நட்டாஷா என்ற பெயரை போரும் வாழ்வும் நாவல் படித்தவர்கள் மறந்து விட முடியாது. மிக நுட்பமாக உருவகிக்கப்படும் கதாப்பாத்திரம் அவள். அறிந்த சிறுமியுடன் இளம்பெண்ணுடன் அன்னையுடன் என ஏதோவொரு வகையில் அவளை ஒப்பிடாமல் வியக்காமல் ஏங்காமல் அந்நாவலை படித்து முடித்து விட முடியாது. அத்தனை அணுக்கமானவள் என்பதாலேயே பெரு வாழ்வென எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கிடக்கும்… Continue Reading →
ஏழாம் வகுப்பு படிக்கும் போது அழகுமுத்து எனக்கு தமிழாசிரியர். உமா பார்வதி என அவருக்கு இரண்டு மனைவியர். அவ்வயதில் இரண்டு மனைவிகளுடைய முருகனிலிருந்து கிட்டத்தட்ட அதே பெயருடைய என் தாத்தா வரை அனைவரையும் நான் குற்றவாளிகளாகவே கருதினேன். அது போன்றே அழகுமுத்து “அய்யா” மீதும் ஒரு சிறு வெறுப்பு. ஆனால் இன்று யோசிக்கும்… Continue Reading →
நாற்பதாண்டுகளுக்கு முன் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய “ரூட்ஸ்” அமெரிக்காவில் ஒரு தொலைத்தொடராக (serial) எடுக்கப்பட்டது. ஒரு கருப்பின இளைஞன் பண்ணை அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட தன் மூதாதையர் அடைந்த இன்னல்களை கண்டடைவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவை உலுக்கிய ஒரு தொடராக அது இருந்ததாகவும் அந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் புறப்பட இருந்த விமானங்களின்… Continue Reading →
நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை அளிக்கிறது. நிலைபெயராத துருவனும் நிலை கொள்ளாத ஆகாய கங்கையும் என சுழற்சியின் இரு பெரும் விசைகளை அறிமுகம் செய்கிறது. கங்கையை… Continue Reading →
வியாசபாரதத்தில் கிருஷ்ணன் அறிமுகமாவது இளைஞனாகவே. தன் அத்தையான குந்தியிடம் மகதத்திடமிருந்து மதுராபுரியை மீட்பதற்காக படையுதவி கேட்டு வருகிறான் கிருஷ்ணன். நாம் பரவலாக அறிந்த துடுக்கும் ஞானமும் நிறைந்த இறை அவதாரமாக வியாச பாரதத்தில் கிருஷ்ணன் சித்தரிக்கப்படவில்லை. மகாபாரதம் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பாகவதம் எனும் நூலில் தான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் சித்தரிக்கப்படுகிறது…. Continue Reading →
நம் ஒவ்வொருரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக… Continue Reading →
கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம் மிக்க ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில் இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக ஒரு மாயாஜால … Continue Reading →
என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின் சில தொன்மங்களையாவது கேட்டு வளரும் பேறு பெற்றவன் நான். நுட்பமான கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல் முதல் முறை வாசிக்கும் போது எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள… Continue Reading →
வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும் மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசை மறு வாசிப்பு செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என பத்து நாவல்களை ஆசிரியர் எழுதிவிட்டார். இப்போது அடுத்தநாவலான சொல்வளர்காடு… Continue Reading →
உடல் விரித்துப் படுத்திருந்தான் அரிமாதரன். வெட்டுண்ட தழும்புகள் அணி செய்வது போல உடல் முழுக்க பரவியிருந்தன. அரிமாதரன் விழித்த போது இரவில் இசைத்த பாணர்கள் அனைவரும் புறப்பட்டிருந்தனர். எழுந்த கணத்தில் அரிமாதரனுக்கு சுயம் நினைவிலில்லை. தேர்தட்டில் ஆதிரையை பார்த்து நிற்பதும் சவில்யம் சுனதபாங்கம் ஆநிலவாயில் திருமீடம் என நான்கு தேசங்களும் இணைக்கப்பட்டு சுனதம் என்ற ஒற்றை… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑