Author சுரேஷ் பிரதீப்

ஒளிர்நிழல் எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்கள் 2

மணிமாறன் அன்பு பிரதீப்   ஒளிர்நிழல் வாசித்தேன்.  .    நாவலின் வடிவத்தை கட்டமைத்திருக்கக்கூடியத் திறன் திகைக்கவைக்கிறது.    உங்களது அனுபவ அவதானிப்பிற்குட்பட்ட ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை உங்கள் வயதளவிற்கான அத்தியாயங்களாகப் பிரித்து தேர்ந்த கவனத்தோடு  முன் பின்னாக கலைத்தடுக்கி ஒரிலக்கிய வாசகனுக்கே சாத்தியப்பாடுள்ள ஒரு நுண்சரடால் அதுவும் சற்றும் தொய்வில்லாத மொழி நடையில் கோர்த்திணைத்து முன்வைத்திருப்பது அபாரம்.   … Continue Reading →

எஞ்சும் சொற்கள் (சிறுகதை)

எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து சிவந்த உயரமான பெண் ஒருத்தி வலக்கையின் விரல்கள் மதிய உணவிற்கான பையையும் இடக்கையின் தோள் மற்றொரு பையையும் பிடித்திருக்க எங்களை நோக்கிப்… Continue Reading →

நூல் பத்து – பன்னிரு படைக்களம்

துரியோதனன் இந்திரபிரஸ்த நீர்மாளிகையில் தடுக்கி விழுந்து சிறுமை செய்யப்பட்டதாக உணர்வதில் தொடங்கி திரௌபதி துகிலுரியப்படுவது வரை நீளும் நாவல் பன்னிரு படைக்களம். வெண்முரசின் ஆறாவது நாவலான வெண்முகில் நகரம் வரை அவை எழுதி முடிக்கப்பட்ட பின்னரே நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆகவே முதல் வாசிப்பின் போதே அவை முழு நாவலாகவே இருந்தன. மறுவாசிப்பில் நாவலின் வடிவம்… Continue Reading →

வாசகசாலை விருது காணொளி மற்றும் விருதுக் குறிப்பு

2017-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான வாசகசாலை விருது எனக்கு வழங்கப்பட்டது. அறிமுக உரை மற்றும் ஏற்புரை காணொளி விருது குறிப்பு வாசகசாலை தமிழ்_இலக்கிய_விருதுகள் -2017 சிறந்த அறிமுக எழுத்தாளர்:  சுரேஷ்_பிரதீப் இந்த ஆண்டு வாசகசாலை விருதுகளின் சிறந்த அறிமுக எழுத்தாளர் பிரிவில் தனது “ஒளிர் நிழல்” நாவல் மற்றும் “நாயகிகள் நாயகர்கள்” சிறுகதைத் தொகுப்பிற்காக… Continue Reading →

வாசகசாலை விழா – 2017

விஷால் ராஜா தனது சிறுகதை தொகுப்பில் வாசகசாலை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பார். அதன் வழியாகவே வாசகசாலையை அறிந்தேன். வாசகசாலையின் முகநூல் பக்கத்தை இரண்டு மாதங்களாக பின் தொடர்கிறேன். என்னுடைய சிறுகதையான பிரைமரி காம்ப்ளக்ஸ் குறித்து வாசகசாலையில் விவாதிக்கப்பட்டதை பின்னர் அறிந்தேன். தொடர்ந்து நாவல்கள் சிறுகதைகள் சினிமா என தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வாசகர்களையும் கலை… Continue Reading →

ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி – நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி – 1)

வரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள் முக்கிய ஒப்பந்தங்கள் அந்நியப் படையெடுப்புகள் குறிப்பிட்ட இனக்குழுக்களின் எழுச்சிகள் வீழ்ச்சிகளாக நாம் வரலாற்றை நினைவு கூறுகிறோம். இந்த நினைவு கூறல் வழியாகத்தான் சமகால அரசியல் பிரக்ஞை கட்டமைக்கப்பட்டு அதிகாரத்திற்கான போட்டிகளில் பொருளாதார காரணிகளுக்கு சமமான ஒரு… Continue Reading →

ஒளிர்நிழல் விமர்சனம் – அனோஜன் பாலகிருஷ்ணன்

“ஒளிர் நிழல்” அளவில் சிறிய நாவல், எனினும் அடர்த்தியானது. சுரேஷ் சகவயதில் இருக்கும் எழுத்தாளர். இது இவரது முதல் நாவல். மிகத்தீவிரமான வாசிப்பிலும் இலக்கிய இயங்கு தளத்திலும் இருப்பவர். இவரது மனிதர்களின் உணர்வுகள் மீதான பார்வை என்பது சமகாலத்தில், சகவயதில் உள்ளவர்களாலோ அல்லது அதற்குச் சற்று மேலே உள்ள எழுத்தாளர்களாலோ இத்தனை நுட்பமாக எழுதப்படவில்லை என்றே… Continue Reading →

மணல்கடிகை – கடுகி நகரும் காலம்

(எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை நாவலுக்கு எழுதிய விமர்சனம்) வாசிப்பு பழக்கம் உடைய நண்பர்கள் பலர் இப்போது அறிமுகமாகத் தொடங்கி இருக்கின்றனர். சிக்கல் என்னவெனில் அவர்கள் ஏதேனுமொரு கருத்தியல் நிலைப்பாடு (மார்க்ஸியம் தலித்தியம் பெண்ணியம் தமிழியம்…இப்படி) கொண்டவர்களாக அது சார்ந்து வாசித்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே இலக்கியம் குறித்து விவாதிக்க நேரும் போதெல்லாம் தங்கள் கருத்தியலுக்கு அது முட்டு கொடுக்கிறதா… Continue Reading →

ஒளிர்நிழல் – எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்கள்

தனிப்பட்ட முறையில் எனக்கும் முகநூலிலும் ஒளிர்நிழல் நாவல் குறித்து வந்த எதிர்வினைகள் மற்றும்  விமர்சனங்களை தொகுத்துள்ளேன். நாவல் குறித்த பார்வையை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. அனிதா வணக்கம்.  சற்று முன்பு உங்கள் ஒளிர் நிழல் நாவலை நிறைவு செய்தேன். வெகு சிறப்பாக இருந்தது என்ற ஒற்றை வரி நிச்சயமாக போதாது. வாசகர் சொல்ல… Continue Reading →

உதிர்தல் – கதை

மிகச் சிறிதாக சுதா புன்னகைத்தாள். நிமிர்ந்து பார்க்கவில்லை எனினும் என்னால் உணர முடிந்தது. நிமிர்ந்த போது அம்முகத்தில் இருந்த புன்னகை அழுத்தி துடைக்கப்பட்டிருந்தது. “என்னடி” என்றேன். ஒன்றுமில்லை என தலையசைத்தாள். “சொல்ல வந்தத சொல்லு” “அம்மா கூப்டிச்சி” “என்னையா?” “என்ன” “போவேண்டியது தான” “பயமாருக்கு” “அடிக்கமாட்டா போ” “அடிச்சான்னா” “நீ என்னைய வந்து அடி” “செரி”… Continue Reading →

« Older posts Newer posts »

© 2026 — Powered by WordPress

Theme by Anders Noren — Up ↑