர்கள் சொல்கின்றனர். மறுப்பவர்களில் கலாச்சார காரணம் சொல்பவர்கள் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டு… Continue Reading →

கவலை வேண்டாம்

இன்னும் தடித்த சுற்றுச்சுவர் அமைக்கலாம் தீப்பெட்டியும் மண்ணெண்ணெயும் பத்துகிலோமீட்டர் சுற்றளவுக்கு கிடைக்காமல் செய்யலாம் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தலாம் குறிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும் கவலை வேண்டாம் வரைவு தயார் இனி இதுபோல ஏதும் நடக்காது அனைத்திற்கும் முன் ஏதேனும் ஒரு சுவரில் கரி படிந்திருக்கும் வெள்ளையடிக்க வேண்டும் கரையற்ற கட்டிடத்திற்குள் நாளை நுழையலாம் கவலைப்படாதீர்கள்… Continue Reading →

நாயகிகள் நாயகர்கள் – என் முதல் சிறுகதை தொகுப்பு

அறுந்துவிழும் நுண்திரைகள் நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பின் முன்னுரையிலிருந்து சில வரிகள் தொடர்ச்சியாக சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் “பிறன்” என விலக்கி வைத்திருந்தவர்களை கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாக வேண்டிய அவசியத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில்… Continue Reading →

அயோத்திதாசர் ஒரு அறிமுக உரை!!

நண்பர்களுடனான ஒரு மாலை உரையாடலை பதிவு செய்தது மட்டுமே இது. அமேரிக்கா தேர்தல் முறை பற்றிய தகவல் மட்டும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி ஒரு முறையான உரையாற்றும் எண்ணத்தோடு தொடங்காததாலும் என்னுடைய சட்டைப்பையில் கிடந்த அலைபேசி இவ்வுரையை பதிவு செய்ததாலும் திறந்தவெளி உரை என்பதாலும் ஒலிப்பதிவின் தரம் குறைவாகவே இருக்கும். எனினும் என்னை என்… Continue Reading →

ஆசிரியர் சொல்

ஒளிர்நிழல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலின் முதல் வாசகரான மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி நாவலை வாசித்து மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா மற்றும் பேராசிரியர் டி.தருமராஜ் ஆகியோர் மட்டுமே நாவல் குறித்து தங்கள் பார்வையை விரிவாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். வாசிப்பதற்கு மெல்லிய சவாலை அளிக்கும் படைப்பு என்பதால் ஓரளவு இலக்கிய வாசிப்பு… Continue Reading →

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை வெளியில் இருந்து சொல்லப்படும் போது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். அதன் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் சரியான வார்த்தைகளில் படம் பிடித்து நிறைவோ துயரோ வேண்டிய அளவு உணர்ச்சிகளை ஊட்டலாம். ஆனால் ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதையை அவ்வீடு புதிதாக இருந்த போது அங்கு வளர்ந்த ஒருவனின் சொற்களில் அதுவும் அவ்வீட்டுக்குள்… Continue Reading →

அன்புள்ள அப்பா

அப்பா நான் யாழினி. நல்லா இருக்கீங்களா? இப்படி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்னோ அது என்னைப் பற்றிய தன்னிலை விளக்கமாக இருக்குமென்றோ நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நம் எண்ணங்கள் இளமை முதலே வேறுபட்டதில்லை என்று தான் நான் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் பல சமயங்களில் நான் உங்களுக்கு ஜால்ரா அடித்திருப்பதை இப்போது அவமானத்துடன் எண்ணிக் கொள்கிறேன்…. Continue Reading →

ஸ்பைடர்மேனும் அமேசிங் ஸ்பைடர்மேனும்

பத்து வயதில் ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை சைக்கிளில் கடப்பது எனக்கு எண்ண முடியாததொரு கிளர்ச்சியை அளித்திருந்தது. அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியது. அமர்ந்து செல்வதே கிளர வைத்திருந்தது. அதிலும் பயண நோக்கம் ஸ்பைடர் படம் பார்க்கச் செல்வது. வழக்கமாக பயணிக்கும் கொரடாச்சேரி-கமலாபுரம் சாலை வழியாக இல்லாமல் பாண்டவை ஆற்றின் மறுகரையில் உள்ள ஆலத்தாங்குடி… Continue Reading →

சில கவிதைகள் – 5

வழியனுப்பல் எத்தனையோ பேர் ஏற்கனவே எழுதி சலித்துவிட்டனர் முழு நிலவு குறித்து சுழற்சிக்கு ஏற்ற வகையில் விரிந்து சுருங்கும் அதன் வடிவம் காதல் ரசமோ சாம்பாரோ ஒழுகும் வரிகள் காமத்தின் தவிப்பும் காத்திருத்தலின் துடிப்பும் தனிமையின் துயரும் தன்னொளி கொள்ளா முழுமையும் என எண்ண எண்ண எழுந்து வருகின்றன முழுநிலவின் முகங்கள் அத்தனைக்கும் மேல் அதுவொரு… Continue Reading →

கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும்

மஹா சிவ ராத்திரிக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது சென்ற வாரம் தான் எனக்குத் தெரிய வந்தது. மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அது. அதுவு‌ம் வார இறுதியில் விடுமுறை கூடுதல் திருப்தியைத் தரும் தானே. ஏனெனில் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் பலர் சனிக்கிழமை விடுப்பெடுப்பார்கள். குறைந்த மனிதர்கள் மட்டுமே இருக்கும் அலுவலகம்… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑