நதிக்கரை இலக்கிய வட்டம் திருவாரூர் நகரில் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை அல்லது என் கவனத்துக்கு வரவில்லை. திருவாரூர் மைய நூலகத்துடன் இணைந்து இலக்கிய விவாதங்களை நிகழ்த்தும் வகையில் நதிக்கரை என்ற பெயரில் இலக்கிய வட்டம் ஒன்றைத் தொடங்கலாம் என உத்தேசித்திருக்கிறேன். இப்போதைக்கு வட்டத்தின் ஒரேயொரு உறுப்பினன் நான் மட்டுமே🙂… Continue Reading →
பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து… Continue Reading →
வெகுதூரத்தில் கேட்கிறது குற்றத்தின் காலடிச்சத்தம் பூழியை எழுப்பாமல் மெல்லப் பதிகிறது குற்றத்தின் பாதம் சத்தமில்லாமல் ஆதுரத்துடன் கவ்வி துளி ரத்தமும் மண்சிந்தாமலுண்ணும் புலிபோல அத்தனை பரிவுடன் என்னை எடுத்துக் கொள்கிறது குற்றம் குற்றத்தின் தியான நிலையை அஞ்சுகிறேன் என்று சொல்லி அழுகிறார் கடவுள் குற்றத்தின் வேர்மணத்தை தவிர மற்றதனைத்தையும் வெறுப்பதாய் விலக்கம் காட்டுகிறாள் இறைவி குற்றங்களை… Continue Reading →
1 ஈரத்துண்டின் நுனிநூற்கற்றைகளில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ அந்த நுனி தான் நீரினை உற்பத்தி செய்வதுபோல. யாருக்கும் தெரியாமல் எட்டிப் பார்த்து பிறர் கண்படும் முன்னே சட்டென கடந்து மற்றோர் இடம் மறையும் சிறுவன் போல நீர்த்துளிகள் துண்டின் நுனியில் இருந்து எட்டிப்பார்த்த மறுகணமே மண்ணுக்கு வந்து கொண்டிருந்தன. தொடர்ச்சியாக நீர் சொட்டியதால்… Continue Reading →
அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு வணக்கம் ஒளிர் நிழல் படித்து முடித்தவுடன் மிகவும் சீண்டப்பட்டவனாகவே உணர்ந்தேன் – சரியான காரணம் எதுவும் இன்றி ஒரு கொந்தளிப்பான மனநிலையை அடைந்தேன் – சற்று சுதாரித்து iஒரு விதமாய் என் எண்ணங்களை தொகுத்து இந்த மின்னஞ்சல் எழுதத் தொடங்குகிறேன், இம்மின்னஞ்சலை தங்கள் நாவல் குறித்த விமர்சனமாகவும் , நாவல்… Continue Reading →
தந்தையரே உங்கள் கண்ணீரும் தியாகங்களும் எங்களுக்குப் புரிகிறது தந்தையரே உங்கள் தனிமையும் துயருங்கூட எங்கள் சிறிய இதயங்களுக்கு புரியவே செய்கிறது தந்தையரே உங்கள் மைந்தர் என்பதாலேயே உச்சியின் தகிப்பை உணரும் நடு ஆற்றினைப் போல உங்களை உணரவும் செய்கிறோம் இருந்தும் என்ன செய்ய உணர முடியுமே அன்றி போக்கிவிட முடியவில்லையே எங்களால் தந்தையரே நாங்கள் உங்களை… Continue Reading →
உங்களால் நம்ப முடிகிறதா இப்பெருவலைப் பின்னலில் நிகழ்ந்துவிட்ட ஆகச்சிறந்த சாத்தியங்களில் ஒன்று உங்கள் மனமென நம்பாவிட்டாலும் அது மாறிவிடுவதில்லையே அப்படியிருக்க நீங்கள் மகிழ்வதும் துயர்வதும் எதற்காக ? மறைப்பதும் மயங்குவதும் எதற்கஞ்சி? காத்துக்கொள்ள நினைப்பதும் கட்டியெழுப்ப நினைப்பதும் எதை? உங்கள் சிறுமையைக் கண்டு சிரிக்கிறேனே இன்னுமா இன்னுமா புரியவில்லை உங்களுக்கு மலைப்பாறைகள் கொடுக்கப்பட்டிருக்க மணற்பருக்களை பொறுக்கும்… Continue Reading →
பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன் வழியாக பருவடிவு கொள்ளாத துயரொன்று மனதை அலைகழித்தது. ஜெயமோகனை வாசிக்கையில் மனதில் கட்டுமானமொன்று சரிந்து விழுந்த அதிர்வை ஆழம் உணர்ந்தது. அவ்விடத்தில்… Continue Reading →
ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆணவக் கொலைகளின் காலம் என்ற நூலின் இறுதி அத்தியாயத்துக்கு அடுத்ததாக நான்கு பக்கங்கள் நீளும் ஒரு அட்டவணை இருக்கும். 2008-ல் இருந்து 2015 வரை ஜாதி மாறி திருமணம் செய்ததால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் அது. நீதி மன்றத்தில் பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே 47. தமிழக கிராமங்களின் உண்மையான முகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும் கொலை… Continue Reading →
சிறுகதை என்ற வடிவம் குறித்த புரிதலை தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசிப்பதன் வழியே அடைய முடியும் என நினைக்கிறேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தை ஒளியேற்றி நிறுத்த சிறுகதை வடிவம் ஏற்புடையது. நாவல் இதற்கு எதிரான வடிவம். ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது நம்முள் தங்குவதும் நாம் சிந்திப்பதும் பெரும்பாலும் ஆசிரியனால் முடிவு செய்யப்படுவது கிடையாது…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑