Author சுரேஷ் பிரதீப்

தோரணை எனும் தோற்ற மயக்கம்

                       சிறு வயதில் ஆத்தா  வீட்டிற்கோ ( திருவாரூர்  உட்கிராமங்களில்  பாட்டியை  ஆத்தா  என்று அழைப்பதே வழக்கம்) பெரியம்மா  வீட்டிற்கோ செல்லும்  போது  ஒன்றை கவனித்திருக்கிறேன். வீட்டு வாசல் வரை மட்டுமே  அம்மாவின்  கை என்னைப்  பற்றி  இருக்கும். திண்ணையிலேயே  மாமாவோ… Continue Reading →

அதிகாரமும் அழகுமுத்து சாரும்

                             ஏழாம்  வகுப்பு  படிக்கும்  போது அழகுமுத்து எனக்கு  தமிழாசிரியர். உமா பார்வதி என அவருக்கு  இரண்டு  மனைவியர். அவ்வயதில் இரண்டு மனைவிகளுடைய முருகனிலிருந்து கிட்டத்தட்ட  அதே பெயருடைய  என் தாத்தா  வரை அனைவரையும்  நான்  குற்றவாளிகளாகவே… Continue Reading →

வாக்களித்தல் ஒரு உயர் நாகரிகச் செயல்பாடு

அன்பு  நண்பர்களுக்கு  வணக்கம்     தினமலர்  நாளிதழில்  எழுத்தாளர்  திரு. ஜெயமோகன்  அவர்கள் “ஜனநாயக  சோதனைச் சாலையில்” என்ற தலைப்பில்  எழுதிய  தொடர் கட்டுரைகள்  வாக்களிப்பது  குறித்த பெருமிதத்தை  வாசித்தவர்களிடம் உருவாக்கி  இருக்கும்  என நம்புகிறேன். அத்தகைய  பெருமிதத்துடன்  சக குடிமகனாக  நான்  உணர்ந்தவற்றை உங்களுடன்  பகிர்வதே இக்கட்டுரையின்  நோக்கம். இனி…               நம்முடைய அரசியல் … Continue Reading →

நுண்ணுணர்வும் நுகர்வுணர்வும்

நுண்ணுணர்வும்  நுகர்வுணர்வும் அந்நியமாதலும் ஆனந்தமாதலும்   என்ற கட்டுரையின்  தொடர்ச்சியாக இதனைக்  கொள்ளலாம்  எனினும்  இதன் பேசுபொருள்  தன்னளவில்  தனித்ததும் கூட. தலைமை  என்பது  அனைத்துத்  துறைகளிலும்  மதிக்கப்படும்  அறிவுடையவர்களால் விரும்பப்படும்  ஒன்றாகவே  இருந்து  வந்துள்ளது. ஒப்பு நோக்கும்  போது ஒரு தொழில் நிறுவனத்தில்  சற்று உயர்ந்த நிலையில்  இருக்கும்  ஒருவர்  ஒரு மாவட்ட  ஆட்சியரை விட… Continue Reading →

24 – என் விமர்சனம்

ஒரு சமூகம் தன் கலை வடிவங்கள்  (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து  நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை  சார்ந்த  பார்வையையும் உருவாக்கிக்  கொள்ளும்  போது  தான்  தனித்த  அடையாளங்கள்  கொண்ட  பன்மைத் தன்மை  அச்சமூகத்தின் முகமாக  அமைந்து வலுப்பெறும்.  பெரும்  பொருட்செலவிலும் அதிகமான  மனிதர்களின்  உழைப்பினாலும் உருவாக்கப்படும்  திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும்…. Continue Reading →

அந்நியமாதலும் ஆனந்தமாதலும்

       அந்நியமாதலும் ஆனந்தமாதலும் வெகுநேரம்  குனிந்த  படியே  மண்வெட்டியால் தரையை  வறண்டிக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்த  போது இடுப்புக்கும்  மார்புக்கும்  இடையே  ஒரு கூச்சம் தோன்றியது. பல நாட்களாக  ஒரு வேலையும்  செய்யாமல்  இருந்ததன்  பலன். இருந்தும்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  தொடர்ந்து  மண்ணைக்  கிண்டினேன். உடல் முழுக்க வியர்வை  வழிவதை… Continue Reading →

பெரியம்மா வீடு

வாய் திறப்பதற்கு  முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம்  வாய்க்கு முதலில் வந்துவிட்டதால்  மூடிய  இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில்  இடக்கை மணிக்கட்டில் பட்டதும்  துடித்துப்  போய்  எழுந்து கொண்டான். நல்லவேளை  தலையணையில் எச்சில் படவில்லை  என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில்… Continue Reading →

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

ஏப்ரல் 2016, ஜெயமோகன்.இன் https://www.jeyamohan.in/87049

அறிதல் தொடங்கும் கணம்

என் அறிதல்  தொடங்கும்  கணத்தில் உருமாறுகிறது உலகுஎனக்கென்று  விடிகிறது இவ்விரவு என்னோடு நடக்கிறது  இந்நிலவுஏதேதோ  சொல்கிறதுஇக்கனவுஎன் அறிதல் தொடங்கையில் முடிகிறது இச்சோர்வு இருப்பது  இல்லாமலாகமட்டுமே இல்லாமலிருக்கையில்இருப்பு  தேடியா அலைகிறேன்எவ்வளவு  அள்ளியும் எஞ்சுகிறது ஒரு  துளி எத்தனை  சொல்லியும் மிஞ்சுகிறது  ஒருசொல்எஞ்சுவதும் மிஞ்சுவதும் எனதென்று எடுக்கையில்அள்ளியதும் சொல்லியதும்அண்மிக்கையில்எதை  எடுப்பேன் எதை  தடுப்பேன் சொல்லிவிட முடிவதில்லை சொல்லாமல்  விடவும்… Continue Reading →

அழகி

அழகி அங்குதான். அன்றுதான். அக்கணந்தான். அருகாமையின் அர்த்தம்  புரிந்த கணமது. அறியாமையின்  இன்பம்  நுகர்ந்த நாளது. அவள் எனும் பதத்தை ஒவ்வொரு  நொடியும் ஒருமைக்கு வெளியே இழுக்கிறாள். அவளை அவள்கள் எனலாமா? இலக்கணம்  ஒப்ப மறுக்கலாம். ஆம். அவளொரு கூட்டுக் கனவு. அழகின் அத்தனை  அளவைகளுக்கும்  ஒரு அறைகூவல். முழுமைக்கு வெளியே நின்று கொண்டு முகம்… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑