நண்பர்களுடனான ஒரு மாலை உரையாடலை பதிவு செய்தது மட்டுமே இது. அமேரிக்கா தேர்தல் முறை பற்றிய தகவல் மட்டும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி ஒரு முறையான உரையாற்றும் எண்ணத்தோடு தொடங்காததாலும் என்னுடைய சட்டைப்பையில் கிடந்த அலைபேசி இவ்வுரையை பதிவு செய்ததாலும் திறந்தவெளி உரை என்பதாலும் ஒலிப்பதிவின் தரம் குறைவாகவே இருக்கும். எனினும் என்னை என்… Continue Reading →
ஒளிர்நிழல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலின் முதல் வாசகரான மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி நாவலை வாசித்து மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா மற்றும் பேராசிரியர் டி.தருமராஜ் ஆகியோர் மட்டுமே நாவல் குறித்து தங்கள் பார்வையை விரிவாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். வாசிப்பதற்கு மெல்லிய சவாலை அளிக்கும் படைப்பு என்பதால் ஓரளவு இலக்கிய வாசிப்பு… Continue Reading →
ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை வெளியில் இருந்து சொல்லப்படும் போது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். அதன் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் சரியான வார்த்தைகளில் படம் பிடித்து நிறைவோ துயரோ வேண்டிய அளவு உணர்ச்சிகளை ஊட்டலாம். ஆனால் ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதையை அவ்வீடு புதிதாக இருந்த போது அங்கு வளர்ந்த ஒருவனின் சொற்களில் அதுவும் அவ்வீட்டுக்குள்… Continue Reading →
“ச்சூப்ரைச்சர்” என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் “ச்சூப்ரைச்சர்”. இம்முறை மேலும் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம்… Continue Reading →
அப்பா நான் யாழினி. நல்லா இருக்கீங்களா? இப்படி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்னோ அது என்னைப் பற்றிய தன்னிலை விளக்கமாக இருக்குமென்றோ நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நம் எண்ணங்கள் இளமை முதலே வேறுபட்டதில்லை என்று தான் நான் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் பல சமயங்களில் நான் உங்களுக்கு ஜால்ரா அடித்திருப்பதை இப்போது அவமானத்துடன் எண்ணிக் கொள்கிறேன்…. Continue Reading →
ஜனநாயகம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் மிகப்பெரிய வெண்ணிறப் பரப்பும் அதில் ஓவியம் எழுதுவதற்கான பல்வேறு வகைப்பட்ட தூரிகைகளும் வழங்கப்பட்டிருக்கையில் அப்பரப்பின் ஒரு மூலையில் உடைந்த பென்சில் ஒன்றால் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறோம் நாம் என்ற உணர்வை அடைவேன். அது போலத்தான் நாவல் என்ற வடிவமும் தமிழ் இலக்கியத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டு… Continue Reading →
பத்து வயதில் ஐந்து கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை சைக்கிளில் கடப்பது எனக்கு எண்ண முடியாததொரு கிளர்ச்சியை அளித்திருந்தது. அப்போது எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியது. அமர்ந்து செல்வதே கிளர வைத்திருந்தது. அதிலும் பயண நோக்கம் ஸ்பைடர் படம் பார்க்கச் செல்வது. வழக்கமாக பயணிக்கும் கொரடாச்சேரி-கமலாபுரம் சாலை வழியாக இல்லாமல் பாண்டவை ஆற்றின் மறுகரையில் உள்ள ஆலத்தாங்குடி… Continue Reading →
கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும்
ஒளிர்நிழலின் முதல் வாசகராகிய திருமதி.மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அந்நாவல் குறித்து எழுதிய பதிவு இந்நாவல் முதலில் ஒரு சிந்தித்தலை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கதைசொல்லி ஆரம்பிப்பதுபோலவோ நாவலாடலின் இடங்களையோ மாந்தர்களையோ வர்ணிப்பதுவோ இல்லாமல் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கிறது அந்த ஆரம்பநிலை சிந்தனைகள். அப்பொழுதே மனம் ஒருங்கிவிட்டது. இந்நாவலின்மூலம் அப்படி என்னதான் சொல்லவருகிறார் என எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது…. Continue Reading →
பதாகையில் வெளியாகி இருக்கும் என் சிறுகதை அலுங்கலின் நடுக்கம்
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑