நிரத்துவனை பின் தொடர முடியாத குதிரைகள் சோர்ந்து மண் விழுந்தன. காற்றின் திசையறிந்து விரைந்தது நிரத்துவன். தன் மீதிருப்பவர்களை அது சுமையெனக் கொண்டதாகத் தெரியவில்லை. சவுக்கு மரங்களும் பாக்கு மரங்களும் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு கடற்கரை சதுப்புக் காட்டினுள் நுழைந்தது நிரத்துவன். கரும்பாறை குன்றுகளாக நிறைந்திருந்த அவ்விடத்தில் சுனதன் கண்ணயர்ந்தான். தெரிதன் கண் விழித்தான். என்ன … Continue Reading →
ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக் கொள்ளும் போது அது தன் வரலாற்றை தெரிந்து கொள்வதிலும் தன்னை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் கொள்கிறது. மரபினை ஒரு பொதுப் புரிதலுக்கு உள்ளாக்க ஆர்வம் உடைய ஒருவருக்கு பாட்டிக் கதைகளும் திரைப்படங்களும் வீரக் கதைகளும் ஒருவித திருப்தி அளிக்கவே செய்கின்றன. ஆனால் தீவிரத்துடனும் கல்வியின் பலனாய் அடைந்த… Continue Reading →
கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன் நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர் கொட்டடி பகலிலும் இருண்டிருந்தது. தீப்பந்தங்களின் சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது…. Continue Reading →
பாலை கடந்ததன் தடங்கள் தென்படத் தொடங்கின. மேற்கிலிருந்து பறவைகள் கலைந்தெழும் ஒலி கேட்கத் தொடங்கியது. சுனதன் தன் மனதில் ஒரு இதம் பரவுவதை உணர்ந்தான். அதற்கென தன்னை நொந்து கொண்டான். பாலையும் சோலையும் வேறுபடுவதை ஆழ்மனம் இன்னும் உணர்கிறது என்ற எண்ணம் அவனை துணுக்குறச் செய்தது. பசும் பரப்புகளைக் கண்டதும் நிரத்துவன் துள்ளத் தொடங்கியது. மதீமம்… Continue Reading →
சகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன. மாவலியத்தை… Continue Reading →
மாவலியன் அரியணை அமரவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு நிலம் அவன் வெல்வதற்காக காத்து நின்றது. தன் நிலம் நோக்கி மாவலியன் வருகிறான் என்று அறிந்ததுமே மன்னர் பலர் மணிமுடியை அரியணையில் வைத்து நகரொழிந்தனர். முமனகம் என்ற சிற்றரசின் தவைவன் “மாவலியனை மண்ணில் சாய்ப்பேன். என் உயிர் இவ்வுடல் நீங்காமல் அவன் என் நிலம் நுழைய … Continue Reading →
9 வெண்மை என்பது நிறமல்ல. அது முழுமை.நிறைவு. வலிமை. ஆவல். முனைப்பு. வெற்றி. புகழ். தேக்கம். அழிவு. வெண்மையென்றாவதால் வாழ்கின்றன உயிர்கள். பெரும் புல்வெளிகளால் சூழப்பட்ட அச்சிறு தேசம் அணுகிப் போரிட முடியாத இயற்கை அரண்களால் வளைக்கபட்டிருந்தது. குளிர் பரப்புகளுக்கு நடுவில் நின்றிருந்த அத்தேசத்தின் காலம் விடியலின் புணர்ச்சி போல முனைப்பற்ற இன்பம் கொண்டு தேங்கித் ததும்பி… Continue Reading →
8 அன்பு கொண்டொழுகுதலன்றி சுனதன் வேறேதும் அறிந்திருக்கவில்லை. குலம் காக்க வந்த தெய்வமென அவனை வணங்கியது மலை நோக்கி தினம் தினம் வந்த துயரவர் கூட்டம். முதலில் நிரை வகுத்து அவ்விடம் அடைந்த நூற்றியிருபது பேரும் மக்களை மலை நோக்கி கொண்டு வந்தனர். சமவெளி மட்டுமே கண்டிருந்த மக்கள் அம்மலை வாழ்வை விரும்பவில்லை. தங்கள் தலைவனென… Continue Reading →
7 ஆதியில் இருந்தது என்ன? அதுவும் அறிந்திருக்கவில்லை. அறியவில்லை என அறிந்த போது அறிதலாகி வந்த தன்னை அது உணர்ந்தது. அறிதலுக்கு முந்தைய கணத்தை மீட்டெடுக்க முயன்று முயன்று தோற்றது. அவிழ்த்துக் கொட்டி தன்னைத் தேடத் தொடங்கியது. யுகங்கள் கடந்த அந்தப் பெருந்தேடலில் புடவியென்றாகி அதில் புவியென நின்றது. அறிக! அறிதலின் வேட்கையில் எரிகிறது இப்புடவி…. Continue Reading →
6 அறிக நொடி நொடியாய் துயரை தனிமையை வலியை உணரும் உயிர்களால் உய்கிறது இவ்வுலகென. பாணன் தொடர்ந்தான். முப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு என்றழைக்கப்பட்ட பெரு மலையின் மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது எவர்தொடாமேடு. நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த ஆழிமாநாடு சுனத வனம் என்பதை கதைகளாய்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑