பொழுதுபோக்கு எழுத்துக்களின் முக்கியமான பங்களிப்பென்பது அவற்றால் ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையை கட்டமைக்க முடியும் என்பதே. பொன்னியின் செல்வனில் ராஜராஜன் எங்கேனும் மது அருந்தினான் என்றோ யாரையேனும் கொல்ல ஆணையிட்டான் என்றோ எக்குறிப்பும் வராது. ஐந்து பகுதிகளாக வெளிவந்த அந்த நூலில் மிகப்பெரிய யுத்தம் கூட சித்தரிக்கப்பட்டிருக்காது. யுத்தத்தின் ரணங்களோ வன்முறைகளோ அந்த படைப்பில் தென்படாது…. Continue Reading →
(சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றிய விமர்சனம்) வண்டி நகர்ந்ததும் ஏய்டன் திரும்பிப் பார்த்தான். அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் முன்னால் நகர்ந்து வந்திருந்தது அவனைத் துணுக்குறச் செய்தது. புதர்களுக்குள் நாய்க்கூட்டம் நெருங்கிவரும் அசைவுகள். அந்தக்குழந்தை மேலும் முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது, வண்டியைத் தொடர்ந்து வருவது போல். “எங்கிருந்து வருகிறது அந்த ஆற்றல்?’. அது உயிரின் ஆற்றல். மண்ணிலுள்ள ஒவ்வொரு உயிரிலும் நிறைந்திருக்கும் வாழ்வின் விசை. ‘அது தான் சாத்தானா?’ -வெள்ளையானை – அத்தியாயம் 6 [ 1 ] “ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்?” இக்கேள்வியை அடிப்படையாகக் கொள்கிறேன். தீமை என இங்கு வரையறை செய்யப்படுவது எது? என இன்னொரு கேள்வியையும் இணைத்துக் கொள்கிறேன். இரு… Continue Reading →
வராதிருத்தல் கருணையின் ஈரம் வற்றிய சதுப்பில் தனித்தலையும் உயிர் அவன் அவன் உரிமைகளும் மீறல்களும் உலர வைத்தன அவன் மீதான அக்கறைகளை அவன் கபடின்மையில் களிம்பேறிய போது அவன் கரங்கள் தாவைபிடித்து பிறர் முகம் திருப்பிய போது தன்மீதே குவிந்திருக்க வேண்டும் பிறர் கவனம் எனப் பதறிய போது அவன் சிரிப்பு இளிப்பானது பொருள் பொதிந்த… Continue Reading →
மழையே இல்லாமல் போயிருந்தது. கடல்கள் வற்றியதால் சேறு கொழகொழவென எங்கும் நிறைந்து கிடந்தது. இறந்த மீன்களை உண்டு பசி தீர்த்துக் கொள்ள விரும்பிய பெரிய நாரைகள் வற்றிய கடலில் நீளமான கால்களை வைத்து தரையிரங்கின. களி மண் கால்களை அப்பிப் பிடித்தது. எழுந்து பறந்த போது அப்பிய சேறு உதிரத் தொடங்கியது. ஒரே இடம் நோக்கியே… Continue Reading →
கடவுளர் புணரும் வெளி எல்லோர் உடலிலும் ஏறியிருந்தது அது குளிரில்லை என்பதால் வெப்பம் என்றோம் அதை இன்மை இல்லை என்பதால் இருப்பு என்றோம் அதை என் கனவுகள் போலன்றி என் உடலையும் சேர்த்து யாருடலிலும் சட்டையில்லை யார் கனவும் போலன்றி எல்லோரும் அறிந்திருந்தோம் எங்கு தொடங்கியது அது என அச்சிறுவன் சொன்னபோது நம்பவில்லை நேரில் காட்ட… Continue Reading →
முதலில் தவறெனத் தோன்றியது. ஆனால் தவறுகள் மட்டுமே அளிக்கும் ஒரு கிளர்ச்சி உண்டு. மிகப்பெரிய எதிரான மீறல்களை நிகழ்த்தும் போது மட்டும் மனம் சென்று விழும் விசை மிக்க நதியொன்று உண்டு. கடிவாளம் மீறித் திமிரும் அம்மனம் அச்சமென ஒழுக்கம் என அறம் என போடும் வேடங்களை ஒரு தேர்ந்த கவர்ச்சியான திறன் மிகுந்த தொழில்… Continue Reading →
இனிப்பு உப்புச் சுவையும் எச்சில் மணமுமே உதட்டு முத்தம் தோழி பிறகு இனிப்பென்பதென்ன? முத்தம் இனிப்பல்ல ஒவ்வொரு இனிப்பும் முத்தமே —— பூசனை இலைப் பீப்பிகள் போல சுற்றி அழுகின்றன குழந்தைகள் நெரிசலான பேருந்து —— அது மட்டுமெனில் அது மட்டும் பால் மணம் மறந்த நாட்களில் அம்மாவின் அடிவயிறோடு ஒட்டி உறங்கிய பொழுதுகளில் உணர்ந்த… Continue Reading →
கவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் “உச்சி மீது வானிடிந்து” என்று தொடங்கியவர்கள் தானே. ஆகவே சிறந்த கவிதைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரும் மரியாதை நான் சிறந்தவை என எண்ணுபவற்றை பகிர்ந்து கொள்வது. மிகப்பெரிய அவமதிப்பு என்பது நான் எழுதியவற்றை பகிர்ந்து கொள்வது. இப்பதிவு அவமதிப்பே! மறைதுயர்… Continue Reading →
(ஜெயமோகன் இணைய தளத்தில் முதலில் வெளியானது) அன்புடன் ஆசிரியருக்கு அதற்குரிய அத்தனை ஆரவாரங்களுடன் நடக்கிறது திருவிழா. யாருக்கும் ஒரு குறையும் இல்லை. தேர் இழுக்கிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஆனால் இவையெல்லாம் நடப்பது மிட்டாய் விற்க வரும் அப்பா அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு பன்னிரண்டு வயது வீட்டு வேலை செய்யும் சிறுமியின் மனதில்… Continue Reading →
எனக்கு முன் எத்தனையோ பேர் சொன்னது தான் ஏளனம் செய்வதற்கு ஏற்றது தான் இயலாமையின் இயல்பான உச்சம் தான் இருந்தால் என்ன எத்தகைய கயமை நிறைந்த எண்ணம் எனினும் கண்ணீர் தூயதுதான் என் விழிகள் வழிவதே இல்லை இது தான் என் புலம்பல் என் குரல் உடைவதேயில்லை இது தான் என் புகார் எழுந்த செல்ல… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑