Author சுரேஷ் பிரதீப்

பெருஞ்சுழி 5

5 “அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக்  கொள்ளட்டும் இத்தேசம். அறிக! அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென.” சவில்யத்தின் வணிக மன்றில் பாணன்  ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி. சுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில்  தனித்தலைந்து கொண்டிருந்தாள்  ஆதிரை.  அவளை  அக்காடறியும். பிறந்தது… Continue Reading →

பெருஞ்சுழி 4

4 ஆதிரை  மாரதிரன்  தலை வீழ்த்தியவன்று  சவில்ய கோட்டம்  உறைந்திருந்தது. எந்த வித ஒற்றுச் செய்தியோ வதந்தியோ நகரில்  பரவவில்லை.  ஆதிரையின்  படைவீரர்கள்  அன்று  முழுவதும்  நகர்  நுழைந்தவண்ணம்  இருந்தனர்.  நாற்பதாயிரம்  வீரர்கள்  கொண்ட  மாரதிரன்  காலாட்படை  தளபதிகளின்  ஆணை  பெற முடியாமல்  செயலற்று  நின்றது. நள்ளிரவு  நகர்  புகுந்த  கணபாரனின்  குறும்படை ஆதிரையின்  வீரர்களில்… Continue Reading →

பெருஞ்சுழி 3

3 “தொடங்கியது  பெரும்  யுத்தம். மண்ணில்  நிகழ்ந்தவை  அனைத்தும்  இறைவனை கோபமுறச்  செய்தன.  மனிதன் வஞ்சம்  நிறைந்தவன். ஆணை  பெற்று  ஆள வேண்டியவன் ஆணை பிறப்பித்தவனை வீழ்த்த  நினைத்தான். மனித  பலம்  கூடிக்  கொண்டே  வந்தது.  பலம்  கூடுகையில் கடவுளின்  கருணை  சுரப்பான நீரின்  பரப்பு  குறையத்  தொடங்கியது.  இறைவனை  எதிர்க்கும்   மனிதனின்  யுக்தி… Continue Reading →

பெருஞ்சுழி 2

  2  அவ்விடியலை மோதமதி  அவ்வாறு  கற்பனை  செய்திருக்கவில்லை. இறந்த  போன  ஆதிரையின்  உடலை  தான்  ஏக்கத்தோடு பார்த்திருப்போம் என்றோ அல்லது கசக்கி எறியப்பட்டவளாக ஆதிரை  விடியலில் அரண்மனையின்  குறுவாயில் விட்டு  பித்துப்  பிடித்தவளென வெளியேறுவாள் என்றோ  தான்  நினைத்தாள்.  அக்கணம் தன்னை  ஒன்றும்  செய்ய இயலாத  கருணையின் வடிவென நினைத்துக்  கொண்டிருந்தாள். ஆனால்  இன்று… Continue Reading →

பெருஞ்சுழி 1

பெருஞ்சுழி 1 “வெற்றி  முழங்கட்டும் எண்குடி வென்று மண்பகை கொன்று விண் புகழ் நோக்கும் கோவே வெற்றி  முழங்கட்டும் உன் வெற்றி முழங்கட்டும் விண் அதிரட்டும் முழக்கம்  விண்ணை வெல்லட்டும்” மாரதிரன் சபையில்  எட்டு  நாழிகை  நேரம் இடைவிடாமல் பாடிய ஆதிரை இவ்வரிகளுடன்  தன் கிணையை தாழ்த்தியபோது எழுந்தமைந்தது நிறைமாதத்தில் மேடிட்டிருந்த  அவள் வயிறு. கூர்ந்த… Continue Reading →

பெருஞ்சுழி அறிமுகம்

நண்பர்களுக்கு  அன்பு வணக்கங்கள்                                                   பெருஞ்சுழி என்ற தலைப்பிட்ட இக்கதை  தொகுதியின் வடிவம்  நாவலாக  இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். கற்பனையில் உருவாக்கப்பட்ட… Continue Reading →

உள்ளெழுதல் – சிறுகதை

உயர எறியப்பட்டவளாக  உணர்ந்த மறுகணம் மண்ணில்   இருந்தேன். என்னுடன்  நான் மட்டும். எங்கே  நின்று கொண்டிருக்கிறேன். எதிரே ஏதேதோ  தெரிகிறது. ஏதேதோ  என்றா சொன்னேன். இல்லை  யாவும்  நான்  அறிந்தது தான். யாவும்  என எப்படி  சொல்ல முடியும். எல்லாவற்றின்  வழியாகவும்  என்னையே அறிந்த கொண்டிருந்த  நான் பார்த்தது  எல்லாம் நானே. நாணற்புதரில் நெளிந்த… Continue Reading →

கரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின்  கரைந்த நிழல்கள்  நாவலின்  கதை  அல்லது  “கரு” என்ன  என்று அந்த நாவலைப்  பற்றி  சொல்லப் போய் யாரும்  என்னிடம் கேட்டுவிடக்  கூடாது  என்பதற்காக  அந்நாவல் குறித்து  எழுதி  விடலாம்  என்று  முடிவு  செய்து  கொண்ட பின்  எழுதுகிறேன். விரைவாக  வாசிப்பவர்கள்  அரை நாளில்  வாசித்துவிடக்  கூடிய  அளவிற்கான  சிறிய  படைப்பு கரைந்த  நிழல்கள்…. Continue Reading →

போரும் வாழ்வும் குறித்து

சில ஆயிரம் தமிழர்கள் மட்டுமே வாசித்திருக்கக்கூடிய ஆனால் தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பு படைப்பு லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் (War and Peace மொழிபெயர்ப்பு: டி.எஸ்.சொக்கலிங்கம்). பெரு நாவல் முயற்சிகளுக்கான உத்வேகம் அளிப்பதோடு வாழ்வில் எழக்கூடிய பல அறம் சார்ந்த கேள்விகளுக்கு உபதேசம் செய்யாமல் வாழ்வினைக் கொண்டே பதிலளிக்ககூடிய படைப்பு போரும் வாழ்வும். எழுத்தாளர் திரு… Continue Reading →

கன்னி மேரி

       சக இலக்கிய  வாசகரும் எனது தோழியுமான திருமதி. மேரி எர்னஸ்ட்  கிறிஸ்டி அவர்களின் முதல்  சிறுகதை  இது.   மேரியின் நினைவெழுகிறது. வேளாங்கண்ணி கான்வெண்ட்டில் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டில் கதையெழுதிக் கொண்டிருப்பாள். மாநிறம். சிறிய வட்ட முகம். ஒல்லியான தேகம். முழு பாவாடை சட்டை போட்டிருப்பாள். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இந்நேரம்… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑