வெகுதூரத்தில் கேட்கிறது குற்றத்தின் காலடிச்சத்தம் பூழியை எழுப்பாமல் மெல்லப் பதிகிறது குற்றத்தின் பாதம் சத்தமில்லாமல் ஆதுரத்துடன் கவ்வி துளி ரத்தமும் மண்சிந்தாமலுண்ணும் புலிபோல அத்தனை பரிவுடன் என்னை எடுத்துக் கொள்கிறது குற்றம் குற்றத்தின் தியான நிலையை அஞ்சுகிறேன் என்று சொல்லி அழுகிறார் கடவுள் குற்றத்தின் வேர்மணத்தை தவிர மற்றதனைத்தையும் வெறுப்பதாய் விலக்கம் காட்டுகிறாள் இறைவி குற்றங்களை… Continue Reading →
தந்தையரே உங்கள் கண்ணீரும் தியாகங்களும் எங்களுக்குப் புரிகிறது தந்தையரே உங்கள் தனிமையும் துயருங்கூட எங்கள் சிறிய இதயங்களுக்கு புரியவே செய்கிறது தந்தையரே உங்கள் மைந்தர் என்பதாலேயே உச்சியின் தகிப்பை உணரும் நடு ஆற்றினைப் போல உங்களை உணரவும் செய்கிறோம் இருந்தும் என்ன செய்ய உணர முடியுமே அன்றி போக்கிவிட முடியவில்லையே எங்களால் தந்தையரே நாங்கள் உங்களை… Continue Reading →
உங்களால் நம்ப முடிகிறதா இப்பெருவலைப் பின்னலில் நிகழ்ந்துவிட்ட ஆகச்சிறந்த சாத்தியங்களில் ஒன்று உங்கள் மனமென நம்பாவிட்டாலும் அது மாறிவிடுவதில்லையே அப்படியிருக்க நீங்கள் மகிழ்வதும் துயர்வதும் எதற்காக ? மறைப்பதும் மயங்குவதும் எதற்கஞ்சி? காத்துக்கொள்ள நினைப்பதும் கட்டியெழுப்ப நினைப்பதும் எதை? உங்கள் சிறுமையைக் கண்டு சிரிக்கிறேனே இன்னுமா இன்னுமா புரியவில்லை உங்களுக்கு மலைப்பாறைகள் கொடுக்கப்பட்டிருக்க மணற்பருக்களை பொறுக்கும்… Continue Reading →
ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆணவக் கொலைகளின் காலம் என்ற நூலின் இறுதி அத்தியாயத்துக்கு அடுத்ததாக நான்கு பக்கங்கள் நீளும் ஒரு அட்டவணை இருக்கும். 2008-ல் இருந்து 2015 வரை ஜாதி மாறி திருமணம் செய்ததால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் அது. நீதி மன்றத்தில் பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே 47. தமிழக கிராமங்களின் உண்மையான முகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும் கொலை… Continue Reading →
சதீஷின் வீட்டுக்கு எதிரே இருந்த சேற்றுத்தடம் காலையில் இருந்தது போல இல்லை. அவனுடைய அப்பாவின் கார் ஷெட்டினுள் எனக்கு முகத்தைக் காட்டியபடி நின்று கொண்டிருந்தது. அந்தப் பழைய அம்பாசிடரின் முகம் ஒரு சாத்தானின் சிரிப்பு போல இருக்கும். அது என் மீது அளவுக்கதிகமாக வன்மம் கொண்டிருப்பதாக ஒருமுறை சதீஷிடம் சொன்னேன். மிகத்தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தவன் பேனாவின்… Continue Reading →
சுரேஷ் பிரதீப்பின் பெரும்பாலான சிறுகதைகள் என் தோல்பரப்பை முட்களால் குத்தி நாளங்களை தொடுகின்றன. மிகச் சில கதைகள் கண்ணாடிக் கூர்மையுடன் உள்ளுறுப்புகளுக்குள் சென்று கீறி , குருதியிழக்க செய்கின்றன. ஆனால் ஒரு நல்ல சிறுகதை என்பது, முதல் வாசிப்பில், குறிவைத்து தாக்கிய துப்பாக்கி குண்டு போல, என்னை துளைத்து என்னுள் ஊடுறுவி ஒரு உறுப்பிழப்பு, பாகமிழப்பை… Continue Reading →
2017-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான வாசகசாலை விருது எனக்கு வழங்கப்பட்டது. அறிமுக உரை மற்றும் ஏற்புரை காணொளி விருது குறிப்பு வாசகசாலை தமிழ்_இலக்கிய_விருதுகள் -2017 சிறந்த அறிமுக எழுத்தாளர்: சுரேஷ்_பிரதீப் இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறந்த அறிமுக எழுத்தாளர் பிரிவில் தனது “ஒளிர் நிழல்” நாவல் மற்றும் “நாயகிகள் நாயகர்கள்” சிறுகதைத் தொகுப்பிற்காக… Continue Reading →
விஷால் ராஜா தனது சிறுகதை தொகுப்பில் வாசகசாலை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பார். அதன் வழியாகவே வாசகசாலையை அறிந்தேன். வாசகசாலையின் முகநூல் பக்கத்தை இரண்டு மாதங்களாக பின் தொடர்கிறேன். என்னுடைய சிறுகதையான பிரைமரி காம்ப்ளக்ஸ் குறித்து வாசகசாலையில் விவாதிக்கப்பட்டதை பின்னர் அறிந்தேன். தொடர்ந்து நாவல்கள் சிறுகதைகள் சினிமா என தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வாசகர்களையும் கலை… Continue Reading →
மிகச் சிறிதாக சுதா புன்னகைத்தாள். நிமிர்ந்து பார்க்கவில்லை எனினும் என்னால் உணர முடிந்தது. நிமிர்ந்த போது அம்முகத்தில் இருந்த புன்னகை அழுத்தி துடைக்கப்பட்டிருந்தது. “என்னடி” என்றேன். ஒன்றுமில்லை என தலையசைத்தாள். “சொல்ல வந்தத சொல்லு” “அம்மா கூப்டிச்சி” “என்னையா?” “என்ன” “போவேண்டியது தான” “பயமாருக்கு” “அடிக்கமாட்டா போ” “அடிச்சான்னா” “நீ என்னைய வந்து அடி” “செரி”… Continue Reading →
குளிக்கச் சென்றிருக்கிறாள் போல. மெத்தையில் வீடு திரும்பியபோது அணிந்திருந்த அதே சுடிதாருடன் தூங்கியிருக்கிறாள் என்பது மெத்தைக்கு கீழே கிடக்கும் காலணிகளால் தெரிகிறது. அவளது காலணிகள் ஓரிடத்தில் நின்று கழற்ற வேண்டியவை. அவளுக்கு நான் தான் அதை வாங்கிக் கொடுத்திருந்தேன். “என்ன இம்ச பண்றதுல உனக்கு என்னடா அப்படி சந்தோஷம்” என குறுஞ்செய்தியிட்டு அந்த செருப்பையும் புகைப்படம்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑