அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை “பெருக்கிக்” கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும்…. Continue Reading →
பாண்டவையின் கரைகள் நெருங்கி வளர்ந்த மரங்களால் இருளடைந்து உயர்ந்திருக்கும். வெயிலுக்குதந்தவாறு உடல் நெளித்து பாண்டவையின் மையம் கடந்து நீண்டிருந்தது உடலில் பெரு வளையங்கள் பரவிய தென்னை. மேகங்களின்றி தனித்திருக்கும் உச்சியின் சூரியனை நோக்குவதற்கென சேவுராயன் வழக்கம் போல் அத்தென்னையின் உடல் மையத்திற்கு வந்து நின்றான்.இடுப்பில் கை வைத்து அண்ணாந்து நோக்கி கண்கள் உச்சியில் நிலைத்த போது… Continue Reading →
பாண்டவையின் கரைகள் நெருங்கி வளர்ந்த மரங்களால் இருளடைந்து உயர்ந்திருக்கும். வெயிலுக்குதந்தவாறு உடல் நெளித்து பாண்டவையின் மையம் கடந்து நீண்டிருந்தது உடலில் பெரு வளையங்கள் பரவிய தென்னை. மேகங்களின்றி தனித்திருக்கும் உச்சியின் சூரியனை நோக்குவதற்கென சேவுராயன் வழக்கம் போல் அத்தென்னையின் உடல் மையத்திற்கு வந்து நின்றான்.இடுப்பில் கை வைத்து அண்ணாந்து நோக்கி கண்கள் உச்சியில் நிலைத்த போது… Continue Reading →
செவியை அடைக்கும் கனத்த மௌனத்தில் கீறல் விழுந்தது போல ஒருவர் அடிவயிற்றிலிருந்து குமட்டுவதும் எரிச்சல் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு குழந்தை அழுவதும் கேட்டன. மாதாவிற்கும் குழந்தை ஏசுவுக்கும் கத்தரிப்பூ நிறப் பொன் சரிகை பட்டுடுத்தி பிரபலமான “நமச்சிவாய நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா” பாடல் மெட்டில் “தேவன் துதி” பாடியபடியே காவி உடுத்திய ஆண்களும் பெண்களும்… Continue Reading →
காட்டின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு மனிதர்களை வேட்டையாடி உண்ணும் புலியினை விட பரிதாபகரமான மிருகம் எது? இல்லை. தவறான தொடக்கம். விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஒரு புலியுடன் என்னை ஒப்பிட முடியாது. ஏனெனில் கேவலம் மனிதர்களை வேட்டையாடும் அந்தப் புலி நிச்சயம் ஒரு சமயம் அக்காட்டில் விரைவுடனும் சீற்றத்துடனும் வேட்டையாடி இருக்கும். நான் அவ்வாறல்ல. விளிம்பிலிருந்து மையத்தை எட்டி… Continue Reading →
இரண்டு பாட்டிலில் அண்ணன் தண்ணீரை எடுத்து கைப்பையில் வைத்தபோது கடுப்பாக இருந்தது. “அப்ப ரெண்டு நா வெளில தங்குறதுன்னா வாட்டர் டேங்க எடுத்து பைக்குள்ள வெப்பியா” என்றேன். வழக்கம் போல் அவன் பொருட்படுத்தவில்லை. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நாடி ஜோசியம் பார்ப்பதற்காக அல்லாமல் ஒரு அர்ச்சனை செய்வதற்காக அனைவரும் புறப்பட்டோம். மிகவும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் சென்றேன்… Continue Reading →
மூத்திரம் பெய்வதற்கு வீட்டெதிரே செல்லும் சாலையை கடந்து சென்று குத்துக்காலிட்டு அமர்ந்தேன். தூரத்தில் ஒரு ஈருருளி நெருங்கும் ஒலி கேட்டது. மூத்திரம் இன்னும் வரத் தொடங்கவில்லை. அந்த வண்டி என்னைக் கடப்பதற்குள் பெய்துவிட வேண்டுமே என்ற பதற்றம் ஏறியது. இயல்பான தன்னுணர்வினால் மூத்திரம் பெய்வதற்கு அப்போது வரவில்லை. படுப்பதற்கு முன் இது ஒரு சடங்கு போலவே… Continue Reading →
உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது. முதலில் நூல் வடிவமைப்பு. எதிர்காலத்தில் இந்நாவலை மின் நூலாக… Continue Reading →
அன்பிற்குரிய நண்பனே இது நான் உனக்கெழுதும் முதல் கடிதம். இறுதிக் கடிதமாகவும் இது இருக்க வாய்ப்பிருக்கும் காரணத்தால் இதுவரை உன்னுள் பிரதிபலித்த என்னை மறந்து விடு. தோல் மட்டுமல்ல நொய்மையான நம் உள்ளுறுப்புகளை காப்பது. அதற்கும் மேலே நாம் பூசிக்கொள்ளும் நட்பு காதல் தாய்மை அம்மா பாசம் பிள்ளை பாசம் போன்ற நறுமண திரவியங்களும் நம்முள்… Continue Reading →
வெண்முரசு நாவல் வரிசையில் முதல் ஆறு நாவல்களும் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்னரே முதல் முறை வாசித்தேன். காண்டவம் எனப்பெயரிட்டு தொடங்கப்பட்ட நாவல் பாதியில் கைவிடப்பட்டது. ஒரு வகையான விளக்க முடியாத இழப்புணர்வை அந்நேரம் உணர்ந்தேன். திரௌபதி நாகர்கள் குறித்து அறியும் வகையில் காண்டவம் தொடங்கும். காண்டவ வனம் நாகர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு இந்திரப்பிரஸ்தம் அமைக்கப்படும் சித்திரம்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑